June

கோராகின் எதிர்க்குரல்

(வேதபகுதி: எண்ணாகமம் 16:36-50) “(ஆரோன்) செத்தவர்களுக்கும் உயிரோடிருக்கிறவர்களுக்கும் நடுவே நின்றான்; அப்பொழுது வாதை நிறுத்தப்பட்டது” (வச. 48). இருவித தூபகலசங்கள்; ஒன்று தவறான நபர்களால் கையாளப்பட்ட கலசங்கள், மற்றொன்று உண்மையான ஆசாரியனால் பயன்படுத்தப்பட்ட கலசம். தூபகலசம் தூபம் காட்டுவதற்காக ஆசரிப்புக்கூடாரத்தில் பயன்படுத்தப்பட்டது. இது தேவனால் சுகந்த வாசனையாக ஏற்றுக் கொள்ளப்படுகிற கிறிஸ்துவின் மகிமைக்கு அடையாளமாயிருக்கிறது (யாத். 30:34-38). கோராகும் அவனைச் சேர்ந்தவர்களும் கர்த்தருடைய சமூகத்தில் தூபங்காட்டுவதற்காக பொறாமையால் கொண்டுவந்தார்கள். தவறான நபர்கள், தவறான கண்ணோட்டத்தில் தேவசமூகத்தில் வருவது…

June

கோராகின் எதிர்க்குரல்

(வேதபகுதி: எண்ணாகமம் 16:1-35) “பின்னும் மோசே கோராகை நோக்கி: லேவியின் புத்திரரே கேளுங்கள்; … அவன் உன்னையும் உன்னோடேகூட லேவியின் புத்திரராகிய எல்லாச் சகோதரரையும் சேரப்பண்ணினதும் (ஆசரிப்புக்கூடாரப் பணிக்காக), உங்களுக்கு அற்பகாரியமோ? இப்பொழுது ஆசாரியப்பட்டத்தையும் தேடுகிறீர்களோ?” (வச. 8,10). கோராகு ஒரு லேவியின் என்ற முறையில் ஆசரிப்புக்கூடார பணிவிடைக்கு அழைக்கப்பட்டவனாயிருந்தும், அதில் திருப்தியடையாமல் ஆசாரியப்பணியை விரும்பினான் (வச. 10). ஆரோன் குடும்பத்தாரை ஆசாரியப்பணிக்கும், லேவி கோத்திரத்தாரை ஆசரிப்புக்கூடாரப் பணிக்கும் அழைத்து நியமித்தவர் தேவனே. இது தேவனுடைய நியமங்களுக்கு…

June

நம்பிக்கையின் வாசல்

(வேதபகுதி: எண்ணாகமம் 15:1-41) “நீங்கள் குடியிருக்கும்படி நான் உங்களுக்குக் கொடுத்த தேசத்தில் போய்ச் சேர்ந்தபின்பு” (வச. 2). மக்களுடைய அவிசுவாசம், தேவனுடைய கோபம், அமலேக்கியரிடத்தில் தோல்வி ஆகிய இவை எல்லாவற்றுக்கும் அப்பாலும் தேவன் தம்முடைய கிருபையை விளங்கப்பண்ணுகிறார். தேவனுடைய திட்டங்கள் மக்களுடைய தோல்வியினால் பாதிக்கப்படுவதில்லை. நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்தில் நீங்கள் போய்ச் சேர்ந்தால் என்று தேவன் கூறவில்லை, மாறாக, “சேர்ந்த பின்பு” (வச.2) என்று கூறுகிறார். அவருடைய வாக்குறுதிகள் நம்முடைய அவிசுவாசத்தால் தாமதமாகலாம், ஆனால் எதுவும்…

June

விசுவாசம் ஒரு குருட்டு நம்பிக்கையல்ல

(வேதபகுதி: எண்ணாகமம் 14:26-45) “நீங்கள் தேசத்தைச் சுற்றிப்பார்த்த நாற்பது நாள் இலக்கத்தின்படியே, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு வருஷமாக, நீங்கள் நாற்பது வருஷம் உங்கள் அக்கிரமங்களைச் சுமந்து, என் உடன்படிக்கைக்கு வந்த மாறுதலைக் காண்பீர்கள்” (வச. 34). விசுவாசம் தேவனுடைய ஆசீர்வாதங்கள் என்னும் பொக்கிஷங்களின் பெட்டியைத் திறக்கும் சாவியாக இருக்கிறது. நாம் அவற்றை அனுபவிக்க வேண்டும் என்றால் அந்த சாவியைக் கொண்டு பெட்டியைத் திறக்க வேண்டும். சந்தேகப்படுகிற ஒருவரிடத்தில் விசுவாசம் என்னும் சாவி இருந்தாலும் பயனில்லை. இஸ்ரயேல் மக்களின்…

June

விசுவாசமுள்ள யோசுவாவும் காலேபும்

(வேதபகுதி: எண்ணாகமம் 14:13-25) “உமது கிருபையினுடைய மகத்துவத்தின்படியேயும், எகிப்தைவிட்டது முதல் இந்நாள் வரைக்கும் இந்த ஜனங்களுக்கு மன்னித்து வந்ததின்படியேயும், இந்த ஜனங்களின் அக்கிரமத்தை மன்னித்தருளும் என்றான்” (வச. 19). சில நாட்களுக்கு முன்னர்தான், இந்த மக்கள் எனக்குப் பாரமாயிருக்கிறார்கள், நான் ஒருவனாய் அதைச் சுமக்க முடியாது என்று தன்னுடைய அங்கலாய்ப்பை மோசே வெளிப்படுத்தினான் (அதி. 11). ஆனால் இப்பொழுதோ அதே மக்களுக்காக தேவனிடத்தில் மனதுருக்கத்துடன் மன்றாடுகிறான். மோசே மெய்யாகவே ஒரு நல்ல மேய்ப்பனுடைய இருதயத்தைக் கொண்டிருந்தான். அவன்…

June

தேவன் வெறுக்கும் அவிசுவாசம்

(வேதபகுதி: எண்ணாகமம் 14:1-12) “அப்பொழுது சபையார் எல்லாரும் கூக்குரலிட்டுப் புலம்பினார்கள்; ஜனங்கள் அன்று இராமுழுவதும் அழுதுகொண்டிருந்தார்கள்.” (வச. 1). ஒரு விசுவாசி தேவனை விசுவாசிக்காவிட்டால் என்ன நடக்கும்? அவிசுவாசம் துதியின் பாடலுக்குப் பதில் அழுகையையும், புலம்பலையும் விரக்தியையும் கொண்டுவரும். அது பின்நோக்கிப் பார்த்து எகிப்துக்குப் போகச் செய்யும். தேவனுடைய வல்லமையை சந்தேகிக்கச் செய்யும். இஸ்ரயேலர்கள் செங்கடலைக் கடந்தபோது பாடிய பாடல் இப்பொழுது எங்கே போயிற்று? கடந்த இரண்டு ஆண்டுகளாக தேவன் செய்த மகத்தான வல்லமையின் செயல்கள் எல்லாம்…

June

அவிசுவாசம் ஆசீர்வாதத்துக்கு எதிரி

(வேதபகுதி: எண்ணாகமம் 13:1-33) “நாம் போய் அந்த ஜனங்களோடே எதிர்க்க நம்மால் கூடாது; அவர்கள் நம்மைப் பார்க்கிலும் பலவான்கள் என்றார்கள்” (வச. 2). விசுவாசித்து நடவாமல் கண்டு நடப்பதே மனித மனதின் இயல்பு. கானான் நாட்டை உங்களுக்குக் கொடுப்பேன் என்று தேவன் வாக்களித்துவிட்டார். அது எப்படிப்பட்ட தேசம் என்பதையும் பல தடவை சொல்லிவிட்டார். அதைச் சுதந்தரித்துக்கொள்வதே அவர்களுடைய பொறுப்பு. எப்பொழுது தேவ வார்த்தையை நம்ப மறுக்கிறோமோ அப்பொழுது நாம் உலக வழியைத் தேடுவோம். கானான் நாட்டை வேவு…

June

புறங்கூறுதல் வேண்டாம்

(வேதபகுதி: எண்ணாகமம் 12:1-16) “கர்த்தர் மோசேயைக்கொண்டு மாத்திரம் பேசினாரோ, எங்களைக் கொண்டும் பேசினதில்லையோ என்றார்கள். கர்த்தர் அதைக் கேட்டார்” (வச. 2). ஒருவருடைய ஆவியின் கனியில் ஒன்றாகிய சாந்தகுணம் எப்பொழுது தெரியவரும்? தனக்கு எதிராகக் காரியங்கள் நடக்கும்போது மோசே தன்னுடைய சாந்தகுணத்தை வெளிப்படுத்தினான். எதிர்ப் பேசுவதற்கு நியாயமான காரணங்கள் இருந்தும் பொறுமையுடன் இருந்தான். மேலும் மக்களை வழிநடத்துகிற தலைவர்கள்மேல் பொறாமையால் ஏற்படும் எதிர்ப்புகளை கைக்கொள்வதற்கு மோசேயின் வழி நல்லதோர் எடுத்துக்காட்டாக இருக்கிறது. ஆரோனும் மிரியாமும் மோசேக்கு விரோதமாக…

June

முறுமுறுப்பும் அவிசுவாசமும்

(வேதபகுதி: எண்ணாகமம் 11:16-35) “அதற்குக் கர்த்தர் மோசேயை நோக்கி: கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று நீ இப்பொழுது காண்பாய் என்றார்” (வச. 23). தேவனுடைய மக்கள் ஆவிக்குரிய சிந்தையுடையவர்களாக இராமல் மாம்ச சிந்தையுடையவர்களாக இருந்தால் என்ன நடக்கும்? அவர்களை வழிநடத்தும் தலைவர்களையும் சோர்வுக்குள்ளாக்கும் என்ற துக்கமான செய்தியை இங்கே மோசேயின் வாயிலாகக் காண்கிறோம். இப்பொழுது மோசேயும் தேவனிடம் முறுமுறுக்கிறான், கோபங்கொள்கிறான். மோசே தன்னுடைய ஜெபத்தில், “நான்”, “எனக்கு”, “என்” என்ற வார்த்தைகளை…

June

இறைச்சிப் பிரியர்களின் முறுமுறுப்பு

(வேதபகுதி: எண்ணாகமம் 11:1-15) “இப்பொழுது நம்முடைய உள்ளம் வாடிப்போகிறது; இந்த மன்னாவைத் தவிர, நம்முடைய கண்களுக்கு முன்பாக வேறொன்றும் இல்லையே என்று சொன்னார்கள்” (வச. 6). நம்முடைய வாழ்க்கையிலும் பழைய நினைவுகளின் தாக்கம் ஏற்படுவது இயல்பு. ஆயினும் அவை கர்த்தருக்கு விரோதமான அங்கலாய்ப்பாக அமையவிடாமல் பார்த்துக்கொள்வது நல்லது. இந்த மக்களுக்கு எகிப்தில் சாப்பிட்ட உணவுப் பொருட்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன. துரதிஷ்டவசமாக அவர்கள் அங்கு அனுபவித்த கொடுமைகள், செங்கல் சூளையில் வாங்கிய அடிகள், கூலி தராமல் ஏமாற்றப்பட்ட…