May

மே 26

மே 26

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான் (சங்.128:1).

குடும்ப வாழ்க்கை குதூகலமாயும் இருக்கலாம் அல்லது குழப்பமாயும் இருக்கலாம். சிலருக்கு அது பரலோகமாயும், வேறு சிலருக்கு அது நரகமாயும் இருக்கும். சங்கீதம் 128, தேவன் விரும்பும் ஒரு குடும்பம் எவ்வாறு இருக்க வேண்டும் எனக்கூறுகிறது. பாக்கியம் பெற்ற தாயாரையும், தகப்பனையும், பிள்ளைகளையும் பற்றி அது கூறுகிறது.

குடும்ப வாழ்வைக் கெடுக்கும் அபாயங்கள் பல உள்ளன. ஏனெனில் அங்கு பிள்ளைகளுக்கென எதையும் செய்ய பெற்றோர் தயாராக இருப்பர். ஆனால் கண்டித்து திருத்துவதில்லை. எடுத்துக்காட்டாக, தாவீது இராஜா தன் மகன் அப்சலோமைக் கண்டிக்காமல் வளர்த்த விதத்தினைக் கூறலாம். அப்சலோம் ஒழுக்கமற்றவனாயும், கலகக்காரனாயும் மாறிவிட்டான்.

பிளவுபட்ட குடும்பமாக ஈசாக்கின் குடும்பத்தைக் கூறலாம். ஈசாக்கு ஏசாவின்மேல் பட்சமாயிருந்தான். ரெபெக்காளோ யாக்கோபின்மேல் பட்சமாயிருந்தாள் (ஆதி.25:28). பெற்றோர் இவ்விதம் பாரபட்சமாக நடந்துகொண்டால் இவ்விரு பையன்களும் எப்படி உண்மையான சகோதரர்களாக நடந்துகொள்ள முடியும்? ஆவிக்குரிய வாழ்வில் பிளவுபட்ட குடும்பத்தில் பெற்றோர் ஒருவர் விசுவாசியாகவும் மற்றவர் அவிசுவாசியாகவும் இருப்பர். கிறிஸ்தவராக இருப்பவர், தன் வீட்டை முழுவதுமாக அவரிடம் கொண்டுவர வேண்டுமென விரும்பி, தன் பிள்ளைகளின் இரட்சிப்பிற்கெனவும், தன் வாழ்க்கைத்துணையின் இரட்சிப்பிற்கெனவும் முழு முயற்சி எடுப்பது இயல்பு (1.கொரி.7:10-16). இதன் விளைவு?

ஒழுங்கற்ற குடும்பத்திற்கு எடுத்துக்காட்டாக ஏலியின் குடும்பத்தைக் கூறலாம். அவனது பிள்ளைகள் கண்டிக்கப்படாமல் துன்மார்க்கராய் வளர்ந்தனர். இக்குடும்பம் அழியும்படிக்குத் தேவன் நியாயந்தீர்த்தார் (1.சாமு.3:11-14).

பிள்ளைகளைத் தேவனுக்கேற்ற முறையில் கண்டித்து வளர்ப்போமாகில் அவர்களது இரட்சிப்பைக் குறித்தும், பக்தியுள்ள வாழ்வைக் குறித்தும் நம்பிக்கையுடன் இருக்கலாம்.