December

பாடுகளில் பரமசந்தோஷம்

(வேதபகுதி: ஆதியாகமம் 39:1-23) “கர்த்தர் யோசேப்போடே இருந்தார்” (வச. 2). யோசேப்பை விலைகொடுத்து வாங்கிய இஸ்மவேலர் அவனை எகிப்து நாட்டின் தலையாரிகளுக்கு அதிபதியான போத்திபார் என்பவனிடத்தில் விற்றார்கள். யோசேப்பின் பலவண்ண அங்கி உரியப்பட்டது. இப்பொழுது ஒரு வேலைக்காரனுக்குரிய ஆடையை அணிந்திருக்கிறான். வேலை என்றால் என்னவென்பதை தேவன் அவனுக்குக் கற்றுக்கொடுக்கிறார். தாழ்மையையும், கீழ்ப்படிதலின் முக்கியத்துவத்தையும் இந்த வழியில்தான் தேவன் நமக்குக் கற்றுக்கொடுக்கிறார். “இளைஞரே மூப்பருக்குக் கீழ்ப்படியுங்கள்; நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்” என்று பேதுரு ஆலோசனை கூறுகிறார்.…

December

கிருபையைப் பெற்ற தாமார்

(வேதபகுதி: ஆதியாகமம் 38:1-30) “யூதா அவைகளைப் பார்த்தறிந்து: என்னிலும் அவள் (தாமார்) நீதியுள்ளவள்; அவளை என் குமாரனாகிய சேலாவுக்கு கொடாமற்போனேனே என்றான்” (வச. 26). யூதாவின் வாயிலாகத் தாமார் நமக்கு அறிமுகமாகிறாள். யூதா தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து சுயாதீனமாக வாழச் செல்கிறான். தனக்கும், தன்னுடைய மகன்களுக்கும் கானானியப் பெண்களை வாழ்க்கைத் துணையாகத் தேடிக்கொள்கிறான். யூதாவின் குடும்பத்தில், வாக்குத்தத்தத்துக்குச் சொந்தமானவர்களோ கர்த்தருடைய பார்வையில் பொல்லாதவர்களாய் நடந்துகொண்டிருக்க, புறஇனப் பெண்ணான தாமாரோ தனக்குக் கிடைக்கப்பட்ட வெளிச்சத்தில் நீதியுள்ளவளாக விளங்கினாள்.…

December

அவனை விற்றுவிடுவோம்

(வேதபகுதி: ஆதியாகமம் 37:18-43) “அவர்கள் அந்தக் குழியிலிருந்து யோசேப்பைத் தூக்கியெடுத்து, அவனை இஸ்மவேலர் கையில் இருபது வெள்ளிக்காசுக்கு விற்றுப்போட்டார்கள்” (வச. 8). யோசேப்பு தனது சகோதரர்களைச் சந்தித்து நலம் விசாரிக்கும்படி அவரது தந்தையால் அனுப்பப்பட்டார். இது ஓர் அன்பின் பணியாக இருந்தது. ஆனால் அவனுடைய சகோதரர்களோ அவனை வெகு தொலைவில் வரும்போதே பார்த்து, அவனைக் கொல்லத் திட்டமிட்டனர். ஏனெனில் யோசேப்பின் கனவு மற்றும் அதனால் அவனுக்கு ஏற்பட்ட பெருமை அவர்களை வெறுப்பால் நிரப்பியிருந்தது. திராட்சைத் தோட்டத்தை உண்டாக்கி,…

December

யாக்கோபின் வரலாறு

(வேதபகுதி: ஆதியாகமம் 37:1-17) “இஸ்ரவேலின் முதிர்வயதிலே யோசேப்புத் தனக்குப் பிறந்ததினால், இஸ்ரவேல் தன் குமாரர் எல்லாரிலும் அவனை அதிகமாய் நேசித்து, அவனுக்குப் பலவருணமான அங்கியைச் செய்வித்தான்.” (வச. 3). யாக்கோபினுடைய சந்ததியினுடைய வரலாறு இங்கே யோசேப்புடன் தொடங்குகிறது. தேவனுடைய இறையாண்மைக்கும் ஆளுகைக்கும் கீழாக நடைபெற்ற ஓர் அற்புதமான ஆனால் சோகமும் சந்தோஷமும் நிறைந்த கதை யோசேப்பினுடையது. பழைய ஏற்பாடு கூறும் பரிசுத்தவான்களில் யோசேப்பைப் போல இயேசு கிறிஸ்துவை இவ்வளவு நெருக்கமாகப் பிரதிபலிக்கும் நபர் வேறு எவரும் இல்லை…

December

ஏதோமியரின் வரலாறு

(வேதபகுதி: ஆதியாகமம் 36:1-43) “ஆதலால் ஏசா சேயீர் மலையில் குடியேறினான்; ஏசாவுக்கு ஏதோம் என்றும் பெயர்” (வச. 8). ஏமாற்றுக்காரனாக இருந்த யாக்கோபு தேவனுடைய பிரபு என்னும் பொருளில் இஸ்ரயேல் என்று பெயர் மாற்றப்பட்டான். ஆனால் இதற்கு முரண்பட்ட வகையில் ஏசாவின் பெயர் ஏதோம் என்றாயிற்று. அவனுடைய சந்ததியார் ஏதோமியர் என்று அழைக்கப்பட்டனர். ஏதோம் என்றால் சிவப்பு. ஒரு கோப்பை சிவப்பான கூழுக்காகத் தலைமகன் என்னும் சிறப்புரிமையை விற்றுப்போட்டதன் நினைவாக ஏசா இவ்வாறு அழைக்கப்படலானான். காலங்காலமாக ஓர்…

December

நான்கு கல்லறைகள்

(வேதபகுதி: ஆதியாகமம் 35:1-29) “தேவன் யாக்கோபை நோக்கி: நீ எழுந்து பெத்தேலுக்குப்போய் அங்கே குடியிருந்து… அங்கே ஒரு பலிபீடத்தை உண்டாக்கு என்றார்” (வச. 2). தேவன், யாக்கோபை பெத்தேலுக்குச் செல்லும்படி கூறினார். தன்னுடைய பிள்ளைகளால் சாட்சியை இழந்து, சுற்றத்தாரின் கோபத்துக்கு ஆளாகி நிற்கும் யாக்கோபுக்கு, முன்னமே தனக்குத் தரிசனமாகி வாக்குறுதியைப் பெற்ற இடத்துக்குத் திரும்பிச் சென்று தன்னைப் புதுப்பித்துக்கொள்வதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை. தான் மட்டுமின்றி தன் குடும்பத்தார் அனைவரையும் கர்த்தருக்குள்ளாக மாற்ற வேண்டும்…

December

பிள்ளைகளின் சாட்சி

(வேதபகுதி: ஆதியாகமம் 34:1-31) “அப்பொழுது யாக்கோபு… இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள்” (வச. 30). ஒரு விசுவாசி தன்னுடைய புதிய மறுபிறப்பின் வாழ்க்கையை இந்த உலகத்தில் தொடர்ந்து சாட்சியுடன் தக்கவைத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமானது. அதுவும் பிள்ளைகளை இந்த உலகத்துடன் கலந்துவிடாமலும், பிரித்தெடுக்கப்பட்டவர்களாகவும் விசுவாசத்துக்குரியவர்களாகவும், பயபக்திக்குரியவர்களாகவும் வளர்ப்பது ஒரு சவால் நிறைந்த பணியாகவே இருக்கிறது. பிள்ளைகள் பெற்றோரை அன்றாடம் கவனிக்கிறார்கள். பெற்றோரின் செயல்கள் அவர்களிடத்தில் தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன. யாக்கோபு…

December

மாற்றத்தின் அடையாளம்

(வேதபகுதி: ஆதியாகமம் 33:1-20) “அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பெயரிட்டான்” (வச. 20). யாக்கோபு தேவனைச் சந்தித்தான்; இப்பொழுது இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தன் சகோதரனைச் சந்திக்கிறான். பாசம் மற்றும் உணர்வுகளின் நெகிழ்ச்சியை இந்தச் சந்திப்பில் காணமுடிகிறது. ஒரு புதிய பெயரைப் பெற்றுக்கொண்ட ஒரு மாற்றம் பெற்ற மனிதனாக, நானூறு பேரோடு வருகிற தன் அண்ணனைச் சந்திக்கிறான். யாக்கோபின் நடவடிக்கைகளை அன்றைய காலகட்டத்தில் நிலவிவந்த காலச்சார முறைகளோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்.…

December

பெனியேல்: சுயம் மரித்தல்

(வேதபகுதி: ஆதியாகமம் 32:13-32) “அவன் பெனியேலைக் கடந்துபோகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுளுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான்” (வச. 31). ஓர் அர்ப்பணித்தலின் ஜெபத்திற்குப் பிறகும், நாம் தேவனை நம்புவதைக் காட்டிலும் நம்முடைய சுய பெலனையும், அறிவையும் சார்ந்துகொள்கிறோம் என்பதற்கு யாக்கோபும் விதிவிலக்கல்ல. ஏசாவின் கைக்குத் தப்பவும், அவனுடைய முகத்தில் தயவுகிடைக்கவும், ஏசாவுக்கு வெகுமதிகளை அனுப்பினான், குடும்பத்தாரை இரவிலே யாப்போக்கு ஆற்றைக் கடக்கப்பண்ணினான். தன் சுயபெலத்தால் எவற்றையெல்லாம் செய்ய முடியுமோ அவையெல்லாவற்றையும் செய்தான். ஆயினும் இவற்றில் அவனுக்கு…

December

யாக்கோபின் ஜெபம்

(வேதபகுதி: ஆதியாகமம் 32:1-12) “யாக்கோபு பிரயாணம்பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்” (வச. 1). யாக்கோபு பிரயாணம்பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள் என்ற செய்தி யாக்கோபின் விசுவாசப் பாதையில் மற்றொரு முக்கியமான தருணமாக விளங்குகிறது. ஏற்கனவே லாபானுடன் தரிசனத்தில் தோன்றி, யாக்கோபைக் காப்பாற்றிய தேவன், இப்பொழுது அவனுடைய நம்பிக்கையை வலுப்படுத்தவும், தைரியப்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் ஏசாவைச் சந்திப்பதற்கு முன்னதாகவே தூதர்கள் அவனைச் சந்திக்கும்படி அனுப்புகிறார். அவன் தூதர்களை தூரத்தில் காணவில்லை, மாறாக, அவர்களை அருகருகே சந்தித்தான். காணாமற்போன இளையகுமாரன் திரும்பி…