September

நீதிசெய்வதில் தேவனைப் பிரதிபலித்தல்

(வேதபகுதி: உபாகமம் 19:14-21) “ஒருவன் எந்த அக்கிரமத்தையாவது எந்தப் பாவத்தையாவது செய்தான் என்று சொல்லப்பட்டால், ஒரே சாட்சியினால் நியாயந்தீர்க்கக்கூடாது; இரண்டு மூன்று சாட்சிகளுடைய வாக்கினாலே காரியம் நிலைவரப்படவேண்டும்.” (வச. 15). தேவனுடைய நியாயப்பிரமாணச் சட்டங்கள் அவருடைய இயல்பையும் குணநலனையும் பிரதிபலிக்கின்றன. ஒரு நீதியுள்ள நியாயாதிபதியாக, தேவன் தம்முடைய ராஜ்யத்தின் தன்மைகள் சரியான நீதியோடும் நியாயத்தோடும் இருக்க வேண்டுமென விரும்புகிறார். ஒரு நாள் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய ராஜ்யத்தை பரிபூரண நீதியிலும் நேர்மையிலும் நிலைநிறுத்தும்படிக்கு பூமிக்கு திரும்புவார்…

September

பழிவாங்குதலுக்குத் தப்புதல்

(வேதபகுதி: உபாகமம் 19:1-13) “அப்பொழுது உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் உன் தேசத்தில் குற்றமில்லாத இரத்தம் சிந்தப்படுகிறதினால் உன்மேல் இரத்தப்பழி சுமராதபடிக்கு … ” (வச. 10). தேவன் நமக்குக் கிருபையாய் கொடுக்கிற வாழ்க்கையை பரிசுத்தமாகக் காத்துக்கொள்ள வேண்டும். நம்முடைய வாழ்க்கை மட்டுமின்றி, நம்மைச் சுற்றியிருக்கும் சூழலும் தூய்மை காக்கப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தம்முடைய மக்களுக்காக அவர் கொடுக்கிற சுதந்தர பூமி நிரபராதிகளின் ரத்தத்தால் மாசுபடக்கூடாது என்பதில் ஆண்டவர் அக்கறை கொண்டிருந்தார்.…

September

கிறிஸ்துவே மெய்யான தீர்க்கதரிசி

(வேதபகுதி: உபாகமம் 18:9-22) “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக” (வச. 15). கானானியர்கள் தங்கள் வழிகாட்டுதலுக்காக குறிசொல்லுகிறவர்களையும், நாள்பார்க்கிறவர்களையும், அஞ்சனம் (சகுனம்) பார்க்கிறவர்களையும், சூனியக்காரர்களையும், மந்திரவாதிகளையும், மாயவித்தைக்காரர்களையும் நம்பி அவர்களையே நாடினார்கள் (வச.10,11). ஆனால் கர்த்தர் தம்முடைய மக்களுக்காக இப்படிப்பட்டவர்களை நியமிக்காதது மட்டுமின்றி, இவர்களைத் தடையும் செய்தார் (வ. 14). மாறாக, மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியை எழுப்புவதாக அவர் வாக்களித்தார்…

September

கர்த்தரே அவர்களுடைய சுதந்தரம்

(வேதபகுதி: உபாகமம் 18:1-8) “அவர்கள் சகோதரருக்குள்ளே அவர்களுக்குச் சுதந்தரமில்லை; கர்த்தர் அவர்களுக்குச் சொல்லியபடியே, அவரே அவர்கள் சுதந்தரம்” (வச. 2). இஸ்ரயேலர்கள் ஒரு நாடாக கர்த்தருக்கு “ஆசாரிய ராஜ்யமாகவும், பரிசுத்த ஜாதியாகவும்” இருக்க வேண்டும் என்பதே அவருடைய நோக்கமாக இருந்தது (யாத். 19:6). ஆனால் அவர்கள் தேவனுடன் நெருங்கிச் சேருவதற்குப் பயந்து, மோசே எங்களுக்கு ஒரு மஸ்தியஸ்தராக இருக்க வேண்டும் என்று கோரினர் (யாத். 20:19). எனவே தேவன் அவர்களுக்கு ஓரு குறிப்பிட்ட கோத்திரத்தார் வாயிலாக ஒரு…

September

உங்களுக்கென ஒரு வேதாகமம் இருக்கிறதா?

(வேதபகுதி: உபாகமம் 17:14-20) “நீ: என்னைச் சுற்றிலும் இருக்கிற சகல ஜாதிகளையும் போல, நானும் எனக்கு ஒரு ராஜாவை ஏற்படுத்த வேண்டும் என்பாயானால்” (வச. 14). இஸ்ரவேல் நாடு தேவனின் நேரடி ஆட்சியை நிராகரித்து, ‘எங்களைச் சுற்றியிருக்கும் பிற நாடுகளைப் போல எங்களுக்கும் ஓர் அரசன் வேண்டும்’ எனக் கூறி, கீஷின் மகன் சவுலை தேர்ந்தெடுப்பதற்கு நானூறு ஆண்டுகளுக்கு முன்னரே இறையாண்மையுள்ள தேவன் உபாகமப் புத்தகத்தில் இதற்கான நிபந்தனைகளை ஏற்படுத்தி வைத்துவிட்டார். இஸ்ரவேலுக்கான அரசாட்சி பற்றிய கருத்தும்…

September

அன்றாடப் பிரச்சினைகளை எதிர்கொள்ளுதல்

(வேதபகுதி: உபாகமம் 17:1-13) “உன் வாசல்களில் இரத்தப் பழிகளைக் குறித்தும், வியாச்சியங்களைக் குறித்தும், காயம்பட்ட சேதங்களைக் குறித்தும் வழக்கு நேரிட்டு, நியாயந்தீர்ப்பது உனக்கு அரிதாயிருந்தால், நீ எழுந்து உன் தேவனாகிய கர்த்தர் ஏற்படுத்தின ஸ்தானத்துக்குப் போய்… (வச. 8). வேதம் நம்முடைய யதார்த்தமான வாழ்க்கைக்குப் பொருத்தமானதாக இராவிட்டால் அதனால் ஒரு பயனுமில்லை. அது ஒரு கற்பனைப் புத்தகமன்று. தேவனுடைய மக்களுடைய வாழ்க்கையில் அன்றாடம் ஏற்படுகிற குறைவுகள், பிரச்சினைகள், மோதல்கள், வழக்குகள் ஆகிய யாவற்றுக்கும் தீர்வைத் தருகிறது. நாம்…

September

நீதியுடன் நியாயம் செய்தல்

(வேதபகுதி: உபாகமம் 16:18-22) “உன் தேவனாகிய கர்த்தர் உன் கோத்திரங்கள்தோறும் உனக்குக் கொடுக்கும் வாசல்களிளெல்லாம், நியாயாபதிகளையும் தலைவரையும் ஏற்படுத்துவாயாக; அவர்கள் நீதியுடன் ஜனங்களுக்கு நியாயத்தீர்ப்பு செய்யக்கடவர்கள் (வச. 18). நீதியுள்ள தேவனின் பிள்ளைகள் தங்கள் அனுதின வாழ்க்கையில் நீதியைக் கடைப்பிடித்து வாழ வேண்டும். இஸ்ரயேல் மக்கள் கானான் நாட்டில் குடியேறிய பிறகு, தங்களுடைய சமுதாயத்துக்குள் நிர்வாக முறைகள் திறம்பட இருக்க வேண்டும் என்பதை தேவன் உறுதிப்படுத்துகிறார். நீதி பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும். முகத்தைப் பார்த்து, ஆட்களை மதித்து,…

September

கர்த்தருக்கு முன்பாகச் சந்தோஷப்படுதல்

(வேதபகுதி: உபாகமம் 16:9-17) உன் தேவனாகிய கர்த்தர் தமது நாமம் விளங்கும் ஸ்தானத்திலே, நீயும், உன் குமாரனும், உன் குமாரத்தியும், உன் வேலைக்காரனும், … உன் தேவனாகிய கர்த்தருடைய சந்நிதியில் சந்தோஷப்பட்டு (வச. 11). பஸ்கா பண்டிகையை அடிப்படையாகக் கொண்டு இஸ்ரயேல் நாட்டின் சமய நாட்காட்டி நிறுவப்பட்டது (யாத். 12:2). பஸ்காவே தொடர்ந்து நடைபெற்ற அனைத்திற்கும் ஒரு தொடக்கப் புள்ளியாக அமைந்தது. இந்த மீட்பின் நிகழ்வே அவர்களுடைய ஒவ்வொரு தேசிய ஆசரிப்புக்குமான சாராம்சத்தை வழங்குகிறது. இன்று அது…

September

அறிந்துகொள்வதற்காகப் பின்பற்று

(வேதபகுதி: உபாகமம் 16:1-8) “நீ எகிப்திலிருந்து புறப்பட்ட நாளை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் நினைக்கும்படி, பஸ்கா பலியுடனே புளிப்புள்ள அப்பம் புசியாமல், சிறுமையின் அப்பமாகிய புளிப்பில்லாத அப்பங்களை ஏழுநாள் வரைக்கும் புசிக்கக்கடவாய்” (வச. 3). இஸ்ரயேல் ஒரு நாடாக உருவான நாள் முக்கியமான நாள், அது மறக்கப்படக் கூடாத நாள். தேவனுடைய வல்லமையினால் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து புறப்பட்ட விடுதலையின் நாள், இது அவர்களுடைய நாட்காட்டியையே மாற்றியமைத்த நாள். இதை ஆண்டுதோறும் நினைவுகூரும்படி நியமிக்கப்பட்டதே பஸ்கா. ஆயினும் உயிருள்ளவரை…

September

அடிமையை விடுதலையாக்குதல்

(வேதபகுதி: உபாகமம் 15:12-23) “உன் சகோதரனாகிய எபிரெய புருஷனாகிலும் ஸ்திரீயாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறு வருஷம் உன்னிடத்தில் சேவிக்க வேண்டும்; ஏழாம் வருஷத்தில் அவனை விடுதலை பண்ணி அனுப்பிவிடுவாயாக” (வச. 12). ஆறு ஆண்டுகள் அடிமையாகச் சேவித்த எபிரெய அடிமைகளை ஏழாம் ஆண்டில் விடுதலை கொடுத்து அனுப்பிவிட வேண்டும். ஈடு செய்ய முடியாத வறுமையின் காரணமாக தங்களை அடிமைத்தனத்துக்கு விற்ற இஸ்ரயேல் மக்கள், இந்த அவமானத்தை என்றென்றைக்கும் சுமக்காதபடிக்கு அவர்களுக்கான விடுதலையின் வழியை தேவன் ஏற்படுத்திக் கொடுத்தார்.…