தேவனின் நினைவுகள்
2023 அக்டோபர் 2 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,1 முதல் 2 வரை) “இஸ்ரவேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன்” (வசனம் 2). சவுல் அரசனாகப் பதவி ஏற்று ஆண்டுகள் பல ஓடிவிட்டன. அவனுடைய அரசாட்சி ஸ்திரத்தன்மை அடைந்துவிட்டது; செழிப்பும் செல்வாக்கும் பெருகிவிட்டது. இராணுவ பலமும் ஆயுத பலமும் அதிகரித்துவிட்டது. ஆயினும் கர்த்தருக்குள் அவன் ஏதாவது வளர்ந்திருக்கிறானா என்பதை அவர் அறிய விரும்பினார். இருதயத்தில் விசுவாசமிருந்தால் அது செயலில் காண்பிக்கப்பட…