January

தம் கரத்தின் வல்லமையை விளங்கப்பண்ணுகிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 8:16-19) “ஆரோன் தன் கையில் இருந்த தன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின்மேல் அடித்தான்; அப்பொழுது அது மனிதர்கள் மேலும் மிருக ஜீவன்கள் மேலும் பேன்களாய் எகிப்து தேசம் எங்கும் புழுதியெல்லாம் பேன்களாயிற்று” (வச. 17). முதலிரண்டு வாதைகளை எச்சரித்துவிட்டு அனுப்பிய தேவன் மூன்றாவது வாதையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி வரப்பண்ணினார். எகிப்து நாட்டின் புழுதிகளெல்லாம் அருவருப்பான பேன்களாய் மாறி, மனிதர் மேலும் விலங்குகள் மேலும் திரளாய் ஒட்டிக்கொண்டன. தேவ எச்சரிப்புக்குச் செவிகொடாதோருக்கு எப்பொழுது…

January

வணங்கத்தக்க ஒரே தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 8:1-15) “அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய், எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு; நீ அவர்களை அனுப்பிவிடமாட்டேன் என்பாயாகில், உன் எல்லை அடங்கலையும் தவளைகளால் வாதிப்பேன்” (வச. 1-2). எகிப்தியர்களின் புனித நதியின் புனித நீர் இரத்தமாக மாறி ஏழு நாட்களுக்குப் பின் (7:25) தேவன் இரண்டாவது வாதையை அனுப்பினார். கர்த்தர் அறிவித்து ஏழு நாள் சென்ற பின்பு பூமியின் மேல் ஜலப்பிரளயம் உண்டாயிற்று (ஆதி. 7:10). ஏழு…

January

படைப்பின்மேல் அதிகாரமுள்ள தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 7:14-25) “நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக்கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்” (வச. 18). இந்த உலகம் கடவுள் என்று நம்பிக்கொண்டிருக்கிற எல்லாவற்றைக் காட்டிலும் “நானே கர்த்தர்” என்பதை பார்வோன் அறிந்துகொள்ளும்படி தேவன் பார்வோனுக்கு வழங்கிய வாய்ப்புகளை தொடர்ந்து வீணடித்துக் கொண்டிருந்தான். தம்முடைய வல்லமையை விளங்கப்பண்ணவும் (9:16), அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிற அவர்கள்…

January

போலிகளை வெளிப்படுத்துகிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 7:1-13) “நான் பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தி, எகிப்து தேசத்தில் என் அடையாளங்களையும் அற்புதங்களையும் மிகுதியாய் நடப்பிப்பேன்” (வச. 3). சூரியனின் வெப்பத்தால் பனிக்கட்டி உருகி ஓடுகிறது, அதே சூரிய வெப்பத்தால் களிமண் இறுகி கடினமாகிறது. தேவனுடைய நியாயத்தீர்ப்புகள் எகிப்தியர்களுக்கு வாதைகளாவும் இஸ்ரயேலருக்கு அடையாளங்களாகவும் அற்புதங்களாகவும் இருக்கின்றன. நீதியின் சூரியனின் எச்சரிப்புக்கு ஒருவன் இருதயத்தைத் திறக்காவிட்டால், நியாயத்தீர்ப்பு என்னும் தண்டனைக்கு ஆளாக நேரிடும். பார்வோனுக்கு இரண்டாவது சம்பவித்தது. பல நேரங்களில் இஸ்ரவேல் மக்களும் இருதயத்தைக் கடினப்படுத்தினார்கள்,…

January

முன்னதாகவே ஆயத்தம் செய்கிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 6:14-30) “இஸ்ரவேல் புத்திரரை அணியணியாய் எகிப்து தேசத்திலிருந்து நடத்திக்கொண்டுபோவதற்குக் கர்த்தரால் கட்டளை பெற்ற மோசேயும் ஆரோனும் இவர்களே” (வச. 26). தேவனுடைய தெரிந்தெடுப்பின் அட்டவணை இயற்கையின்படியானது அல்ல, மாறாக அது இறையாண்மைமிக்க அவருடைய கிருபையின்படியானது. இந்தப் பகுதி இஸ்ரயேல் வம்சத்தாரின் தெரிந்தெடுக்கப்பட்ட சில குடும்பங்களும் அவர்களின் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இதனுடைய நோக்கம் மோசே மற்றும் ஆரோனின் பூர்வீகத்தை தெரிவிப்பதே. ஓர் எளிய குடும்பத்தில் பிறந்த மோசே இப்புனிதப் பணிக்காக அழைக்கப்பட்டான். மிகவும் சாதாரண மனிதர்களைக்…

January

மீண்டும் பணிக்கு அனுப்புகிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 6:9-13) “மோசே கர்த்தருடைய சந்நிதானத்திலே நின்று, இஸ்ரவேல் புத்திரரே எனக்குச் செவிகொடுக்கவில்லை; பார்வோன் எனக்கு எப்படிச் செவிகொடுப்பான்? நான் விருத்தசேதனமில்லாத உதடுகளுள்ளவன் என்றான்” (வச. 12). இஸ்ரயேல் புத்திரரர் செவிகொடாமற்போனது, மோசேயை அடுத்த தீர்மானத்துக்கு நேராக நடத்தியது. தேவனுடைய ஜனங்களே கீழ்ப்படிய மறுக்கும்போது, உலகத்தின் பிள்ளைகள் எவ்வாறு கீழ்ப்படிவார்கள் என்று தன் அங்கலாய்ப்பை வெளிப்படுத்தினான். இஸ்ரயேலின் மூப்பர்களே கர்த்தருடைய அற்புதங்களை இவ்வளவு எளிதில் மறப்பார்களாயின் (4:29-31), பார்வோன் எப்படி ஏற்றுக்கொள்வான் எனப் பயந்தான். கர்த்தருடைய…

January

வார்த்தையில் உண்மையுள்ள தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 6:1-8) “மேலும், தேவன் மோசேயை நோக்கி: நான் யெகோவா” (வச. 2). சோர்ந்து போயிருந்த மோசேக்கு தொடர்ந்து ஊழியத்தில் பயணிப்பதற்கு ஒரு உறுதியளிப்பும், உற்சாகமூட்டுதலும் தேவைப்பட்டது. தேவன் ஒவ்வொரு பிரச்சினைகளையும் உடனடியாகத் தீர்ப்பதில்லை, மேலும் நாம் வைத்திருக்கிற கால அட்டவணையையும் அவர் பின்பற்றுகிறதில்லை. ஆனால் நமக்காக அவர் வைத்திருக்கும் திட்டங்களை அவர் அறிவார் (எரே. 29:11). மோசேயின் கரத்திலிருந்த கோல் தேவனுடைய வல்லமையை வெளிப்படுத்துமானால் தேவனுடைய பலத்த கரம் செய்வதை யார் அறிவார். அவை…

January

இக்கட்டில் உதவிசெய்யும் தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 5:15-23) “நீங்கள் ஒவ்வொரு நாளிலும் அறுத்துத் தீரவேண்டிய செங்கலிலே ஒன்றும் குறைக்கப்படாது என்று சொல்லப்பட்டதினாலே, இஸ்ரவேல் புத்திரரின் தலைவர் தங்களுக்கு இக்கட்டு வந்தது என்று கண்டார்கள் ” (வச. 19). இஸ்ரயேலின் மூப்பர்கள் தேவனிடம் வந்து அழுவதற்குப் பதில் நிவாரணம் தேடி பார்வோனிடத்துக்கு ஓடினார்கள் (வச. 15). தூர தேசத்தில் இளைய குமாரன் குறைவுபட்டபோது, உடனடியாகத் தந்தையைத் தேடி வராமல், அங்கேயே பிழைப்பைத் தேடி அழைந்தான் (லூக். 15:15). உண்பதற்குத் பன்றித் தீவனமும் கிடைக்காத…

January

2022 ஜனவரி 23

(வேதபகுதி: யாத்திராகமம் 5:4-14) “அவர்கள் முன் செய்துகொடுத்த கணக்கின்படியே செங்கல் செய்யும்படி சொல்லுங்கள்; அதிலே நீங்கள் ஒன்றும் குறைக்க வேண்டாம், அவர்கள் சோம்பாலாயிருக்கிறார்கள்; அதினால் நாங்கள் போய் எங்கள் தேவனுக்குப் பலியிடுவோம் என்று கூக்குரலிடுகிறார்கள் ” (வச. 8). “தேவனுக்கு ஆராதனை செய்ய வேண்டும்” (வச. 8) என்பதை கூக்குரலாகவும், வீண் வார்த்தைகளாகவுமே (வச. 9) இந்த உலகம் கருதுகிறது. தன்னுடைய ஆன்மாவின் நிலையை உணர முடியாத ஒருவரால் பிறருடைய ஆவிக்குரிய தேவையையும் உணர முடியாது என்பதே…

January

2022 ஜனவரி 22

(வேதபகுதி: யாத்திராகமம் 5:1-3) “பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிட வேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்” (வச. 1). சிங்கத்தை அதன் குகையில் சந்திப்பது, பிரச்சினையை விலைகொடுத்து வாங்குவது மட்டுமல்ல, தங்கள் உயிருக்கே உலைவைக்கும் செயலும் ஆகும். ஆயினும், மோசேயும் ஆரோனும் தங்கள் சொந்த மாம்ச பெலத்தை முறியடித்து, தேவனின் சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக்கொண்டும், பயந்த இருதயத்தைப் பெலப்படுத்தும் கிருபையைப் பெற்றுக்கொண்டும் பார்வோனுக்கு…