April

பெசலெயேலும் அவனுடைய குழுவினரும்

(வேதபகுதி: யாத்திராகமம் 35:30-36:8) “பெசலெயேலையும் அகோலியாபையும், கர்த்தரால் ஞானமடைந்து அந்த வேலைகளைச் செய்யவரும்படி தங்கள் இருதயத்தில் எழுப்புதலைடைந்த ஞான இருதயத்தாராகிய எல்லாரையும், மோசே வரவழைத்தான்” (வச. 36:2). ஆசரிப்புக்கூடாரத்தின் திட்டப் பொறியாளர் தேவனே ஆவார்; பெசலெயேலும் அவனுடைய குழுவினரும் அவர் அருளிய வரைபடத்தின்படி அதை நுட்பமான முறையில் வடிவமைத்த கைவினைஞர்கள் ஆவார்கள். அவ்வரைபடத்தின்படி அவர்கள் ஓய்வில்லாமல், சோர்ந்துபோகாமல் கடினமாக உழைத்தார்கள். ஒவ்வொரு அம்சத்திலும் மேசியாவைப் பிரதிபலிக்கிற ஆசரிப்புக்கூடாரத்தைக் கட்டியெழுப்புவதற்காக தங்களுடைய ஒவ்வொரு உழைப்பையும் வெளிப்படுத்தினார்கள். கிறிஸ்துவைப் பிரதிபலிக்கிற…

April

மனபூர்வமாக காணிக்கை கொடுத்தல்

(வேதபகுதி: யாத்திராகமம் 35:1-29) “உங்களுக்கு உண்டானதிலே கர்த்தருக்கு ஒரு காணிக்கையைக் கொண்டுவந்து செலுத்துங்கள்; மனமுள்ளவன் எவனோ அவன் அதைக் கொண்டு வரட்டும்” (வச. 5). இந்தப் பகுதியில் மூன்று முக்கியமான காரியங்களைப் படிக்கிறோம். ஓய்வு நாள் ஆசரிப்பு, ஆசரிப்புக்கூடாரப் பணிக்கான காணிக்கை கொடுத்தல் மற்றும் அதைக் கட்டுவதற்காக முன்வருதல். கர்த்தருக்குக் காணிக்கை கொடுப்பதும், அவருக்காக பணிசெய்ய முன்வருவதும் இருதயத்திலிருந்து வரவேண்டுமாகையால் அது முதலாவது ஓய்வு நாள் ஆசரிப்பின் மூலமாக ஆயத்தம் செய்யப்படுகிறது. சொந்த வேலைகளை ஒதுக்கிவைத்துவிட்டு, கர்த்தருக்குக்…

April

கிறிஸ்துவின் முகத்திலுள்ள மகிமையின் ஒளி

(வேதபகுதி: யாத்திராகமம் 34:18-35) “மோசே … சீனாய் மலையிலிருந்து இறங்குகிறபோது, தன்னோடே அவர் பேசினதினாலே தன் முகம் பிரகாசித்திருப்பதை அறியாதிருந்தான்” (வச. 29). மோசே உணவில்லாமலும், தண்ணீரில்லாமலும் நாற்பது நாட்கள் மலையில் தேவன்மேல் வைத்த அன்பினாலும் வாஞ்சையினாலும் அவருடன் இருந்தான். அவரோடு இருந்த நாட்கள் அவனுக்கு சில நிமிடங்கள் தோன்றி மறைகிற ஒரு கனவைப் போலவே இருந்திருக்கலாம். அவருடனான ஐக்கியம் நாட்களை மணித்துளிகளாக மாற்றியிருந்தது. ஒரு நண்பணிடம் பேசுவதுபோல, தேவனிடம் மோசே முகமுகமாய்ப் பேசினான். இந்தச் சந்திப்பு…

April

ஐக்கியத்தில் நிலைத்திருத்தலின் விளைவுகள்

(வேதபகுதி: யாத்திராகமம் 34:8-17) “ஆண்டவரே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்ததானால், எங்கள் நடுவில் ஆண்டவர் எழுந்தருள வேண்டும்; … எங்கள் பாவத்தை மன்னித்து எங்களை ஏற்றுக்கொள்ளும் ” (வச. 9). கிருபையும் சத்தியமும் நிறைந்த தேவனின் திவ்விய ஐக்கியத்தில் நிலைத்திருக்கும் ஒரு பரிசுத்தவானின் இருதயம் எவ்வாறு இருக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டை மோசேயிடம் நாம் காண்கிறோம். முதலாவது, தீவிரமாகத் தரைமட்டும் குனிந்து பணிந்து கொண்டான். ஆபிரகாம் முகங்குப்புற விழுந்து வணங்கியதுபோல (ஆதி. 17:3), சேனையின் அதிபதியாம் கர்த்தரைக்…

April

அன்பின் ஐக்கியத்தில் நிலைத்திருத்தல்

(வேதபகுதி: யாத்திராகமம் 34:1-7) “அப்பொழுது மோசே முந்தின கற்பலகைகளுக்கு ஒத்த இரண்டு கற்பலகைகளை இழைத்து, அதிகாலமே எழுந்திருந்து, கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டபடியே அவ்விரண்டு கற்பலகைகளையும் தன்கையிலே எடுத்துக்கொண்டு, சீனாய் மலையில் ஏறினான்” (வச. 18). முதலாவது, பத்துக் கட்டளைகள் எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளை தேவனே உண்டாக்கி மோசேயிடம் கொடுத்தார். துரதிஷ்டவசமாக மக்களின் பாவங்களினிமித்தம் மோசே அதை உடைத்துவிட்டான். மக்கள் பிரமாணங்களை நிறைவேற்றக்கூடாதபடி, குறைவுள்ளவர்களாகவே இருக்கிறார்கள் என்பதை இது தெரிவிக்கிறது. இரண்டாவது, கிறிஸ்துவின் மத்தியஸ்த ஊழியத்துக்கு அடையாளமாயிருக்கிற மோசே…

April

தேவ தயவின் ஐசுவரியம்

(வேதபகுதி: யாத்திராகமம் 33:18-23) “அப்பொழுது அவன், உம்முடைய மகிமையை எனக்குக் காண்பித்தருளும் என்றான்” (வச. 18). ஒரு மத்தியஸ்தனாக முதலாவது, மோசே தேவனிடம், உம்முடைய மக்களை அழித்துவிட வேண்டாம் என்று வேண்டினான். அடுத்ததாக நீர் அவர்கள் நடுவில் பிரசன்னராயிருக்க வேண்டும் என்று கேட்டான். இப்பொழுது தேவனுடைய அன்பில் ஒரு படி இன்னும் நெருக்கமாக முன்னேறி, “உம்முடைய மகிமையைக் எனக்குக் காண்பித்தருளும்” என்றான். முதலிரண்டு விண்ணப்பங்களுக்கும் கர்த்தர் தம்முடைய கிருபையால் பதில் அளித்தார். இக்கேள்விக்கு, “என்னுடைய தயையை எல்லாம்…

April

கிருபையின் அளவற்ற ஐசுவரியம்

(வேதபகுதி: யாத்திராகமம் 33:12-17) “அதற்கு அவர்: என் சமுகம் உனக்கு முன்பாகச் செல்லும், நான் உனக்கு இளைப்பாறுதல் தருவேன் என்றார்” (வச. 14). நம்முடைய ஆசீர்வதிக்கப்பட்ட மத்தியஸ்தராம் கர்த்தருக்கு அடையாளமாகத் திகழ்கிற மோசேயின் பரிந்து பேசுதல், தேவனுடைய கோபம் மக்களின் மேல் ஊற்றப்படாமல் இருப்பது மட்டுமின்றி, அவர்களைப் பத்திரமாகப் பாதுகாக்கவும் வேண்டும் என்பதாக இருந்தது. பாவம் பெருகிற இஸ்ரயேல் மக்களிடத்தில் அவருடைய கிருபையும் அதிகமாகப் பெருகிற்று. நான் உங்கள் நடுவே செல்லமாட்டேன், இந்த மக்கள் வணங்காக்கழுத்துள்ளவர்கள் எனச்…

April

மன்னிப்பும் மறுசீரமைப்பும்

(வேதபகுதி: யாத்திராகமம் 33:1-11) “மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளையத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக் கூடாரம் என்று பெயரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளையத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்” (வச. 7). தேவன் தம்முடைய மக்களின் பாவங்களை மன்னித்துவிட்டார் என்று மோசே அறிந்தபோதிலும், “நான் உங்கள் நடுவில் வரமாட்டேன், அதற்குப் பதிலாக ஒரு தூதனை அனுப்புவேன்” என்று தேவன் சொன்ன காரியம் மோசேயின் இருதயத்தைப் பாதித்தது. தூதனின் துணையிருந்தால்கூட, இத்தனை பெரிய மக்கள்…

April

கிருபையும் சத்தியமும் நிறைந்த கிறிஸ்து

(வேதபகுதி: யாத்திராகமம் 32:15-35) “அவர்கள் உண்டுபண்ணின கன்றுக் குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்” (வச. 20). மிகுந்த சாந்தகுணமுள்ள மோசேயின் கோபத்தை இங்கே பார்க்கிறோம். இயேசு கிறிஸ்து கிருபையும் சத்தியமும் நிறைந்தவராய் நமக்குள்ளே வாசம்பண்ணினார். அவர் அன்பானவராகவும் மட்டுமின்றி, நீதியுள்ளவராகவும் விளங்கினார். மோசேயைப் போல அவர் கையில் பத்துக் கட்டளைகள் அடங்கிய பலகைகளைப் பிடித்துக்கொண்டு வரவில்லை. ஆயினும் நியாயப்பிரமாணம் அவருடைய உள்ளத்துக்குள் இருந்தது.…

April

மெய்யான மத்தியஸ்தராகிய கிறிஸ்து

(வேதபகுதி: யாத்திராகமம் 32:11-14) “மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகாபலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெறிவதென்ன? … என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான் ” (வச. 11,13). இஸ்ரயேல் மக்கள் பொன் கன்றுக் குட்டியை வணங்கி, தேவனுக்கு விரோதமான பாவச்செயல்களில் ஈடுபட்டார்கள். தேவன் தாமே கொடுத்த பத்துக் கட்டளைகளில் முதல் கட்டளையை மீறினார்கள். தேவனுடைய கோபம் பற்றியெரிந்தது. இவர்களை அழித்துப்போடும்படி “என்னை விட்டுவிடு”, உன்னைப்…