October

மீண்டும் ஒரு வீழ்ச்சி

(வேதபகுதி: ஆதியாகமம் 9:18-29) “நோவா பயிரிடுகிறவனாகி, திராட்சத்தோட்டத்தை நாட்டினான், அவன் திராட்சரசத்தைக் குடித்து, வெறிகொண்டு, தன் கூடாரத்தில் வஸ்திரம் விலகிப் படுத்திருந்தான்” (வச. 20,21). பெருவெள்ளத்தின் அழிவிலிருந்து தேவ கிருபையால் காப்பாற்றப்பட்ட பிறகும், பாவத்துக்கு எதிரான தேவனின் மிகப் பெரிய தீர்ப்பைப் கண்ட பிறகும், ஒரு புதிய உலகத்துக்கான ஆளுகையைப் பெற்ற பிறகும், தேவனுடைய அன்பான உடன்படிக்கையைப் பெற்ற பிறகும், ஒரு துரதிஷ்டமான சம்பவம் நடக்கும் என்று யார்தான் எண்ணியிருப்பார்? இனிமேல் மனிதர்கள் எவ்விதப் பாவமும் செய்யமாட்டார்கள்…

October

உடன்படிக்கையின் அடையாளம்

(வேதபகுதி: ஆதியாகமம் 9:1-17) “நான் என் வில்லை மேகத்தில் வைத்தேன்; அது எனக்கும் பூமிக்கும் உண்டான உடன்படிக்கையின் அடையாளமாயிருக்கும்” (வச. 13). நோவாவும் அவனுடைய குடும்பமும் பெரு வெள்ளத்துக்குப் பிறகான புதிய உலகத்தில் பலுகிப் பெருகும்படி தேவன் அவர்களை ஆசீர்வதித்தார். பேழையில் வைத்துக் காப்பாற்றப்பட்ட உயிரினங்களுக்கு அவனையே அதிகாரியாக்கினார். ஆயினும் மீண்டும் பிரச்சினைகள் தோன்றாது என்பதல்ல இதன் பொருள். பூமி முழுவதிலும் ஏற்பட்ட பெருவெள்ளம் பாவத்தின் விளைவுகளையும், அதன் சுவடுகளையும் சுத்தமாக்கிவிட்டது என்பது உண்மைதான். ஆயினும் பெருவெள்ளத்தின்…

October

நன்றி கூறுதலின் சுகந்த வாசனை

(வேதபகுதி: ஆதியாகமம் 8:1-22) “சுகந்த வாசனையைக் கர்த்தர் முகர்ந்தார். அப்பொழுது கர்த்தர் இனி நான் மனுஷன் நிமித்தம் பூமியைச் சபிப்பதில்லை; … நான் இப்பொழுது செய்ததுபோல, இனி சகல ஜீவன்களையும் சங்கரிப்பதில்லை.” (வச. 21). நோவா பேழையை விட்டு வெளியேறிய பிறகு முதலாவது செய்த காரியம் கர்த்தருக்கு நன்றி செலுத்தியதாகும். இந்த மனிதனுக்கு தேவனைக் கனப்படுத்துவது என்றால் என்ன என்பது நன்றாகத் தெரியும். சுத்தமான சகல மிருகங்களிலும், சுத்தமான சகல பறவைகளிலும் சிலவற்றைத் தெரிந்துகொண்டு அவற்றைப் பலியிட்டு…

October

அழிவிலிருந்து பாதுகாப்பு

(வேதபகுதி: ஆதியாகமம் 7:1-24) “மனுஷர் முதல், மிருகங்கள், ஊரும் பிராணிகள், ஆகாயத்துப் பறவைகள் பரியந்தமும், பூமியின்மேல் இருந்த உயிருள்ள வஸ்துக்கள் யாவும் அழிந்து, அவைகள் பூமியில் இராதபடிக்கு நிக்கிரகமாயின; நோவாவும் அவனோடே பேழையிலிருந்த உயிர்களும் மாத்திரம் காக்கப்பட்டன” (வச. 23). தேவ கோபத்தின் விளைவு ஒரு பெருவெள்ளத்தில் முடிந்தது. நாற்பது நாள் இடைவிடாத மழை. பூமியின் ஊற்றுக் கண்களும், வானத்தின் மதகுகளும் திறந்து நீரைக் கொட்டித் தீர்த்தன. சகல உயிரினங்களும் அழிந்து போயின. 2015 -இல் மூன்று…

October

தேவனின் உடன்படிக்கை

(வேதபகுதி: ஆதியாகமம் 6:13-22) “ஆனாலும் உன்னுடனே என் உடன்படிக்கையை ஏற்படுத்துவேன்; நீயும், உன்னோடேகூட உன் குமாரரும், உன் மனைவியும், உன் குமாரரின் மனைவிகளும் பேழைக்குள் பிரவேசியுங்கள்” (வச. 18). தேவன் நோவாவை நீ ஒரு பேழையை உண்டுபண்ணி அதற்குள் செல்லுங்கள் என்று கட்டளையிட்டார். நோவா தேவனில் எந்த அளவுக்கு நம்பிக்கை கொண்டிருந்தான் என்பதற்கு அவன் உண்டுபண்ணிய இந்தப் பேழை அடையாளமாயிருக்கிறது. மழை பெய்யாத நாட்களில், வெள்ளத்தைக் கண்டிராத நாட்களில் விசுவாசத்தோடும் அதைச் செய்து முடித்தான். தேவன்மேல் வைக்கிற…

October

தேவனின் மனஸ்தாபமும் கிருபையும்

(வேதபகுதி: ஆதியாகமம் 6:1-12) “நோவாவுக்கோ, கர்த்தருடைய கண்களில் கிருபை கிடைத்தது” (வச. 8). வீழ்ந்துபோன மனித குலம் எப்போதும் தேவனுக்கு விரோதமாகவே சிந்திக்கிறது, செயல்படுகிறது. தேவன் ஆசையாய்ப் படைத்த இப்பூமியில் அவரால் உண்டாக்கப்பட்டவர்கள் தங்கள் தங்கள் ஆசையின்படியே நடந்துகொண்டார்கள். எனவே “கர்த்தர் மனஸ்தாபப்பட்டார்” (வச. 6). தேவனுடைய செயல்கள் எப்போதும் அன்பு நிறைந்ததாகவே இருக்கும். ஒரு நாணயத்துக்கு இரு பக்கங்கள் இருப்பதுபோல, அன்பும் கோபமும் தேவனுடைய இரு குணங்கள். குறுகிய எல்லையையும் அறிவாற்றலையும் பெற்றிருக்கிற நமக்கு இது…

October

ஆதாமின் வம்சவரலாறு

(வேதபகுதி: ஆதியாகமம் 5:1-32) “ஆதாம் உயிரோடிருந்த நாளெல்லாம் தொளாயிரத்து முப்பது வருஷம்; அவன் மரித்தான்” (வச. 5). “விசுவாசத்தின் தங்க இழை” என்று அழைக்கப்படுகிற தேவபக்தியுள்ள சந்ததியின், சுருக்கமான வரலாற்றை இந்தப் பகுதி நமக்கு அறிவிக்கிறது. வீழ்ச்சிக்குப் பிறகு வாக்குத்தத்தம் செய்யப்பட்ட “ஸ்திரீயின் வித்தாகிய” மேசியாவின் குடிவழிப்பட்டியல் இது. காயீனின் சந்ததியில் சொல்லப்பட்டுள்ளதுபோல, இவர்கள் இந்த உலக முன்னேற்றுத்துக்கோ, சமுதாயப் புரட்சிக்கோ ஏதும் செய்யவில்லை. மாறாக, ஆங்காங்கே அத்திபூத்தாற்போல் இவர்களுடைய விசுவாசச் செயல்கள் மட்டும் சுருக்கமாகச் சொல்லப்பட்டுள்ளது.…

October

இரு வழிகள்

(வேதபகுதி: ஆதியாகமம் 4:17-26) “சேத்துக்கும் ஒரு குமாரன் பிறந்தான்; அவனுக்கு ஏனோஸ் என்று பேரிட்டான்; அப்பொழுது மனுஷர் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொள்ள ஆரம்பித்தார்கள்” (வச. 26). படைப்பின் தொடக்கம் முதலே நாம் தெரிந்தெடுப்பதற்கு இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன என்பதை வேதம் நமக்குச் சுட்டிக்காட்டுகிறது. பெரும்பான்மையோர் செல்லக்கூடிய விசாலமான வழி. இவ்வழி பலருக்கும் வசதியாகவும், நல்லதாகவும் தோன்றுகிறது. தேவனின் துணையில்லாமல் வாழும் இவ்வாழ்க்கையின் வழி அழிவுக்கு நேராகக் நம்மைக் கொண்டுசெல்லும் என்பதில் சந்தேகமில்லை. மற்றொன்று ஒரு மனிதன்…

October

முதல் கொலை

(வேதபகுதி: ஆதியாகமம் 4:8-16) “கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனாகிய ஆபேல் எங்கே என்றார்; அதற்கு அவன்: நான்அறியேன்; என் சகோதரனுக்கு நான் காவலாளியோ என்றான்” (வச. 9). காயீன் தன் சகோதரனாகிய ஆபேலைக் கொலை செய்தான். மனித வரலாற்றில் நடந்த முதல் கொலை. மெய்யான விசுவாச மார்க்கத்துக்கும், பொய்யான கிரியை மதத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதல். அன்று முதல் இன்றுவரை தங்கள் விசவாசத்துக்காக உயிரைக் கொடுத்தோர் எண்ணற்றோர். “ஆபேலின் இரத்தம் முதல் பலிபீடத்துக்கும் தேவாலயத்துக்கும் நடுவே…

October

முதல் காணிக்கை

(வேதபகுதி: ஆதியாகமம் 3:1-7) “ஆபேலையும் அவன் காணிக்கையும் கர்த்தர் அங்கீகரித்தார்” (வச. 4). தேவன் தன்னுடைய காணிக்கையை நிராகரித்ததால் காயீன் கோபமடைந்தான், அவனுடைய முகநாடி வேறுபட்டது. கர்த்தர் தன் காணிக்கையை ஏற்றுக்கொள்வார் என்று எதிர்பார்த்தான். ஒருவேளை அவர் தன்னைப் பற்றிப் பெருமிதம் கொண்டு, மிகவும் மகிழ்ச்சியடைந்திருக்கலாம். ஆபேலின் காணிக்கையைப் பார்த்து இகழ்ந்திருக்கலாம். மந்தையின் ஆட்டுக் குட்டிகளைக் காட்டிலும், தான் கொண்டு வந்த பழங்களும், தானியங்களும் மிகவும் அழகாகவும், சுவையாகவும் இருப்பதாக அவர் உணர்ந்திருக்கலாம். ஆனால் ஆபேலின் காணிக்கையைக்…