December

எல்லை தாண்டாதிருக்க ஒப்பந்தம்

(வேதபகுதி: ஆதியாகமம் 31:22-55) “இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும்பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான்” (வச. 44). யாக்கோபு தனியொருவனாக ஆரானுக்கு வந்தான், இப்போது மனைவிகள், பிள்ளைகள், வேலையாட்கள் மற்றும் மிகப்பெரிய கால்நடைகள் ஆகியவற்றுடன் ஒரு செல்வந்தனாக, தன் மாமனாருக்குத் தெரியாமல் ஆரானைவிட்டுச் செல்கிறான். யாக்கோபின் இருபது ஆண்டுகள் படிப்பினையின் காலம் முடிவுக்கு வந்தது. ஆயினும் கர்த்தருக்கு முழுமையாக ஒப்புவிக்க வேண்டிய காரியம் மிச்சமிருந்தது. யாக்கோபின் பார்வையில் லாபான் ஓர் ஏமாற்றுக்காரன், லாபானின் பார்வையில் யாக்கோபு…

December

கர்த்தருடைய வேளைக்காக காத்திருத்தல்

(வேதபகுதி: ஆதியாகமம் 31:1-21) “கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார்” (வச. 3). நாம் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் இந்த உலகத்துக்குச் சொந்தமானவர்கள் அல்லர்.அல்லர். நாம் செல்ல வேண்டிய இடம் வேறு; இது நமக்கு நிரந்தரமானது அல்ல. நாம் இந்த உலகத்துக்கு நன்மை செய்தாலும் அது தொடர்ந்து நமக்கு ஒரு நல்ல நண்பனாக இராது. இந்த உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து, அந்நியர்களாகவும், பரதேசிகளாகவும்…

December

பொறுமையுள்ள ஆசிரியர்

(வேதபகுதி: ஆதியாகமம் 30:25-43) “நான் என் ஸ்தானத்திற்கும், என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும்” (வச. 25). ரெபெக்காளின் திட்டம் எவ்வளவு தவறானாது! அவள் யாக்கோபை ஏசாவின் கைக்குத் தப்பும்படி சிறிது நாட்களுக்குத் தன் சகோதரன் வீட்டுக்கு அனுப்பிவிட்டாள் (27:43-45). ஆனால் அங்கு நாட்கள் வருடங்களாக மாறின. யோசேப்பு பிறந்தவுடன் யாக்கோபு தன் குடும்பத்தைச் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தார். குறிப்பாக தனக்கு ஆபத்து விளைவிக்க எண்ணம் கொண்டிருக்கும் தன் சகோதரன் ஏசாவைச் சந்திக்க வேண்டும்.…

December

பிரச்சினைகளுக்கு நடுவிலும் தேவன்

(வேதபகுதி: ஆதியாகமம் 30:1-24) “தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிசொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்” (வச. 22). யாக்கோபு லேயாளை நேசித்தான், அவளைக் காட்டிலும் ராகேலை சற்று அதிகமாக நேசித்தான். கர்த்தர் ராகேலின் கர்ப்பத்தை அடைந்திருந்தபடியால் குழந்தை பெறத் தாமதமானது. மனித முயற்சிகள் அங்கே தலைதூக்கின. யாக்கோபின் வீடு ஒரு போர்க்களமாக மாறியது. இரண்டு உணர்ச்சிவசப்பட்ட பெண்கள் யாக்கோபின் பாசத்திற்காகச் சண்டையிட்டுக்கொண்டர். தாய்ப் பாசத்துக்கு அடிமையாகி ரெபேக்காளின் சொல் கேட்டு வளர்ந்த யாக்கோபின் வாழ்க்கையில், மேலும்…

December

அறுவடையின் காலம்

(வேதபகுதி: ஆதியாகமம் 29:15-35) “லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பதந்தரிக்கும்படி செய்தார்” (வச. 1). மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் (கலா. 6:7). இதுவரை யாக்கோபு தன்னுடைய சுயமுயற்சியில் எதைச் செய்தானோ அதை அறுவடை செய்வதற்குத் தயாராகிறான். தேவன் தம்முடைய ஆசீர்வாதங்களை அருளுவதற்கு முன்பாக மனிதர்களைக் தகுதிப்படுத்துகிறார். யாக்கோபின் வாழ்விலும் இது நடந்தது. “சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானயிருந்தும், அவன் சிறு பிள்ளையாயிருக்கும் காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை. தகப்பன் குறித்த காலம்…

December

தேவநடத்துதல்

(வேதபகுதி: ஆதியாகமம் 29:1-14) “யாக்கோபு பிரயாணம் பண்ணி, கீழ்த்திசையாரின் தேசத்தில் போய்ச் சேர்ந்தான்” (வச. 1). தேவனுடனான சந்திப்பின் பெலன் ஏறத்தாழ ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள பதான் அராமில் கொண்டுபோய் யாக்கோபை நிறுத்தியது. இடையில் எத்தனையோ இரவுகளை அவன் கடந்து வந்திருந்தான். ஆயினும் பெத்தேலில் எற்பட்ட முதல் சந்திப்பு அவனுடைய வாழ்க்கையில் முக்கியமானது. நம்முடைய மோட்சப் பயணத்துக்கு வலுச் சேர்க்கக்கூடியதும் இத்தகைய முதல் சந்திப்பே. அது தரிசனத்தோடும், கனவுகளோடும் நம்மை முன்னோக்கி நகர்த்துகிறது. “நீ போகிற…

December

தேவபிரசன்னத்தை உணருதல்

(வேதபகுதி: ஆதியாகமம் 28:1-22) “மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார்; இதை நான் அறியாதிருந்தேன் என்றான். … அந்த ஸ்தலத்துக்கு பெத்தேல் என்று பேரிட்டான்” (வச. 16,19). யாக்கோபு தன் உலகத் தந்தையின் வீட்டை விட்டு வெளியேறுகிறார்; பரம தந்தையோ தன்னுடைய வீட்டுக்கு நேராக அவனை நடத்துகிறார். யாக்கோபு தனிமையில் பயணித்தான்; ஆனால் எங்கும் வியாபித்திருக்கும் தேவன் அவனோடிருந்தார். தன்னுடைய வாழ்க்கைத் துணைக்கான பெருங்கனவுடனும், சகோதரனுடைய மிரட்டல் பயத்தின் நடுவிலும், தன்னுடைய எதிர்காலம் எப்படியிருக்கும் என்பதை அறியாதவனாகச்…

December

சூழ்ச்சியின் விளைவுகள்

(வேதபகுதி: ஆதியாகமம் 27:30-46) “ஏசா… மிகவும் மனங்கசந்து அழுது உரத்த சத்தமிட்டு அலறி, தன் தகப்பனை நோக்கி: என் தகப்பனே என்னை ஆசீர்வதியும் என்றான்” (வச. 34). ஏசா தன்னுடைய பிறப்புரிமையை விற்றான். இந்தப் பூமியில் இதனால் எனக்கு எந்தப் பயனுமில்லை என்று எண்ணியதால் அதை அலட்சியம் செய்தான். அவன் எதிர்கால இலக்கு அற்றவனாக இன்றைக்காக மட்டுமே வாழ்ந்தான். ஆகவே ஒரு சோகமான கதாபாத்திரமாக வேதம் அவனைச் சித்திரிக்கிறது. பல நேரங்களில் நாமும் கூட விரும்பினதைக் விடாடிப்பிடியாகக்…

December

மாம்சீக முயற்சிகள்

(வேதபகுதி: ஆதியாகமம் 27:1-29) “ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனபோது, … நான் முதிர்வயதானேன், என் மரணம் இன்ன நாளில் என்று அறியேன்” (வச. 1,2). ஆவியினால் ஆரம்பிக்கப்பட்டு இப்பொழுது மாம்சத்தின்மேல் நம்பிக்கை வைத்துப் போராடுகிற ஒரு செயலை ஈசாக்கின் குடும்பத்தில் காண்கிறோம். குடும்பத்தார் ஒவ்வொருவரும் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தை தங்களுடைய சொந்த வழியில், சரீர முயற்சியால் அடையப் போராடும் ஒரு துக்கமான நிகழ்வைக் காண்கிறோம். ஈசாக்கு ஏசாவின்மீதும், ரெபெக்காள் யாக்கோபின்மீதும் பாசம் வைத்தார்கள் (25:28). அந்தப்…

December

தொழுகையின் முக்கியத்துவம்

(வேதபகுதி: ஆதியாகமம் 26:23-35) “நிச்சயமாய்க் கர்த்தர் உம்மோடேகூட இருக்கிறார் என்று கண்டோம்” (வச. 28). ஈசாக்கு ரெகொபோத்திலிருந்து தன்னுடைய தந்தை ஆபிரகாம் கர்த்தரைத் தொழுதுகொண்ட இடமாகிய பெயெர்செபாவுக்குக் குடிபெயர்ந்தான். கர்த்தரால் ஆசீர்வதிக்கப்பட்ட மக்களின் அடுத்த நகர்வு அவரைத் தொழுதுகொள்வதாக இருக்க வேண்டும். ஈசாக்கின் எண்ணங்களைக் கர்த்தர் அறிந்துகொண்டார். உலக மக்களிடமிருந்து பாதுகாப்பு கர்த்தரின் கரத்திலேயே இருக்கிறது என்பதை ஈசாக்கும் அறிந்துகொண்டான். எந்த நாளில் ஈசாக்கு பெயெர்செபாவுக்குக் குடிபெயர்ந்தானோ அந்த நாளின் இரவிலேயே கர்த்தர் தரிசனமாகி அவனுடன் பேசினார்.…