April

புயலின் நடுவிலும் திவ்விய சமாதானம்

(வேதபகுதி: லேவியராகமம் 7:1-21) “சமாதான பலியாகிய ஸ்தோத்திர பலியின் மாம்சமானது செலுத்தப்பட்ட அன்றையத்தினமே புசிக்கப்பட வேண்டும், அதில் ஒன்றும் விடியற்காலம் மட்டும் வைக்கப்படலாகாது” (வச.15). சமாதான பலியை எவ்விதமாகப் படைக்கவும் அதைப் பாவிக்கவும் வேண்டும் என்பதைப் பற்றிய கூடுதல் விவரங்களை இங்கே காண்கிறோம். இந்த சமாதான பலியை மூன்று விதங்களில் படைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. அவையாவன: 1. ஸ்தோத்திரத்திர பலியாக (வச. 15), 2. பொருத்தனையாக (வச. 16), 3. உற்சாக பலியாக (வச. 16). இது…

April

மெய்யான பலியை அடையாளப்படுத்தும் நிழற்பலிகள்

(வேதபகுதி: லேவியராகமம் 6:1-30) “பலிபீடத்தின்மேலிருக்கிற அக்கினி அவியாமல் எரிந்துகொண்டிருக்க வேண்டும்; ஆசாரியன் காலைதோறும் அதின்மேல் எரியும்படி கட்டைகளைப் போட்டு, அதின்மேல் சர்வாங்க தகனபலியை வரிசையாக வைத்து, அதின்மேல் சமாதான பலியின் கொழுப்பைப் போட்டுத் தகனிக்கக்கடவன்” (வச.12). இந்த அதிகாரத்தில் ஏற்கனவே சொல்லப்பட்ட பலிகளின் நோக்கம் அதன் வரையறைகள் மீண்டுமாக விவரிக்கப்பட்டுள்ளது. குற்ற நிவாரணபலி நம்மைத் தேவனிடத்தில் மன்னிப்பைப் பெற்று ஒப்புரவாகச் செய்கிறதுபோல, உடன் சகோதர சகோதரிகளுக்கு விரோதமாகப் பாவம் செய்திருந்தோமானால் அவர்களிடத்திலும் ஒப்புரவாக வேண்டும் என்பதையும் குற்றத்தால்…

April

குற்றநிவாரண பலி: பாவத்தின்மேல் வெற்றி

(வேதபகுதி: லேவியராகமம் 5:1-19) “ஒருவன் கர்த்தருக்குரிய பரிசுத்தமானவைகளில் குற்றஞ்செய்து, அறியாமையினால் பாவத்துக்குட்பட்டால், அவன் தன் குற்றத்தினிமித்தம் பரிசுத்த சேக்கல் கணக்கின்படியே நீ அவன்மேல் சுமத்தும் அபராதம் எவ்வளவோ அவ்வளவு வெள்ளிச் சேக்கல் பெறும் ஒரு பழுதற்ற ஆட்டுக்கடாவை குற்றநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவந்து… ” (வச.15). குற்றநிவாரண பலி என்பது அறியாமையினால் செய்த பாவத்துக்கான பரிகாரத்தை முன்வைக்கிறது. இது துணிந்து வேண்டுமென்றே செய்கிற பாவத்தைக் குறித்துப் பேசவில்லை, மாறாக, நாம் விரும்பாவிட்டாலும் கூட நம்முடைய அறியாமையாலே…

April

பாவநிவாரண பலி: குற்றமனசாட்சியிலிருந்து விடுதலை

(வேதபகுதி: லேவியராகமம் 4:1-35) “ஒருவன் கர்த்தருடைய கட்டளைகளில் யாதொன்றை அறியாமையினால் மீறி, செய்யத்தகாததைச் செய்து பாவத்துக்கு உட்பட்டால், … தான் செய்த பாவத்தினிமித்தம் பழுதற்ற ஒரு இளங்காளையைப் பாவநிவாரண பலியாகக் கர்த்தருடைய சந்நிதியில் கொண்டுவரக்கடவன்” (வச.2,3). பழைய ஏற்பாட்டு லேவியராகமப் பலிகள் மனித குலம் தேவனுடனான தன்னுடைய உறவைக் கட்டி எழுப்புவதற்குப் பயன்படும் அடிப்படைத் தேவைகளாக உள்ளன. இப்பொழுது நாம் நான்காவதாக உள்ள, “பாவநிவராண பலிக்கு” நேராக வருகிறோம். பிற தகன பலிகளைப் போலக் காணப்பட்டாலும் இந்த…

April

சமாதானபலி: ஒரு பரிபூரண ஐக்கியம்

(வேதபகுதி: லேவியராகமம் 3:1-17) “ஒருவன் சமாதான பலியைப் படைக்க வேண்டுமென்று, மாட்டு மந்தையில் எடுத்துச் செலுத்துவானாகில் அது காளையானாலும் சரி, பசுவானாலும் சரி, பழுதற்றிருப்பதைக் கர்த்தருடைய சந்நிதியில் செலுத்தக்கடவன்” (வச. 1). சமாதான பலி பல வகைகளில் தகனபலிக்கு ஒத்ததுபோலக் காணப்பட்டாலும் குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது: தகனபலி முழுவதும் பலிபீடத்தில் தகனிக்கப்பட்டது, ஆனால் சமாதானபலியில் கொழுப்பும் முக்கியமான உள்ளுறுப்புகளும் தகனிக்கப்பட்டது, அதனுடைய மாம்சம் ஆசாரியர்கள் உண்ணுவதற்காக பிரித்துவைக்கப்பட்டது. இது கிறிஸ்துவுக்கும் தேவனுக்கும் உள்ள பரிபூரணமான ஐக்கியத்தைத் தெரிவிக்கிறது.…

April

போஜனபலி பலி: ஒரு பூரணமான வாழ்க்கை

(வேதபகுதி: லேவியராகமம் 2:1-16) “ஒருவன் போஜனபலியாகிய காணிக்கையைக் கர்த்தருக்குச் செலுத்த வேண்டுமானால், அவன் காணிக்கை மெல்லிய மாவாயிருப்பதாக … அதைப் பலிபீடத்தின்மேல் ஞாபகக் குறியாகத் தகனிக்கக்கடவன். அது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி” (வச. 1,2). இந்தப் பூமியில் மானிடத்தில் வெளிப்பட்ட கிறிஸ்துவின் பரிபூரண நடத்தையை போஜனபலி தெரிவிக்கிறது. இது ஓர் இரத்தமில்லாத பலி. இந்தப் போஜனபலி, மெல்லிய மாவு, எண்ணெய், தூபவர்க்கம், உப்பு ஆகியவற்றால் கலந்து செய்யப்படுகிறது. மேலும் போஜனபலியாக முதற்பலன்களைப் படைக்க நினைத்தால், அது…

April

சர்வாங்க தகன பலி: ஒரு முழுமையான ஒப்புவித்தல்

(வேதபகுதி: லேவியராகமம் 1:2-17) “உங்களில் ஒருவன் கர்த்தருக்குப் பலிசெலுத்த வந்தால், மாட்டு மந்தையிலாவது, ஆட்டு மந்தையிலாவது ஒரு மிருகத்தைத் தெரிந்தெடுத்து, பலிசெலுத்த வேண்டும். … இது கர்த்தருக்குச் சுகந்த வாசனையான தகனபலி” (வச. 2,9). தேவனுடைய மகிமை ஆசரிப்புக்கூடாரத்தை நிரப்பிற்று. இத்தகைய தெய்வீக மகிமையின் பிரசன்னத்தில் நிலைத்திருப்பதற்கு ஏற்றவாறு மக்கள் தகுதியாக்கப்படும்படியாக அவர்தாமே அதற்கான பலிமுறைகளைத் தந்தருளுகிறார். இந்தப் பலிகள், மனிதர்கள் பாவஞ்செய்துவிட்டால் தேவனுடைய தயவைப் பெற்று மீண்டும் அவருடன் ஒப்புரவாவதற்கும், பாவஞ்செய்யாதபோது பக்திவிநயத்துடன் மனபூர்வமாக ஒப்புவிப்பதற்காகவும்…

April

இன்றும் பேசும் இறைவன்

(வேதபகுதி: லேவியராகமம் 1:1) “கர்த்தர் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து மோசேயைக் கூப்பிட்டு, அவனை நோக்கி” (வச. 1). இதுவரை சீனாய் மலையில் வைத்து வானத்திலிருந்து பேசினார் (யாத். 20:22). இப்பொழுது தேவன் ஆசரிப்புக் கூடாரத்திலிருந்து பேசுகிறார் (வச. 1). மனிதர்கள் நடுவில் நான் வாசம்பண்ண எனக்கு ஒரு பரிசுத்த ஸ்லத்தை உண்டாக்குவார்களாக என்று தேவன் மோசேயிடம் கூறினார் (யாத். 25:8). இப்பொழுது அவர் கட்டளைப்படியே ஆசரிப்புக் கூடாரம் நிறுவப்பட்டுவிட்டது. தேவன் இந்த பூமியில் மனிதர்களுக்குள்ளே இந்தக் கூடாரத்தின் வாயிலாக…

April

கர்த்தருடைய மகிமையே பிரதான காரியம்

(வேதபகுதி: யாத்திராகமம் 40:1-38) “அப்பொழுது ஒரு மேகம் ஆசரிப்புக்கூடாரத்தை மூடினது; கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்பிற்று” (வச. 34). ஒரு காரியத்தின் துவக்கத்தைப் பார்க்கிலும் முடிவு நல்லது. யாத்திராகமத்தின் முதல் அதிகாரம் அடிமைத்தனம், துன்பம் வேதனை ஆகியவற்றுடன் தொடங்குகிறது. இறுதி அதிகாரம் மகிழ்ச்சி, மனநிறைவு, மகிமை ஆகியவற்றுடன் நிறைவடைகிறது. கிறிஸ்தவ வாழ்க்கையும் பள்ளத்தாக்கின் அனுபவங்களாலும் மலையுச்சியின் அனுபவங்களாலும் நிறைந்ததுதான். சில வேளைகளில் நாம் துன்பம் என்னும் குகையின் வழியாக இருளில் நடந்து செல்கிறோம். சில நேரங்களில் மகிழ்ச்சி…

April

மீண்டும் அடிப்படைக்குத் திரும்புவோம்

(வேதபகுதி: யாத்திராகமம் 39:32-43) “இப்படியே ஆசரிப்புக்கூடாரமாகிய வாசஸ்தலத்தின் வேலையெல்லாம் முடிந்தது; கர்த்தர் மோசேக்குக் கற்பித்தபடியெல்லாம் இஸ்ரவேல் புத்திரர் செய்தார்கள்” (வச. 32). இரட்சிப்பின் மேன்மை என்ன? அது ஒருவரை எவ்விதமாக மாற்றுகிறது? இஸ்ரயேல் மக்கள் முன்பு எகிப்தில் பார்வோனுக்காக கட்டடங்களைக் கட்டிக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது யெகோவா வாசம்பண்ணும்படியாக ஒரு வீட்டைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கையிலும் தேவன் இதையே எதிர்பார்க்கிறார். திருச்சபைகளானது உலக ஆதாயத்தை உதறித்தள்ளியோரின் தன்னலமற்ற சேவையினாலேயே கட்டப்பட்டது என்பதை வரலாறு நமக்குக் கற்றுத் தருகிறது. இந்த வாசஸ்தலம்…