September

தன்னை அணுகும் முறை

(வேதபகுதி: உபாகமம் 25:11-19) “உன் தேவனாகிய கர்த்தர் உனக்கும் கொடுக்கும் தேசத்தில் உன் நாட்கள் நீடித்திருக்கும்படி, குறையற்ற சுமுத்திரையான நிறைகல்லும், குறையற்ற சுமுத்திரையான படியும் உன்னிடத்தில் இருக்க வேண்டும்” (வச. 15). நாம் ஒவ்வொருவரும் இந்தப் பூமியில் நீடூழி வாழ வேண்டும் என விரும்புகிறோம். இதற்காக சரீரப் பிரகாரமாக பல்வேறு முயற்சிகளை எடுக்கிறோம். ஆனால் நம்மை நித்திய வாழ்க்கைக்காக அழைத்த தேவன், இந்தப் பூமியிலும் நீண்ட நாள் வாழ்வதற்கான சில கட்டளைகளை நமக்கு முன் வைக்கிறார். நம்முடைய…

September

சகோதரனுடைய குடும்பத்தை அணுகும் முறை

(வேதபகுதி: உபாகமம் 25:1-10) “மரித்த சகோதரனுடைய பேர் இஸ்ரவேலில் அற்றுப்போகாதபடிக்கு, அவன் பேரை அவள் பெறும் தலைப்பிள்ளைக்குத் தரிக்க வேண்டும்” (வச. 6). இறந்துபோன சகோதரனுடைய மனைவியைத் திருமணம் முடிப்பது இஸ்ரயேலில் தொன்றுதொட்டு வழங்கி வந்த ஒன்று. இது இறந்துபோன தன்னுடைய சகோதரனின் பேரை நிலைநாட்டுவதற்காகவும், அவனுடைய வம்சம் தழைத்தோங்கவும் தேவனுடைய கரிசணையுள்ள ஏற்பாடாகவும் மாறியது. இது ஒரு விதவைக்கு மறுவாழ்வு கொடுப்பது மட்டுமின்றி, சகோதரனின் நன்மையை நாடுவதாகவும் இருந்தது. யூதா தன்னுடைய மூத்த மகன் இறந்த…

September

ஏழைகளை அணுகும் முறை

(வேதபகுதி: உபாகமம் 24:14-22) “நீ எகிப்திலே அடிமையாயிருந்ததையும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னை அங்கேயிருந்து மீட்டுக்கொண்டுவந்ததையும் நினைப்பாயாக” (வச. 9). யோசேப்பை அறியாத ஒரு ராஜா எகிப்தில் தோன்றியபோது, இஸ்ரயேல் மக்களின் மூதாதையோர் எவ்விதமாக கொடுமைப்படுத்தப்பட்டார்கள் என்ற சோகக்கதையின் தீரம் அடுத்தடுத்த தலைமுறைகளின் இதயங்களில் பொறிக்கப்பட வேண்டும் என்பதை தேவன் விரும்புகிறார் (அப். 7:18). ஒவ்வொரு பஸ்கா பண்டிகையின் காலமும் அவர்களுக்கு கொண்டு வந்த அர்த்தபூர்வமான நினைவூட்டல்களை அவர்களால் எப்படி மறந்துபோக முடியும்? அவர்கள் எகிப்தில் சுதந்தரமின்றி,…

September

சமுதாயத்தைக் குறித்த அணுகுமுறை

(வேதபகுதி: உபாகமம் 24:6-13) “நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வருகிற வழியிலே உங்கள் தேவனாகிய கர்த்தர் மிரியாமுக்குச் செய்ததை நினைத்துக்கொள்ளுங்கள்” (வச. 9). இந்த உலகம் எப்போதும் சமுதாயத்தில் மேல் தட்டில் இருப்பவர்களையும், அதிகாரம், புகழ், செல்வாக்கு, பணபலம் உடையவர்களையுமே பெரிதாக மதிக்கிறது, அவர்களுடைய புகழைப் பாடுகிறது. தேவனுடைய சிந்தை எப்போதும் மாறுபட்டது. தேவன் திக்கற்ற பிள்ளைகளையும், விதவைகளையும், ஏழைகளையும், ஒடுக்கப்படுகிறவர்களையும், கடனாளிகளையும், கூலிக்காரர்களையும் குறித்துக் கரிசனையுடன் சிந்தித்துக்கொண்டிருக்கிறார். இந்த உலக வழி நாம் பின்பற்றத்தக்க முன்மாதிரியான வழியன்று.…

September

குடும்பங்களைக் குறித்த அணுகுமுறை

(வேதபகுதி: உபாகமம் 24:1-5) “ஒருவன் ஒரு பெண்ணைப் புதிதாய் விவாகம்பண்ணியிருந்தால், அவன் யுத்தத்திற்குப் புறப்படவேண்டாம்; அவன்மேல் யாதொரு வேலையும் சுமத்த வேண்டாம்; அவன் ஒரு வருஷபரியந்தம் தன் வீட்டில் தன் இஷ்டப்படியிருந்து, தான் விவாகம்பண்ணின ஸ்திரீயைச் சந்தோஷப்படுத்துவானாக.” (வச. 5). புதிதாகத் திருமணம் செய்து கொண்ட ஒருவன், தன்னுடைய நாட்டுக்காகப் போரிட்டு பெறுகிற வெற்றியின் மகிழ்ச்சியைக் காட்டிலும், தன்னுடைய மனைவியை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை தேவன் இவ்வசனத்தில் வலியுறுத்துகிறார். நாட்டுக்காகச் சேவை செய்தல் என்பது முக்கியமானதுதான்.…

September

சுற்றத்தாரைக் குறித்த அணுகுமுறை

(வேதபகுதி: உபாகமம் 23:1-25) “அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது” (வச. 3). இஸ்ரயேல் தேசத்தின் பெரிய பாக்கியங்களில் ஒன்று அவர்கள் நடுவில் கர்த்தருடைய பிரசன்னம் இருப்பது. பரிசுத்த ஆசரிப்புக் கூடாரத்தைச் சுற்றி அவர்கள் கூடாரங்களில் தங்கியிருந்தார்கள். பரித்த தேவன் மக்கள் வசிக்கும் பாளையத்தில் உலாவுகிறார். இது மக்களுடைய பரிசுத்தத்தையும் கோரியது (வச. 14). இந்தப் பரிசுத்தத்தை நிலைநிறுத்துவதற்காக, குறிப்பிட்ட மக்கள் இஸ்ரயேல் மக்களோடு கலந்து ஒன்றாக…

September

உறவுகளைக் குறித்த அணுகுமுறை

(வேதபகுதி: உபாகமம் 22:1-30) “உன் சகோதரனுடைய மாடாவது ஆடாவது வழிதப்பிப்போகிறதைக் கண்டாயானால், அதைக் காணாதவன்போல் இராமல், அதை உன் சகோதரனிடத்துக்குத் திருப்பிக்கொண்டு போகக்கடவாய்.” (வச. 1). நம்முடைய சகோதரர்களுடைய உடைமைகளைக் குறித்து நாம் எந்த அளவுக்கு அக்கறையுடன் இருக்கிறோம். நாம் வெளிப்படையாக அவர்களுடைய உடைமைகளை திருட அவசியம் வேண்டியதில்லை, மாறாக, திருடுபோவதை வேடிக்கை பார்த்தாலே அது கண்டனத்துக்குரியது. ஆகவே நாம் நம்முடைய அண்டை வீட்டாரின் சொத்துகள் இழப்பைத் தடுக்க முனைப்புடன் இருக்க வேண்டும். “எது நடந்தால் எனக்கென்ன…

September

பிள்ளைகளை அணுகும் முறை

(வேதபகுதி: உபாகமம் 21:10-23) “தன் தகப்பன் சொல்லையும், தன் தாயின் சொல்லையும் கேளாமலும், அவர்களால் தண்டிக்கப்பட்டும், அவர்களுக்குக் கீழ்ப்படியாமலும் போகிற அடங்காத பிள்ளை ஒருவனுக்கு இருந்தால்…” (வச. 18). இஸ்ரயேலில் முதற்பேறானவர்களின் சிலாக்கியம் எவ்வளவு பெரியது. தந்தையின் ஆஸ்திகளில் இரண்டு பங்கை அவன் பெற்றுக்கொள்வான் (வச. 17). பிற பிள்ளைகள் இருந்தால் அவரவருக்குரிய பங்குகளை தந்தையின் ஆஸ்திகளில் இருந்து பெற்றுக்கொள்வர். இவ்வளவு சலுகைகள் இருந்த போதிலும், பிடிவாதமும் கலகக்காரனுமாக வாழ்வதும் மிகவும் வருத்தமாக இருக்கிறது. இஸ்ரயேலரில் இத்தகைய…

September

இரத்தப்பழியை நீக்கும் அணுகுமுறை

(வேதபகுதி: உபாகமம் 21:1-9) “கர்த்தாவே, நீர் மீட்டுக்கொண்ட உமது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் குற்றமில்லாத இரத்தப்பழியைச் சுமத்தாமல், உமது ஜனமாகிய இஸ்ரவேலின்மேல் கிருபையுள்ளவராயிரும் என்று சொல்வார்களாக; அப்பொழுது இரத்தப்பழி அவர்களுக்கு நிவிர்த்தியாகும்” (வச. 8). நிலம் கர்த்தருக்குச் சொந்தமானது, அதில் வாழும் மக்கள் வாடகைதாரர்கள். மக்களுடைய பாவங்கள் கர்த்தரைத் துக்கப்படுத்துவது மட்டுமின்றி நாட்டையும் அசுத்தப்படுத்துகிறது. இஸ்ரயேலில் அப்பாவிகளின் இரத்தம் சிந்தப்படுவது ஒரு மோசமான குற்றச்செயல் (உபா. 19:10,13). காயீன் தன் சகோதரனாகிய ஆபேலைக் கொலை செய்தபோது, பூமி ஆபேலின்…

September

ஆவிக்குரிய போரின் அணுகுமுறை

(வேதபகுதி: உபாகமம் 20:1-20) “நீ உன் சத்துருக்களுக்கு எதிராக யுத்தஞ்செய்யப் புறப்பட்டுப் போகையில், குதிரைகளையும் இரதங்களையும், உன்னிலும் பெரிய கூட்டமாகிய ஜனங்களையும் கண்டால், அவர்களுக்குப் பயப்படாயாக; … உன் தேவனாகிய கர்த்தர் உன்னோடே இருக்கிறார்” (வச. 1). இஸ்ரயேலர்களின் வாழ்க்கையில், தேவன் வாக்குறுதி அளித்த நாட்டைக் கைப்பற்ற போர் தவிர்க்க முடியாத ஓர் அம்சமாக இருந்தது (வச. 1). ஆயினும் போர் நம்முடையதன்று, அது கர்த்தருடையது. ஆகவே, ‘அவர்களுக்குப் பயப்படவேண்டாம்; உங்கள் தேவனாகிய கர்த்தர் உன்னுடனே இருக்கிறார்’…