Exodus

உபத்திரவத்தினூடாக வளர்ச்சி

(வேதபகுதி: யாத்திராகமம் 1:9-14) “நாம் அவர்களைக் குறித்து ஒரு உபாயம் பண்ண வேண்டும்” (வச. 10). யோசேப்பை அறியாத அரசனின் உள்ளத்தில் தோன்றிய முதல் எண்ணம் பயம். போர் ஏற்பாட்டால், இஸ்ரவேலர் எதிரியோடு சேர்ந்துவிடுவாhர்கள் என்ற பயம். அவர்களுடைய ராணுவ வீரர்கள், அவர்கள் வைத்திருக்கிற போர் ரதங்கள், இன்னும் பல ஆயுதங்கள்; இவற்றின்மேல் அவர்களுக்கு நம்பிக்கையில்லை. தங்களுடைய பலவீனம், அவநம்பிக்கை, பயம் இவற்றை மறைக்க இஸ்ரவேலரைப் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். இன்றைக்கு உலகமெங்கும் கிறிஸ்தவர்களைக் எண்ணம் இப்படியானதாகவே இருக்கிறது.…

Exodus

அறியாமையின் இருள்

(வேதபகுதி: யாத்திராகமம் 1:1-8) “யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்திலே தோன்றினான்” (வச. 8). யாக்கோபும், அவனுடைய பிள்ளைகளும் கானான் நாட்டில் ஏற்பட்ட பஞ்சத்தினிமித்தம் எகிப்துக்குச் சென்றார்கள். இவனுடைய மகன் யோசேப்பு அங்கே அதிபதியாயிருந்தான். இந்த யோசேப்பைக் கொண்டு கர்த்தர் எகிப்தையும், சுற்றியிருந்த நாடுகளையும் பஞ்சத்தினின்று காப்பாற்றினார். யோசேப்பு உயிரோடிருந்த நாட்களிலும், அவனுக்குப் பின் அவனுடைய செயல்களை அறிந்த வரையிலும் யாக்கோபின் இனத்தார் அங்கே சுதந்தரமாக வாழ்ந்தார்கள். இப்பொழுது எகிப்தில் வேறொரு புதிய சாம்ராஜ்யம் உருவாகிறது.…

Exodus

தேவவாக்குறுதியின் உண்மைத்தன்மை

(வேத பகுதி: யாத்திராகமம் 1:1-7) இஸ்ரவேல் புத்திரர் மிகுதியும் பலுகி, ஏராளமாய்ப் பெருகிப் பலத்திருந்தார்கள்; தேசம் அவர்களால் நிறைந்தது. (யாத்திராகமம் 1:7) ஏழு எகிப்துக்கு போன இஸ்ரவேலுடைய அதாவது யாக்கோபுடைய குமாரருடைய பெயர்களுடன் யாத்திராகம புத்தகம் தொடங்குகிறது. 12 கோத்திர பிதாக்களின் பெயர்கள் வரிசையாக சொல்லப்பட்டுள்ளன இனிமேல் இந்த 12 நபர்களுடைய பெயர்களை அடிக்கடியாக படிக்க இருக்கிறோம். யாக்கோபும் அவனுடைய 12 குமாரரின் குடும்பங்களும் இந்த உலகத்தை குறித்த தேவனுடைய இரட்சிப்பின் பெரும் திட்டத்தை இன்றி அமையாத…

Genesis

மரணத்தின்மீது வெற்றி

2023 ஜனவரி 11 (வேத பகுதி: ஆதியாகமம் 50:1 முதல் 26 வரை) “தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, … ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும், யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்த தேசத்துக்குக் கொண்டுபோவார்” (வசனம் 24). ஒரு குடும்பத்தினுடைய அனைத்து முக்கியமான நிகழ்வுகளும் ஆதியாகம புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளன: பிறப்பு, திருமணம், மரணம். கடைசியாக இங்கே நாம் ஒரு பெரிய அடக்க ஆராதனையைக் காண்கிறோம். இது ஒரு சுழற்றி, நாமும் இந்தக் காரியங்களை கடந்து வரவேண்டி உள்ளது. எல்லாருக்கும் பொதுவானதாக இருக்கிற…

Genesis

யாக்கோபின் இறுதி விருப்பம்

2023 ஜனவரி 10 (வேத பகுதி: ஆதியாகமம் 49,29 முதல் 33 வரை)  “நான் என் ஜனத்தாரோடே சேர்க்கப்படப்போகிறேன்; ஏத்தியனான எப்பொரோனின் நிலத்திலுள்ள குகையிலே என்னை என் பிதாக்களண்டையிலே அடக்கம்பண்ணுங்கள் என்று கட்டளையிட்டு….” (வசனம் 29). ஆதியாகம புத்தகத்தில் ஆபிரகாமுக்கு அடுத்தபடியாக அதிகமான பகுதிகளில் இடம் பெற்ற ஒரு மாபெரும் தேவமனிதன் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. தாத்தா ஆபிரகாம், தந்தை ஈசாக்கு என்பவர்களோடு சேர்ந்து முற்பிதாக்களின் வரிசையில் வருகிற இந்த யாக்கோபு தன்னுடைய மரணத்துக்குப் பின் செய்ய…

Genesis

அவனவனுக்குரிய ஆசீர்வாதம்

2023 ஜனவரி 9 (வேத பகுதி: ஆதியாகமம் 49:1 முதல் 28 வரை)  “இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரத்தார்; அவர்களுடைய தகப்பன் ஆசீர்வதிக்கையில், அவர்களுக்குச் சொன்னது இதுதான்; அவனவனுக்குரிய ஆசீர்வாதம் சொல்லி அவனவனை ஆசீர்வதித்தான்” (வசனம் 28). “யாக்கோபு தன் குமாரரை அழைத்து; நீங்கள் கூடிவாருங்கள், கடைசி நாட்களில் உங்களுக்கு நேரிடும் காரியங்களை அறிவிப்பேன்” என்றான் (வசனம் 1). தேவனுடைய பள்ளியில் நூற்றி நாற்பத்தேழு ஆண்டுகள் கற்றுக்கொண்ட அனுபவம் மிக்க வயதுமுதிர்ந்த ஒரு தந்தையினுடைய வாக்குகள்…

Genesis

தேவனின் தத்துப் பிள்ளைகள்

(வேத பகுதி: ஆதியாகமம் 48:1 முதல் 22)  “… எப்பிராயீமும் மனாசேயும் என்னுடையவர்கள். … அவர்கள் தங்கள் தங்கள் சகோதரருடைய பேரால் அழைக்கப்பட்டு அவர்களுக்குரிய சுதந்தரத்தில் பங்குபெறுவார்கள்” (வசனம் 5,6). இந்தப் பகுதி, யோசேப்பின் இரண்டு குமாரர்களை யாக்கோபு தம்முடைய சொந்தப் பிள்ளைகளாக அங்கீகரித்த ஒரு தனித்துவமான சூழ்நிலையை நம் முன் கொண்டு வருகிறது. யாக்கோபு யோசேப்பை நோக்கி: “நான் உன்னிடத்தில் எகிப்துக்கு வரும்முன்னே உனக்கு எகிப்து தேசத்தில் பிறந்த உன் இரண்டு குமாரரும் என்னுடையவர்கள்; ரூபன்…

Genesis

நம்பிக்கையுள்ள வாழ்க்கை

(வேத பகுதி: ஆதியாகமம் 47,27 முதல் 31)  “நான் என் பிதாக்களோடே படுத்துக்கொள்ள வேண்டும்; ஆகையால், நீ என்னை எகிப்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், அவர்களை அடக்கம்பண்ணியிருக்கிற நிலத்திலே என்னையும் அடக்கம்பண்ணு என்றான்” (வசனம் 30). இஸ்ரவேலர் எகிப்து தேசத்துக்கு வந்து பதினேழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இங்கே இவர்கள், விவசாயம் செய்தார்கள், மக்கள் தொகையிலும் பலுகிப் பெருகினார்கள். பஞ்ச காலத்தில் காப்பாற்றுவதற்காக மட்டுமல்ல, ஒரு நாடாக இருப்பதற்கு தகுதியாகும்படிக்கு மக்கள் தொகை அதிகரிக்கும்படியாகவும் தேவன் அவர்களை எகிப்துக்கு அழைத்து வந்தார்.…

Genesis

அனைத்தும் கிறிஸ்துவுக்கே

(வேத பகுதி: ஆதியாகமம் 47:13 முதல் 26)  “அந்த வருஷம் முடிந்தபின், மறுவருஷத்திலே அவர்கள் அவனிடத்தில் வந்து: பணமும் செலவழிந்து போயிற்று; எங்கள் ஆடுமாடு முதலானவைகளும் எங்கள் ஆண்டவனைச் சேர்ந்தது; எங்கள் சரீரமும் நிலமுமே ஒழிய, எங்கள் ஆண்டவனுக்கு முன்பாக மீதியானது ஒன்றும் இல்லை” (வசனம்  18). பஞ்ச காலத்தில் யோசேப்பின் அணுகுமுறை முற்றிலும் வேறுபட்டதாயிருந்தது. அவன் படிப்படியாக எகிப்து தேசத்தின் அனைத்துச் சொத்துகளையும், மக்களையும் தன்னுடைய அதிகாரத்துக்குக்கீழ் கொண்டுவந்தான். முதலாவது மக்கள் பணத்துக்காக தானியம் வாங்கினார்கள்,…

Genesis

யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தல்

(வேத பகுதி: ஆதியாகமம் 47:1 முதல் 12)  “யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்” (வசனம்  7) “யாக்கோபு பார்வோனை ஆசீர்வதித்தான்” என்ற வசனம் நம்மைச் சிந்திக்க வைக்கக் கூடியதும், ஆச்சயரிப்பட வைக்கக்கூடியதுமாய் இருக்கிறது. மேய்ப்பனான யாக்கோபு, அந்தக் காலத்தில், நாகரீகம் வளர்ந்ததும், உலகின் மாபெரும் சக்திவாய்ந்த சக்கரவர்த்தி ஒருவனைச் சந்தித்து, அவனை ஆசீர்வதித்தான். பெரும்பாலும் இதற்கு நேர்மாறான ஒன்றையே நாம் எதிர்பார்ப்போம், நாம் தலைவர்களால் ஆசீர்வதிக்கப்பட வேண்டும் என்றே எதிர்பார்ப்போம். பார்வோன் யாக்கோபை ஆசீர்வதித்தால் என்ன நடந்திருக்கும்? அவனிடமிருக்கும்…