November

நம்பிக்கையின் கரம்

2023 நவம்பர் 11 (வேத பகுதி: 1 சாமுவேல் 19,11 முதல் 17 வரை) “மீகாள் தாவீதை ஜன்னல்வழியாய் இறக்கிவிட்டாள்; அவன் தப்பி ஓடிப்போனான்” (வசனம் 12). சவுலின் மகன் யோனத்தான் நண்பன் என்ற முறையில் தாவீதுக்கு உதவினான். சவுலின் மகள் மீகாள் தன் கணவன் என்ற முறையில் இப்பொழுது தாவீதுக்கு உதவுகிறாள். தந்தையா? அல்லது நண்பனா? என்று வந்தபோது, தவறே செய்யாத தாவீதின் பக்கம் யோனத்தான் நின்றான். தந்தையா? அல்லது கணவனா? என்று வந்தபோது, மீகாள்…

November

முரண்பாடுகள்

2023 நவம்பர் 10 (வேத பகுதி: 1 சாமுவேல் 19,4 முதல் 10 வரை) “சவுல் யோனத்தானுடைய சொல்லைக் கேட்டு: அவன் கொலைசெய்யப்படுவதில்லை என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு ஆணையிட்டான்” (வசனம் 6). யோனத்தான் தன் தந்தையின் திட்டத்தை நண்பன் தாவீதுக்கு அறிவித்தது மட்டுமின்றி, அவனைக் காப்பாற்றவும் முன்வந்தான். தந்தையின் எதிரியைக் குறித்து தந்தையிடமே பேசுவதற்கு தைரியமும் மனதும் வேண்டும். பல நேரங்களில் நாம் முகம் பார்த்தும், வேண்டியவர் வேண்டாதவர் பார்த்தும் உதவிசெய்யும்படி பிரயாசப்படுவோம். யோனத்தான் அப்படியில்லாதவாறு, தாவீதின்…

November

மெய் அன்பு

2023 நவம்பர் 9 (வேத பகுதி: 1 சாமுவேல் 19,1 முதல் 3 வரை) “சவுலின் குமாரனாகிய யோனத்தானோ, தாவீதின்மேல் மிகவும் பிரியமாயிருந்தான்” (வசனம் 2). தாவீதின் “பேர் மிகவும் கனம்பெற்றது” (வசனம் 30) என்று முந்தின அதிகாரம் முடிவுற்றது. ஆனால் இந்த அதிகாரமோ “தாவீதைக் கொன்றுபோடும்படிக்கு, சவுல் தன் குமாரனாகிய யோனத்தானோடும் தன் ஊழியக்காரர் எல்லாரோடும் பேசினான்” (வசனம் 1) என்று தொடங்குகிறது. எவ்வளவு பெரிய முரண்பாடு இது. கர்த்தருக்குள்ளாக நாம் எவ்வளவு வளருகிறோமோ அவ்வளவாய்…

November

இறையாண்மையின் தேவன்

2023 நவம்பர் 8 (வேத பகுதி: 1 சாமுவேல் 18,20 முதல் 30 வரை) “பின்பு சவுல் தன் ஊழியக்காரரைப் பார்த்து: நீங்கள் தாவீதோடே இரகசியமாய்ப் பேசி: இதோ, ராஜா உன்மேல் பிரியமாயிருக்கிறார்” (வசனம் 22). பொல்லாத ராஜாவாகிய சவுலுக்கு மற்றொரு வாய்ப்பு தன் மகள் மீகாளின் மூலமாகக் கிடைத்தது. மீகாள் தாவீதை நேசித்தாள். இந்தச் செய்தி சவுலுக்கு அறிவிக்கப்பட்டபோது, தன்னுடைய மகளின் அன்பையும்கூட தன் சுயநலத்துக்காகப் பயன்படுத்தத் திட்டமிட்டான். மீகாளைத் திருமணம் செய்து தருகிறேன் என்று…

November

சூழ்ச்சிக்குத் தப்புதல்

2023 நவம்பர் 7 (வேத பகுதி: 1 சாமுவேல் 18,17 முதல் 19 வரை) “என் கை அல்ல, பெலிஸ்தரின் கையே அவன்மேல் விழட்டும் என்று சவுல் நினைத்துக்கொண்டு, சவுல் தாவீதை நோக்கி: இதோ, என் மூத்த குமாரத்தியாகிய மேராவை உனக்கு மனைவியாகக் கொடுப்பேன் …  என்றான்” (வசனம் 17). கோலியாத்தைக் கொன்றவனுக்கு என் மகளை மனைவியாகத் தருவேன் என்று ஏற்கனவே சவுல் வாக்குறுதி அளித்திருந்தான் (1 சாமுவேல்  17,25). ஆயினும் அதிலிருந்து பின்வாங்கிவிட்டான். இப்பொழுது மீண்டுமாக,…

November

பயமும் கலக்கமும்

2023 நவம்பர் 6 (வேத பகுதி: 1 சாமுவேல் 18,10 முதல் 16 வரை) “கர்த்தர் தாவீதோடேகூட இருக்கிறார் என்றும் தன்னை விட்டு விலகிப்போனார் என்றும், சவுல் கண்டு, தாவீதுக்குப் பயந்து…” (வசனம் 12). “கர்த்தர் தாவீதோடேகூட இருக்கிறார்” என்று அறிந்தவுடன் சவுல் பயந்து, குழப்பமடைந்தார்.  கோலியாத்தைத் தோற்கடித்தவன் தன்னையும் ஒரு நாள் தோற்கடிக்க மாட்டான் என்பது என்ன நிச்சயம் என்று சவுல் சிந்தித்திருக்கலாம். மேலும் சவுல் தனக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை எல்லா நிலையிலும் புத்திசாலித்தனமாய் செய்தான்…

November

பொறாமையோ எலும்புருக்கி

2023 நவம்பர் 5 (வேத பகுதி: 1 சாமுவேல் 18,6 முதல் 9 வரை) “அந்த ஸ்திரீகள் ஆடிப்பாடுகையில்: சவுல் கொன்றது ஆயிரம், தாவீது கொன்றது பதினாயிரம் என்று முறைமுறையாகப் பாடினார்கள்” (வசனம் 7). பெலிஸ்தியர் மீதான வெற்றி இஸ்ரவேல் மக்களுக்கு ஒரு கொண்டாட்டமாக மாறிப்போனது. சவுல் அரசருக்கு சென்றவிடமெல்லாம் மரியாதை செய்யப்பட்டது. சவுல் ஏற்கனவே சுயவிளம்பரம் தேடிக்கொள்கிற ஆள். இந்தக் காரியங்கள் அவனுடைய பெருமைக்குத் அதிக உணவளித்தன. வருந்தத்தக்க காரியம் என்னவெனில், வெற்றிப்பாடலில் தாவீதின் பெயர்…

November

கண்ணும் கருத்துமாய்

2023 நவம்பர் 4 (வேத பகுதி: 1 சாமுவேல் 18,5) “தாவீது சவுல் தன்னை அனுப்புகிற எவ்விடத்திற்கும் போய், புத்தியாய்க் காரியத்தை நடப்பித்ததினால், சவுல் அவனை யுத்தமனுஷரின்மேல் அதிகாரியாக்கினான்” (வசனம் 5). தாவீது, சவுல் தன்னை அனுப்பிய இடங்களிலெல்லாம் புறப்பட்டுச் சென்று ஞானமாய்ச் செயல்பட்டான். இது அவனுடைய பதவி உயர்வுக்கு வழிவகுத்தது. போர்வீரர்களுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டான். இது மட்டுமின்றி, சவுலின் அரண்மனையிலுள்ள வேலைக்காரர்களுக்கும் மனதுக்குப் பிடித்த நபராக தாவீது மாறினான். மேய்ப்பனாக பெத்லெகேம் காடுகளில் தந்தைக்குக் கீழ்ப்படிந்து…

November

தேவனின் சுயதியாகம்

2023 நவம்பர் 3 (வேத பகுதி: 1 சாமுவேல் 18,1 முதல் 4 வரை) “யோனத்தானுடைய ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடே ஒன்றாய் இசைந்திருந்தது; யோனத்தான் அவனைத் தன் உயிரைப்போலச் சிநேகித்தான்” (வசனம் 1). தந்தையைப் போல தனயன் என்னும் பழமொழியைப் பயன்படுத்துவதற்கு பொருத்தமில்லாதவன் இந்த யோனத்தான். இவன் ஒரு சிறந்த போர்வீரன்.  ஒரு தலைவனாக முன்சென்று இஸ்ரவேல் மக்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தவன். போர் வீரர்கள் அனைவரும் குகைகளில் ஒளிந்துகொண்டபோது, எல்லா முரண்பாடுகளுக்கும் எதிரான திறமான நிலைப்பாட்டை…

November

முற்றிலும் அழித்தல்

2023 நவம்பர் 2 (வேத பகுதி: 1 சாமுவேல் 17,50 முதல் 58 வரை) “தாவீது பெலிஸ்தனண்டையில் ஓடி அவன்மேல் நின்று, அவன் பட்டயத்தை எடுத்து, … அவனைக் கொன்று அதினாலே அவன் தலையை வெட்டிப்போட்டான்” (வசனம் 51). தாவீது கோலியாத்தின் தலையை வெட்டி எடுத்ததன் வாயிலாக அவனுடைய சாவை உறுதிப்படுத்தினான். அவன் முற்றிலும் அழிக்கப்பட்டான். நம்முடைய ஆவிக்குரிய எதிரிக்கு எதிரான வெற்றியை மட்டும் நாம் பெற்றால் போதாது, அது மீண்டும் தலையெடுக்காதபடி முற்றிலுமாக அழிக்கப்பட வேண்டும்.…