March

விசுவாசிகளின் நீதியாயிருக்கிற கிறிஸ்து

(வேதபகுதி: யாத்திராகமம் 29:1-9) “அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி …” (வச. 5). ஆரோன் கிறிஸ்துவுக்கு நிழலாக இருக்கிறான். இங்கே ஆரோனும் அவனுடைய குமாரரும் இணைத்துச் சொல்லப்பட்டுள்ளனர். இயேசு கிறிஸ்துவும் நாமும் இணைந்தே என்றென்றைக்குமாக இருப்போம் என்பதற்கு இது நல்லதோர் அடையாளமாயிருக்கிறது. பரலோகத்திலுள்ள மகா பிரதான ஆசாரியரான கிறிஸ்துவுடனான உறவின் காரணமாக, விசுவாசிகள் தேவனுக்குத் துதி செலுத்துவதில் அவருடன் இணைந்திருக்கிறார்கள்.…

March

விசுவாசிகளோடு இணைந்திருக்கிற பிரதான ஆசாரியர்

(வேதபகுதி: யாத்திராகமம் 28:31-43; 39:22-31) “ஏபோத்தின் கீழ் அங்கியை முழுவதும் இளநீல நூலால் உண்டாக்கக்கடவாய்” (வச. 31). ஏபோத்துக்கு கீழாக அணியக்கூடிய அங்கியைக் குறித்து நாம் சிந்திப்போம். இது முழுவதும் ஒரே துணியால், ஒரே வண்ணத்தால் ஆனது. இளநீல நூலால் செய்யப்பட்டது. இது பிரதான ஆசாரியனின் பரலோகக் குணத்தை வெளிப்படுத்திக் காட்டுகிறது. ஆரோனின் சிரசின்மேல் ஊற்றப்பட்டு, அவனுடைய தாடிகளின் வழியாக அங்கியில் இறங்குகிற தைலத்துக்கு ஒப்பாக இருக்கிறது என சகோதரர்களின் ஒற்றுமையை சங்கீதக்காரன் வர்ணிக்கிறான் (சங். 133:1,22).…

March

நம்முடைய வழிகாட்டியாகிய கிறிஸ்து

(வேதபகுதி: யாத்திராகமம் 28:30) “நியாயவிதி மார்ப்பதக்கத்திலே ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகளை அவன் இருதயத்தின்மேல் இருக்க வேண்டும்” (வச. 30). மறைவானவைகள் நம்முடைய தேவனுக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்டவைகளோ, … நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியவைகள் (உபா. 29:29). புரிய ஏற்பாட்டின் பெரும்பாலான பகுதிகளை எழுதிய பவுலும், “இப்பொழுது நான் குறைந்த அறிவுள்ளவன், அப்பொழுது நான் அறியப்பட்டிருக்கிறபடியே அறிந்துகொள்வேன்” (1 கொரி. 13:12) என்று கூறுகிறார். இந்த ஊரீம் தும்மீம் என்பவற்றைப்…

March

நம்முடைய பாசமிக்க ஆண்டவர்

(வேதபகுதி: யாத்திராகமம் 28:15-30) “நியாயவிதி மார்ப்பதக்கத்தையும் விசித்திர வேலையாய்ச் செய்வாயாக” (வச. 15). ஆரோனின் ஆசாரிய உடையில் முக்கியமானதும், விலைமிகுந்ததுமான ஒன்று நியாயவிதி மார்ப்பதக்கம் ஆகும். இது கிறிஸ்துவின் இருதயத்தைப் படப்பிடித்துக் காட்டுகிற பழைய ஏற்பாட்டுச் சித்திரங்களில் ஒன்றாக இருக்கிறது. பலவண்ண நூல்களினால் பின்னல் வேலைபாட்டுடன் சதுர வடிவிலான ஒன்றான இது, பொன் வளையங்கள் மூலமாக ஏபோத்துடன் இணைக்கப்பட்டிருக்கும். மேலும் இஸ்ரயேல் கோத்திரங்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட பன்னிரண்டுவிதமான கற்களும், ஊரீம், தும்மீம் என்ற கற்களும் மாப்பதக்கதில் பதிக்கப்பட்டு…

March

“நம்முடைய பெலனாகிய கிறிஸ்து”

(வேத பகுதி : யாத்திராகமம் 28: 4-14) ஏபோத்தைப் பொன்னினாலும் இள நீல நூலாலும் இரத்தாம்பர நூலாலும் சிவப்பு நூலாலும் திரித்த மெல்லிய பஞ்சு நூலாலும் விசித்திர வேலையாய்ச் செய்யக்கடவர்கள். (வசனம் 6) ஆடைகள் உடலை மறைப்பதற்காக மட்டுமின்றி அழகுக்காகவும், அதிகாரத்துக்காகவும்அடையாளத்துக்காகவும் அணியப்படுகின்றன. ஒரு காவல்துறை உயர் அதிகாரியின் சீருடையிலோ அல்லது இராணுவ அதிகாரியின் சீருடையிலோ பலவித குறியீட்டுச் சின்னங்கள் அமைந்திருக்கும். அவை ஒவ்வொன்றும் ஒரு பொருளையும், செய்திகளையும் தெரிவிக்கின்றன. மேலும் அவை அவர்களுடைய பதவி, அதிகாரம்,…

March

ஆசாரியத்துவத்தின் சிறப்பு

வேத பகுதி: யாத்திராகமம் 28:2-3 “உன் சகோதரனாகிய ஆரோனுக்கு மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும்பொருட்டு, பரிசுத்த வஸ்திரங்களை உண்டுபண்ணுவாயாக” (வச. 2). தேவ ஆலோசனையின்படி, மோசேயால் ஆசாரியர்கள் ஒரு சிறப்பு வகுப்பாராக, மக்களுக்காக தேவனிடத்தில் ஊழியம் செய்யும்படி நியமிக்கப்பட்டார்கள். பிற இஸ்ரயேல் மக்கள் அனுபவிக்காத பலவிதமான சிலாக்கியங்களையும் சலுகைகளையும் இவர்கள் அனுபவித்தார்கள். தேவனோடு நெருக்கமான வகையில் உறவாடும் ஆசீர்வாதத்தை இவர்கள் பெற்றார்கள். மக்களின் பிரதிநிதிகளாகவும், அதிகாரமிக்கவர்களாகவும் விளங்கினார்கள். புதிய ஏற்பாட்டு விசுவாசிகளாகிய நாமும் ஆசாரியர்கள் என்ற சிறப்பான அந்தஸ்தைப்…

March

ஆரோன் பெற்ற கிருபையின் அழைப்பு

(வேதபகுதி: யாத்திராகமம் 28:1) “உன் சகோதரனாகிய ஆரோன் எனக்கு ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு, நீ ஆரோனையும் அவனோடே கூட அவன் குமாரராகிய நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார் என்னும் ஆரோனின் குமாரரையும் இஸ்ரவேல் புத்திரரிலிருந்து பிரித்து, உன்னிடத்தில் சேர்த்துக்கொள்வாயாக” (வச. 1). தேவ கிருபையின் அற்புதமான தெரிந்தெடுப்பை ஆரோனின் அழைப்பில் காண்கிறோம். இந்நாள்வரை இஸ்ரயேல் மக்களை வழிநடத்திவந்த மோசேயை தேவன் ஆசாரிய ஊழியத்துக்கு அழைக்கவில்லை; மாறாக மோசேயைக் காட்டிலும் பலவிதங்களிலும் குறைந்த தகுதியைப் பெற்றிருந்த ஆரோனை அழைத்தார்.…

March

தேவ மகிமை விளங்கும் கூடாரம்

(வேதபகுதி: யாத்திராகமம் 27:20-21) “ஆரோனும் அவன் குமாரரும் சாயங்காலம் தொடங்கி விடியற்காலமட்டும் கர்த்தருடைய சந்நிதானத்தில் அந்த விளக்கை எரியவைக்கக்கடவர்கள்” (வச. 21). ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள அனைத்துப் பொருட்களைப் பற்றியும் இன்னும் கூறி முடிக்காதபோதிலும், குத்துவிளக்கு எப்பொழுதும் எரியும்படிக்கு மக்களின் பங்களிப்பு பற்றியும் குறிப்பாக ஆரோன் மற்றும் அவருடைய குமாரருடைய பங்களிப்பு பற்றியும் இடையில் சொல்லப்பட்டுள்ளது. ஆசரிப்புக்கூடாரம் அதனுடைய பொருள்கள் இல்லாமல் பயனற்றது, அவ்வாறே அதில் பணியாற்றும் ஆசாரியர்கள் இல்லாமல் அதன் பொருட்களும் பயனற்றது. ஆகவே ஆசரிப்புக்கூடாரம், அதன்…

March

நுழைவாயிலுக்குள் செல்லும் உரிமை

(வேதபகுதி: யாத்திராகமம் 27:9-19; 38:9-20) “வாசஸ்தலத்துக்குப் பிரகாரத்தையும் உண்டுபண்ணுவாயாக” (வச. 9). திறந்த வெளியில் அமைக்கப்பட்டிருந்த ஆசரிப்புக் கூடாரத்தைத் சுற்றியுள்ள மூன்றாவது பிரிவாகிய பிரகாரத்தைப் பற்றி இவ்வசனங்களில் நாம் காண்கிறோம். நூறு முழ நீளமும் ஐம்பது முழ அகலமும் ஐந்து முழ உயரமும் கொண்ட செவ்வக வடிவமுடையது இது. இதன் கிழக்குப் பக்கத்தில் நுழைவாயில் இருந்தது. இது மெல்லிய பஞ்சு நூலால் ஆனது. வெளிப்பார்வைக்கு இதன் வெண்மை நிறம் மட்டுமே கண்களுக்குத் தெரியும். பாவ மக்களின் பார்வையில்…

March

புதிய மார்க்கத்துக்கான நுழைவாயில்

(வேதபகுதி: யாத்திராகமம் 27:1-8; 38:1-7) “ஐந்து முழ நீளமும் ஐந்து முழ அகலமுமாக சீத்திம் மரத்தால் பலிபீடத்தையும் உண்டுபண்ணுவாயாக; அது சதுரமும் மூன்று முழ உயரமுமாயிருப்பதாக” (வச. 1). சீத்திம் மரத்தாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்ட பலிபீடம் அல்லது தகன பலிபீடம் ஆசாரிப்புக் கூடாரத்தின் வெளிப்பிரகாரத்தில் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்தது. இது ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள மற்ற எல்லாப் பொருட்களையும் அடக்கிக்கொள்ளக் கூடிய அளவுக்கு இது மிகப் பெரியது. உள்ளே நுழைகிற ஒருவருடைய கண்களில் முதலாவது தெரியக்கூடியது இந்த பலிபீடமே ஆகும்.…