May

மே 30

மே 30

…. கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் பாக்கியவான்கள்… அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள். அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம் (வெளி 14:13).

மரணத்தைக் குறித்து அஞ்சுகிறீர்களா? மரணத்திற்கு அஞ்சுவது மக்களின் சுபாவ குணமாயிற்றே. அதிலிருந்து நாம் மெய்யான விடுதலையடைந்திருக்கவேண்டும். ஏனெனில், ஒரே தரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது (எபி.9:27) என வேதம் கூறுகிறது.

இரட்சிக்கப்படாதவர்களுக்கும் கிறிஸ்துவின்மூலம் வெளிப்பட்ட தேவனுடைய கிருபைக்குத் தூரமானவர்களுக்கும் மரணம் நம்பிக்கையின்மையையும் பயத்தையும் கொண்டுவரும். மனிதன் தான் சம்பாதித்த எல்லாவற்றையும் ஒரு குறுகிய காலத்திற்குள் விட்டுவிட்டு, இதற்குமுன்பு சென்றிராத ஒரு வழியில் சென்று நித்தியமாய் வாழவேண்டும் என்பது யாவருக்கும் நியமிக்கப்பட்டதே.

மரணத்திற்கு அஞ்சுகிறீர்களா? நானும்கூட இதற்குப் பயந்தேன். ஆனால் அந்தப் பயம் அதிக நேரம் நீடித்திருக்கவில்லை. ஏனெனில் மனந்திரும்பி ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை என் இரட்சகராக ஏற்றுக்கொண்டேன். என் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிச்சயத்தைப் பெற்றுக்கொண்டேன். ஒரு பதிய வாழ்வை – நித்திய வாழ்வைக் கண்டடைந்தேன். இதைத்தான் இயேசு கிறிஸ்து, என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் ஆக்கினதை; தீர்ப்புக்குட்படாமல், மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்ற மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் (யோ.5:24) எனக் கூறியுள்ளார்.

ஆக்கினைத்தீர்ப்பு இல்லையெனில் விசுவாசமுள்ள ஆத்துமாவே மரணத்தைக் குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் நீ அஞ்ச வேண்டியதென்ன?