May

மே 31

மே 31

துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில்……. தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான் (சங்.1:1-2).

பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன் என்று (3.யோ.2) யோவான் தன் நிருபத்தை வாசிக்கிறவர்களுக்கென ஜெபிப்பதைக் காணலாம். இப்படியான அன்பும் நறுமணமும், நிறைவுள்ள கனிகளை எங்கே பெறலாம்? நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரத்திற்கொப்பான இருதயத்தில், துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாதபடி மனுஷரிடத்தில் பெறலாம். இதையே எரேமியா 17:5-6 ல் மனுஷன்மேல் நம்பிக்கைவைத்து மாச்சத்தைத் தன் புயபலமாக்கிக்கொள்ளாதவன் எனக் கூறுகிறார். மனிதருடைய வார்த்தையை மதித்து, தேவனுடைய வழியை விட்டு விலகுகிறது வனாந்தரத்தின் வறட்சியான இடங்களில் தங்குவதற்கு ஒப்பாகும். துன்மார்க்கருடைய ஆலோசனைதான் நம் துன்பங்களுக்குக் காரணம். பாவிகளின் வழியில் செல்லும்போது நமது நேரத்தையும், உழைப்பையும் வீணாக்குகிறோம். பரியாசக்காரர் உட்காரும் இடம் நமக்குத் தடைகளை உண்டுபண்ணி துன்பத்தை விளைவிக்கும்.

அதே வேளையில், நம்பிக்கையுள்ள இருதயமும் கர்த்தருடைய வேதத்தில் பிரியப்படும். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். இதை யோசுவா தன் வாழ்வில் கண்டுகொண்டார். இந்த நியாயப்பிரமாணப் புஸ்தகம் உன் வாயைவிட்டுப் பிரியாதிருப்பதாக. இதில் எழுதியிருக்கிறவைகளின்படியெல்லாம் நீ செய்யக் கவனமாயிருக்கும்படி, இரவும் பகலும் அதைத் தியானித்துக் கொண்டிருப்பாயாக. அப்பொழுது நீ உன் வழியை வாய்க்கப்பண்ணுவாய். அப்பொழுது புத்திமானாயும் நடந்துகொள்ளுவாய் (யோசு.1:8).

கீழே ஆழமாக வேரூன்றி, மேலே அகன்று படர்ந்து, வளர்ந்த மரத்தைப்போன்ற ஆத்துமா பாக்கியமுள்ளது. அது பாதுகாப்பாயும், நிலைத்து நிற்கும். பலருக்கும் நிலையான பலனைக் கொடுக்கும்.