September

மோசேயின் பிரிவுப் பிரசங்கம்

(வேதபகுதி: உபாகமம் 31:1-13) “இன்று நான் நூற்றிருபது வயதுள்ளவன்; இனி நான் போக்கும் வரத்துமாயிருக்கக்கூடாது” (வச. 2). இந்தப் பகுதி சூரிய அஸ்தமனத்திற்கும் சூரிய உதயத்திற்கும் இடையிலான ஓர் இணைப்பாகும். தேவன் தம்முடைய உண்மையான ஊழியக்காரனை அடக்கம் செய்யப்போகிறார், ஆயினும் தம்முடைய பணியைத் தொடர்கிறார். மரணம் தவிர்க்க முடியாதது. ஆனால் நித்திய தேவன் உடன் இருக்கிறார். எண்பது ஆண்டுகளுக்கு முன்பாக மோசே தன்னுடைய இனத்தாரை விடுவிக்க முயற்சி எடுத்தார். இன்றைக்கு அதைச் சாதித்துவிட்டார். அன்றைக்கு பார்வோனின் அரண்மனைச்…

September

இரு வழிகள்: ஜீவனும் மரணமும்

(வேதபகுதி: உபாகமம் 30:1-20) “நான் ஜீவனையும் மரணத்தையும் ஆசீர்வாதத்தையும் சாபத்தையும் உனக்குமுன் வைத்தேன்” (வச. 19). மோசே தன்னுடைய பிரசங்கத்தின் இறுதிக்கட்டத்துக்கு வருகிறார். தேவனின் தூதுவராக, தேவனின் சார்பாக அவர் இஸ்ரயேல் மக்களிடம் மன்றாடுகிறார். தேவனுடைய உடன்படிக்கைக்கு அவர்கள் முழுமனதுடன் அர்ப்பணிப்பணிக்க வேண்டும் என உருக்கமான வேண்டுகோளை வைக்கிறார். அவருடைய வாக்குறுதிகள் நம்பிக்கைக்குரியது, அதன்மீது எவ்விதச் சந்தேகமும் கொள்ளாதீர்கள் என்று வாதிடுகிறார். தேவனுடைய உண்மையுள்ள ஒரு ஊழியராக தன்னுடைய உள்ளக்கிடக்கையை இங்கே வெளிப்படுத்துகிறார். மக்களின் அபிமானம் பெற்ற…

September

மறைவானவைகளும் வெளிப்படுத்தப்பட்டவைகளும்?

(வேதபகுதி: உபாகமம் 29:14-29) “மறைவானவைகள் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியவைகள்; வெளிப்படுத்தப்பட்ட வைகளோ, இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளின்படியெல்லாம் செய்யும்படிக்கு, நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்றென்றைக்கும் உரியவைகள்.” (வச. 29). தேவன் மோசேயின் மூலமாக மக்களிடத்தில் போதுமான அளவு பேசிவிட்டார். நாம் கீழ்ப்படிந்து நடப்பதற்கு இதுவரை அவர் வெளிப்படுத்தியவை அனைத்தும் போதுமானவையாகவே இருக்கின்றன. நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் இனிவரும் தலைமுறைக்கும் உரியதாக இருக்கிறது. எந்தக் காலகட்டதிலும் எத்தகைய அறிவியல் வளர்ச்சி பெருகிற காலகட்டத்திலும் வாழ்கிற மக்களுக்கு இந்த வேதம்…

September

உடன்படிக்கையைப் புதுப்பித்தல்

(வேதபகுதி: உபாகமம் 29:1-13) “மோவாபின் தேசத்திலே அவர்களோடே உடன்படிக்கை பண்ணக் கர்த்தர் மோசேக்கு கட்டளையிட்ட வார்த்தைகள் இவைகளே” (வச. 1). கானானுக்குள் பிரவேசிக்குமுன் மீண்டுமாக உடன்படிக்கையின் வார்த்தைகளைக் கேட்கும்படி இஸ்ரயேலர் அனைவரும் ஒன்றுகூடினர். இங்கே தேவனுடைய உடன்படிக்கை மீண்டுமாக அவர்களுடன் புதுப்பிக்கப்பட்டது. இவ்வாறு செய்வதன் வாயிலாக மோசே மக்களை அவ்வுடன்படிக்கையோடு இணைக்க முயன்றார். விசுவாசிகளாகிய நாமும் கூட நம்முடைய உறுதிமொழிகளையும் தீர்மானங்களையும் அவ்வப்போது புதுப்பித்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது. நாம் பண்ணிய உறுதிமொழிகளுக்கு உண்மையுடன் நடந்துகொண்டோமோ? அவற்றை…

September

சாபமும் அதன் விளைவும்

(வேதபகுதி: உபாகமம் 28:15-68) “… கர்த்தருடைய எல்லாக் கற்பனைகளின்படியும் கட்டளைகளின்படியும் நடக்கக் கவனமாயிருப்பதற்கு, அவர் சத்தத்திற்குச் செவிகொடாதேபோவாயாகில், இப்பொழுது சொல்லப்படும் சாபங்களெல்லாம் உன்மேல் வந்து, உனக்குப் பலிக்கும் ” (வச. 15). இஸ்ரயேலர் தேவனை விட்டு விலகிச் செல்வதன் விளைவால் வருவதே சாபம் (வச. 20). அதாவது ஆசீர்வாதம் தேவனுடன் இணைந்து வாழ்வதால் வருவதைப்போல, சாபம் தேவன் இல்லாத வாழ்க்கையின் விளைவால் உண்டாகிறது. இப்பகுதியில் பட்டியலிடப்பட்ட சாபங்கள் யாவும் தேவன் தமது மக்களுக்கு அளித்த அனைத்து ஆசீர்வாதங்களையும்…

September

ஆசீர்வாதமும் அதன் விளைவும்

(வேதபகுதி: உபாகமம் 28:1-14) “நீ உன் தேவனாகிய கர்த்தரின் சத்தத்துக்குச் செவிகொடுக்கும்போது, இப்பொழுது சொல்லப்படும் ஆசீர்வாதங்களெல்லாம் உன்மேல் வந்து உனக்குப் பலிக்கும்” (வச. 3). தேவனுடன் வாழும் வாழ்க்கை நமக்கு நிறைவானதும் முழுமையானதுமான பலனைத் தருகிறது. தேவன் நமக்கு சரீரப்பிரகாரமான ஆசீர்வாதத்தைத் தரவில்லை என்று சொன்னால் நாம் வேதத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்றே கூறவேண்டும். ஆயினும் புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் சரீர ஆசீர்வாதங்களைக் குறித்துக் கற்றுக்கொள்வதே புத்திசாலித்தனமான செயல். அப்பொழுதே ஆசீர்வாதங்களைத் தருகிற தேவனையும், அவருடைய உள்ளான…

September

ஆசீர்வாதமும் சாபமும்

(வேதபகுதி: உபாகமம் 27:11-26) “இந்த நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொண்டு நடவாதவன் சபிக்கப்பட்டவன் என்பார்களாக; ஜனங்களெல்லாரும் ஆமென் என்று சொல்லக்கடவர்கள்” (வச. 26). இஸ்ரயேலின் பன்னிரண்டு கோத்திரங்களும் இரண்டு குழுவாகக் கூடியிருக்க வேண்டும். ஆறு பேர் கொண்ட ஒவ்வொரு குழுவின் சத்தமும் மற்றொரு குழுவுக்குக் கேட்கும்படி நிற்க வேண்டும். லேயாள் மற்றும் ராகேலின் பிள்ளைகள் கெரிசீம் மலையிலும், பில்கால் மற்றும் சில்பாளின் பிள்ளைகள் ஏபால் மலையிலும் நிற்க வேண்டும். கெரிசீம் மலையில் ஆசீர்வாதமும், ஏபால் மலையில் சாபமும் கூறப்பட்டது.…

September

கீழ்ப்படிதலும் மகிழ்ச்சியும்

(வேதபகுதி: உபாகமம் 27:1-10) “உன் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திற்குப் போக யோர்தானைக் கடக்கும் நாளில், நீ பெரிய கல்லுகளை நாட்டி, அவைகளுக்குச் சாந்துபூசி. … இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகள் யாவையும் அவைகளில் எழுதக்கடவாய்” (வச. 2,3). யோர்தானைக் கடந்த பின்னர், பெரிய கற்களில் “மிகத் துலக்கமாக எழுதப்பட்ட நியாயப்பிரமாணம்” இஸ்ரவேலர் அனைவருக்கும் சாட்சியாக ஏபால் மலையின் மீது நிறுத்தப்பட்டது. அது தெரியாது என்று யாரும் கூற முடியாது. மேலும் இஸ்ரயேலர்கள் வாக்குத்தத்த பூமிக்குள் நுழைவதிலிருந்து…

September

கீழ்ப்படிதலின் ஆசீர்வாதம்

(வேதபகுதி: உபாகமம் 26:12-19) “… நீ என்னுடைய கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டால், எனக்குச் சொந்த ஜனமாய் இருப்பாய் என்றும், … நீ என் தேவனாகிய கர்த்தரான எனக்குப் பரிசுத்த ஜனமாயிருப்பாய் என்றும் அவர் இன்று உனக்குச் சொல்லுகிறார்” (வச. 18,19). கர்த்தருடைய வழிகளில் நடப்பதற்கு மக்கள் ஒப்புக்கொண்ட காரணத்தால், அவர்கள் தம்முடைய சொந்த ஜனங்கள் என்று உறுதியளித்து, எல்லா இனங்களுக்கும் மேலாக அவர்களைச் சிறக்கச் செய்வதாக வாக்குறுதி கொடுத்தார். அவர்கள் உள்ளார்ந்த வகையில் ஏதோ தகுதி பெற்றவர்கள் என்பதால்…

September

உடைமைகளை அணுகும் முறை

(வேதபகுதி: உபாகமம் 26:1-11) “இப்பொழுதும், இதோ, கர்த்தாவே, தேவரீர் எனக்குக் கொடுத்த நிலத்தினுடைய கனிகள் முதற்பலனைக் கொண்டுவந்தேன் என்று சொல்லி, அதை உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் வைத்து, உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் பணிந்து, … சந்தோஷப்படுவீர்களாக ” (வச. 10,11). இஸ்ரவேலர் தாங்கள் பெற்ற பூமி தங்களுடைய இராணுவ பலத்தின் வெற்றியினால் கிடைத்தது அன்று, மாறாக, அது கர்த்தருடைய வெகுமதி என்பதை தொடர்ந்து நினைவூட்டிக்கொண்டேயிருக்கிறார். இந்த நன்றி நிறைந்த உணர்வை, தங்களுடைய விளைச்சலின் முதற்பலனை…