தனிமையின் பாதையில்
2023 நவம்பர் 21 (வேத பகுதி: 1 சாமுவேல் 22,1) “தாவீது அவ்விடத்தைவிட்டுத் தப்பி, அதுல்லாம் என்னும் கெபிக்குப் போனான்” (வசனம் 1). தாவீது ராஜாவாய் அபிஷேகம் செய்யப்பட்டாலும் இப்பொழுது உயிர்தப்பி ஓட வேண்டிய சூழல் ஏற்பட்டது. நாம் நினைப்பதுபோல கர்த்தர் நினைப்பவர் அல்லர். அவருடைய வழிகள் ஆராய்ந்து முடியாதவைகள். தாவீது முற்றிலுமாகத் தன்னைச் சார்ந்துகொள்ளும்வரை அவர் அவனை விடுவதில்லை. அவன் பின்மாற்றத்திலிருந்து திரும்பி வரவேண்டியது அவசியம். எண்ணற்ற மக்களுக்குத் தகப்பனாயிருக்கும்படி கர்த்தர் ஆபிரகாமை அழைத்தார். ஆயினும்…