August

முகங்கோணாமல் கொடுத்தல்

(வேதபகுதி: உபாகமம் 15:1-11) “தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை; ஆகையால் உன் தேசத்திலே சிறுமைப்பட்டவனும் எளியவனுமாகிய உன் சகோதரனுக்கு உன் கையைத் தாராளமாய்த் திறக்க வேண்டும் என்று நான் உனக்குக் கட்டளையிடுகிறேன்” (வச. 11). “தேசத்திலே எளியவர்கள் இல்லாதிருப்பதில்லை” (வச. 11) என்ற பழைய ஏற்பாட்டுக் கட்டளைக்கு ஏற்ப, “தரித்திரர்கள் எப்பொழும் உங்களிடத்தில் இருக்கிறார்கள்” (மத். 26:11) என்று இயேசு கிறிஸ்துவின் வார்த்தை, இன்றைக்கும் நாம் ஏழைய எளியவர்களை நினைத்துக்கொள்ள வேண்டும், அவர்களுக்கு உதாரத்துவமான உதவிகளைச் செய்ய வேண்டும்…

August

கொடுப்பதால் பெற்றுக்கொள்ளுதல்

(வேதபகுதி: உபாகமம் 14:22-29) “லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியினால், அவனும், உன் வாசல்களில் இருக்கிற பரதேசியும், திக்கற்றவனும் விதவையும் வந்து புசித்துத் திருப்தியடைவார்களாக; அப்பொழுது உன் கை செய்யும் வேலையிலெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன்னை ஆசீர்வதிப்பார்” (வச. 29). நம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியோடு இருப்பது எப்படி? இரு காரணங்களை யாக்கோபு முன்வைக்கிறார்: ஒன்று, உலகத்தால் கறைபடாதபடிக்கு தன்னைக் காத்துக்கொள்வது, அடுத்தது திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும்படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிப்பது.…

August

அடையாளத்தைப் பதித்தல்

(வேதபகுதி: உபாகமம் 14:1-21) “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பரிசுத்தமான ஜனங்கள்; பூமியின் மீதெங்குமுள்ள எல்லா ஜனங்களிலும் உங்களையே கர்த்தர் தமக்குச் சொந்தமான ஜனங்களாகத் தெரிந்துகொண்டார்” (வச. 2). இந்த உலகத்தில் நம்முடைய அடையாளம் என்ன? நாம் யாராக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நம்முடைய சிறப்பை நாம் அறிந்து கொண்டிருக்கிறோமா? “நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரின் பிள்ளைகள்” (வச. 1) என்று இஸ்ரயேல் மக்களைத் தேவன் அடையாளப்படுத்துகிறார். நாம் கிறிஸ்துவை விசுவாசிக்கும் போது தேவனுடைய பிள்ளைகளாக மாறுகிறோம் (யோவான்…

August

கள்ளப்போதனைகளுக்குத் தப்புதல்

(வேதபகுதி: உபாகமம் 13:1-18) “உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியாகிலும் சொப்பனக்காரனாகிலும் எழும்பி: நீங்கள் அறியாத வேறே தேவர்களைப் பின்பற்றி, அவர்களைச் சேவிப்போம் வாருங்கள் என்று சொல்லி, ஒரு அடையாளத்தையும் அற்புதத்தையும் காண்பிப்பேன் என்று குறிப்பாய்ச் சொன்னாலும், அவன் சொன்ன அடையாளமும் அற்புதமும் நடந்தாலும் அந்தத் தீர்க்கதரிசியாகிலும், அந்தச் சொப்பனக்காரனாகிலும் சொல்லுகிறவைகளைக் கேளாதிருப்பீர்களாக” (வச. 1-3). எல்லாக் காரியங்களுக்காகவும் அதாவது தங்கள் நம்பிக்கைக்காகவும், விசுவாசத்துக்காகவும், ஆவிக்குரிய வழிநடத்துதலுக்காகவும் எப்பொழுதும் அடையாளங்களையும் அற்புதங்களையும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிற மக்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளாலே ஆபத்திலே சிக்கிக்கொள்ள நேரிடும்…

August

தேவனுடைய முழுமையான ஆலோசனை

(வேதபகுதி: உபாகமம் 12:29-32) “நான் உனக்கு விதிக்கிற யாவையும் செய்யும்படி கவனமாயிரு; நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்” (வச. 20). தேவன் அருளிய வேதவாக்கியங்களுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பது முக்கியமானதே. ஆயினும் அதைக் காட்டிலும் முக்கியமான ஒன்று இங்கே வலியுறுத்தப்பட்டுள்ளது. வேதவாக்கியங்களைக் குறித்த ஒரு தெளிவான அளவீட்டைத் நமக்குத் தருகிறது. “நீ அதனோடே ஒன்றும் கூட்டவும் வேண்டாம், அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம்” என்பதே அது. வேதவாக்கியங்களின் அதிகாரத்தைக் குறித்துச்…

August

மகிழ்ச்சியுடன் புசித்தல்

(வேதபகுதி: உபாகமம் 12:17-28) “… நீ இறைச்சி புசிக்க ஆசைகொண்டு, இறைச்சி புசிப்பேன் என்பாயானால், நீ உன் இஷ்டப்படி இறைச்சி புசிக்கலாம்” (வச. 20). நாம் உண்ணும் உணவைக் குறித்தும் தேவன் அக்கரையுள்ளவராக இருக்கிறாரா? ஆம், நிச்சயமாகவே கரிசணையுடன் இருக்கிறார். நம்முடைய சிறிய காரியமானாலும், பெரிய காரியமானாலும் அவை எல்லாவற்றைக் குறித்தும் அவர் கவனம் செலுத்துகிறார். ஆயினும் நம்முடைய உடல் நலம், சுற்றுச் சூழல் ஆகியன கருதி நாமும் அதில் கவனமாயிருக்க வேண்டும். நாம் போஜனப் பிரியர்களாக…

August

கர்த்தருடைய சமூகத்தில் கூடிவருதல்

(வேதபகுதி: உபாகமம் 12:1-16) “உங்கள் தேவனாகிய கர்த்தர் தம்முடைய நாமம் விளங்கும்படி, உங்கள் சகல கோத்திரங்களிலும் தெரிந்துகொள்ளும் ஸ்தானமாகிய அவருடைய வாசஸ்தலத்தையே நாடி, அங்கே போய், … நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக” (வச. 5,7). இஸ்ரயேல் மக்களின் தனித்துவம் அவர்களுடைய ஆராதனையிலும் இருக்க வேண்டும் என்று கர்த்தர் கூறினார். கானானின் பூர்வகுடிமக்கள் பல கடவுள் கொள்கையுடையவர்கள், கண்ட இடமெல்லாம் பலியிட்டு, பூஜை செய்யும் பழக்கமுடையவர்கள் (வச. 13). ஆனால் இஸ்ரயேல் மக்களோ ஒரேயொரு இடத்திலேயே தேவனுக்குப்…

August

வசனத்தை மனதில் பதித்தல்

(வேதபகுதி: உபாகமம் 11:16-32) “நீங்கள் என் வார்த்தைகளை உங்கள் இருதயத்திலும் உங்கள் ஆத்துமாவிலும் பதித்து…” (வச. 19). தேவனுடைய வார்த்தைகளை நம்முடைய உள்ளங்களில் பதித்து வைக்க வேண்டும் என்பது அவருடைய கட்டளையாக இருக்கிறது. “நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்” என்று ஆண்டவர் இயேசு கிறிஸ்துவும் தம்முடைய சீடர்களிடத்தில் கூறினார். வேத வார்த்தைகள் வெறுமனே படிப்பதற்கும், ஆராய்ச்சி செய்வதற்கும் மட்டுமல்ல, அது நம்முடைய இருதயத்தில் பதித்துவைக்கப்பட்டு, வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது. வசனங்களால் நாம்…

August

பழையதும் புதியதும்

(வேதபகுதி: உபாகமம் 11:1-15) “நீ சுதந்தரிக்கப்போகிற தேசம் நீ விட்டு வந்த எகிப்து தேசத்தைப்போல இராது.” (வச. 10). தேவன் இஸ்ரயேல் மக்களுக்கு இரண்டு காரியங்களை முன்வைக்கிறார். ஒன்று, கடந்த காலத்தில் எகிப்திலிருந்து காப்பாற்றி விடுதலையளித்த கர்த்தர் செய்த மகத்துவமான கிரியைகளையெல்லாம நினைத்துக்கொள்வது (வச. 7), இரண்டு, கர்த்தர் அவர்களுக்கு முன்பாக வைத்திருக்கிற நல்ல ஆசீர்வாதங்களைச் சுதந்தரிக்கும்படி அவரையே சார்ந்துகொள்வது (வச. 9). இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியே வந்ததைப் போலவே நாமும் இந்த உலகத்திலிருந்து பிரித்து…

August

அன்பினால் கீழ்ப்படிதல்

(வேதபகுதி: உபாகமம் 10:12-22) “நான் இன்று உனக்குக் கற்பிக்கிற கர்த்தருடைய கற்பனைகளையும் அவருடைய கட்டளைகளையும் உனக்கு நன்மையுண்டாகும்படி கைக்கொள்ள வேண்டும் என்பதையே அல்லாமல், வேறே எதை உன் தேவனாகிய கர்த்தர் கேட்கிறார்” (வச. 13). தேவன் இஸ்ரயேல் மக்களிடத்தில் அன்றைக்கு என்ன எதிர்பார்த்தாரோ அதையே நம்மிடத்திலும் இன்று எதிர்பார்க்கிறார். கீழ்படிதலே நம்முடைய அனைத்து ஆசீர்வாதங்களுக்கும் ஊற்றாக இருக்கிறது. இவ்வுண்மை உபாகமப் புத்தகத்தில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளதன் வாயிலாக இதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுள்ளது. “எழுதினவைகளையே எழுதுவது எனக்கு வருத்தமல்ல,…