கிருபையின் மகத்துவம்
2023 மே 15 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 16,22 முதல் 30 வரை) “அவன் தலைமயிர் சிரைக்கப்பட்ட பின்பு மறுபடியும் முளைக்கத்தொடங்கியது” (வசனம் 22). கர்த்தருடைய சிட்சை என்பது ஒருவனுடைய வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அல்ல, அவனை மீண்டும் புதுப்பிக்கப்பட்ட வாழ்க்கைக்கு நேராகக் கொண்டுவந்து தன்னுடைய நோக்கத்துக்காகப் பயன்படுத்துவதற்குத்தான். “எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்” (எபிரெயர் 12,11) என்று புதிய…