May

உன்னத தேவனின் உயரிய எதிர்பார்ப்பு

(வேதபகுதி: லேவியராகமம் 27:14-34) “இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்லும்படி கர்த்தர் சீனாய் மலையில் மோசேக்கு விதித்த கட்டளைகள் இவைகளே” (வச. 34). ஆசரிப்புக் கூடாரத்தில் செலுத்தப்படும் பலிகள் பற்றிய கட்டளைகளுடன் தொடங்குகிற இந்நூல், அவரால் மீட்டுக்கொள்ளப்பட்ட மக்களின் உற்சாகம் நிறைந்த விசேஷ பொருத்தனைகளுடன் முடிவடைகிறது. நம்மை ஆண்டவருக்கு பொருத்தனையாகப் படைப்பது மட்டுமின்றி, நம்முடைய விலங்குகளோ, வீடுகளோ, நிலங்களோ அவற்றையும் அவருடைய நாமத்துக்கு மகிமையாகப் பொருத்தனையாகப் படைக்கலாம். இவை அவரை ஆராதிக்கக்கூடிய நம்முடைய பார்வையை அதிகரிக்குமானால், தேவனுடைய திட்டங்களுக்கும் நோக்கங்களுக்கும்…

May

மனபூர்வமான கொடுத்தல்

(வேதபகுதி: லேவியராகமம் 27:1-13) “… யாதாமொருவர் ஒரு விசேஷித்த பொருத்தனை பண்ணியிருந்தால், பொருத்தனை பண்ணப்பட்டவர்கள் உன் மதிப்பின்படி கர்த்தருக்கு உரியவர்கள்” (வச. 2). ஆண்களோ பெண்களோ யாராயிருந்தாலும், அவர்கள் மனபூர்வமான பொருத்தனையைப் பண்ணிக்கொண்டால், பொருத்தனைக்குரிய நிபந்தனைகளுக்கு கீழ்ப்படிய வேண்டும். “நீ தேவனுக்கு ஒரு பொருத்தனை பண்ணிக்கொண்டால், அதைச் செலுத்தத் தாமதியாதே; அவர் மூடரில் பிரியப்படுகிறதில்லை; நீ நேர்ந்துகொண்டதைச் செய்” (பிர.5;4) என்று சாலொமோன் ஞானியும் இதுபற்றிக் கூறுகிறார். ஆண், பெண், வயது ஆகிய வேறுபாடுகளுக்கு ஏற்ப செலுத்த…

May

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கான ஆதாரம்

(வேதபகுதி: லேவியராகமம் 26:1-46) “உங்கள் நடுவில் என் வாசஸ்தலத்தை ஸ்தாபிப்பேன்; என் ஆத்துமா உங்களை அரோசிப்பதில்லை. நான் உங்கள் நடுவில் உலாவி, உங்கள் தேவனாயிருப்பேன், நீங்கள் என் ஜனமாயிருப்பீர்கள்” (வச. 11,12). சமாதானமுள்ள, அமரிக்கையான, சண்டை சச்சரவுகள் இல்லாத, பயமற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை வாழவே ஆசைப்படுவோம். இஸ்ரயேல் மக்களுக்காக இதற்கான ஆதாரத்தை தேவன் இந்தப் பகுதியில் எழுதிவைத்திருக்கிறார். இது ஆசீர்வாதங்களும், தேவனுடைய வாக்குறுதிகள் நிறைவேறுதலும் இம்மக்கள் அவருடைய வார்த்தைகளுக்குக் கீழ்ப்படிவதைச் சார்ந்து இருக்கிறது என்பதை நமக்கு அறிவுறுத்துகிறது.…

May

சமூக பொருளாதார சமத்துவம்

(வேதபகுதி: லேவியராகமம் 25:1-55) “தேசம் என்னுடையதாயிருக்கிறபடியால், நீங்கள் நிலங்களை அறுதியாய் விற்க வேண்டாம், நீங்கள் பரதேசிகளும் என்னிடத்தில் அந்நியருமாயிருக்கிறீர்கள் … உங்கள் சகோதரன் தரித்திரப்பட்டு தன் காணியாட்சியிலே சிலதை விற்றால், அவன் இனத்தான் ஒருவன் வந்து தன் சகோதரன் விற்றதை மீட்கக்கடவன்” (வச. 10). இஸ்ரயேல் நாட்டின் சமுதாய பொருளாதாரம் ஸ்திரத்தன்மை தேவன் அருளிய மூன்று அடிப்படைக் கோட்பாடுகளைக் கொண்டதாக விளங்கியது. முதலாவது, தேவனே நிலத்துக்குச் சொந்தக்காரர், அவரே அதனுடைய முழுக் கட்டுப்பாட்டையும் வைத்திருக்கிறார் (வச. 23),…

May

இரண்டு சுபாவங்களின் போராட்டம்

(வேதபகுதி: லேவியராகமம் 24:1-23) “அக்காலத்திலே இஸ்ரவேல் ஜாதியான ஸ்திரீக்கும், எகிப்திய புருஷனுக்குப் பிறந்த புத்திரனாகிய ஒருவன் இஸ்ரவேல் புத்திரரோடுகூடப் புறப்பட்டு வந்திருந்தான். இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் பாளையத்தில் சண்டைபண்ணினார்கள்” (வச. 10). பாதி இஸ்ரேலியனாகவும் பாதி எகிப்தியனாகவும் இருந்த ஒரு மனிதனின் கதை இங்கே சொல்லப்பட்டுள்ளது. இவனுடைய தாய் இஸ்ரேலியப் பெண், தந்தை எகிப்தியன். இவன் இஸ்ரயேல் மக்களுடன் வந்ததில் எவ்விதத் தவறும் இல்லை, ஆயினும் இவனுடைய செயல் அல்லது இவன் நடந்துகொண்ட விதம் நமக்குப்…

May

கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருத்தல்

(வேதபகுதி: லேவியராகமம் 23:23-44) “நீ இஸ்ரவேல் புத்திரரோடு சொல்லவேண்டியது என்னவென்றால், அந்த ஏழாம் மாதம் பதினைந்தாம் தேதி முதல் ஏழு நாளளவும் கர்த்தருக்கு ஆசரிக்கும் கூடாரப்பண்டிகையாயிருப்பதாக” (வச. 24). இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து வெளியேறி, கானான் நாட்டில் சேருமட்டுமாக கூடாரங்களில் குடியிருந்தார்கள். வருங்காலத் தலைமுறையினர் இதை அறிந்துகொள்ளும்பொருட்டாகவும், எதிர்காலத்தில் இவர்கள் அடையப்போகும் ஆசீர்வாதங்களைக் குறிக்கும்பொருட்டும் இந்த கூடாரப்பண்டிகை ஆசரிக்கப்பட்டது. இது அறுவடையின் முடிவுறு காலத்தில் மகிழ்ச்சியுடனும் நன்றியுடனும் கொண்டாடப்பட்டது. இது பாவநிவிர்த்திப் பண்டிகை முடிந்தவுடன் அனுசரிக்கப்பட்டது.…

May

மன்னிப்பும் இரக்கமும்

(வேதபகுதி: லேவியராகமம் 23:26-32) “அந்த ஏழாம் மாதம் பத்தாந்தேதி உங்களுக்குப் பாவநிவர்த்தி செய்யும் நாளும் சபைகூடும் பரிசுத்த நாளுமாயிருப்பதாக; அப்பொழுது நீங்கள் உங்கள் ஆத்துமாக்களைத் தாழ்மைப்படுத்தி, கர்த்தருக்குத் தகனபலி செலுத்தக்கடவீர்கள்.” (வச. 27). இஸ்ரயேல் மக்களின் நாட்காட்டியில் சொல்லப்பட்டுள்ள பண்டிகைகளில் முக்கியமானது யாம் கீப்போர் என்று அழைக்கப்படுகிற “பாவநிவர்த்தி பெருநாள்” ஆகும். லேவியராகமம் பதினாறாம் அதிகாரத்தில் இந்தப் பண்டிகையைக் குறித்த முறைகள் மற்றும் ஆசாரியனின் செயல்பாடுகள் விவரிக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதியிலோ இந்தப் பாவநிவர்த்தி நாளின்போது மக்கள் நடந்துகொள்ள…

May

கிறிஸ்துவுக்குள் நினைகூரப்படுதல்

(வேதபகுதி: லேவியராகமம் 23:23-25) “நீ இஸ்ரவேல் புத்திரரோடு சொல்லவேண்டியது என்னவென்றால், உங்களுக்கு ஏழாம் மாதம் முதலாந்தேதி எக்காள சத்தத்தால் ஞாபகக்குறியாய் கொண்டாடுகிற பண்டிகை என்கிற சபை கூடும் பரிசுத்த ஓய்வு நாளாய் இருப்பதாக” (வச. 24). பெந்தெகொஸ்தே பண்டிகை முடிந்து ஒரு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ஏழாம் மாதத்தில் இந்த எக்காளப் பண்டிகை வருகிறது. மக்கள் தங்கள் அறுவடையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிற தருணத்தில் எவ்வித ஆசரிப்பையும் கொடுக்காமல் கால இடைவெளிவிட்டு இந்தப் பண்டிகையை ஆசரிக்கும்படி செய்ததால், தேவன்…

May

கிறிஸ்துவுக்குள் ஒன்றாக…

(வேதபகுதி: லேவியராகமம் 23:15-22) “நீங்கள் அசைவாட்டும் கதிர்க்கட்டைக் கொண்டுவரும் ஓய்வுநாளுக்கு மறுநாள் முதற்கொண்டு, எண்ணத்துவங்கி, ஏழுவாரங்கள் நிறைவேறின பின்பு, ஏழாம் ஓய்வுநாளுக்கு மறுநாளாகிய ஐம்பதாம் நாள் மட்டும் எண்ணி, கர்த்தருக்குப் புதிய போஜனபலியைச் செலுத்தக்கடவீர்கள்” (வச. 15,16). முதற்பலன்களின் பண்டிகை கொண்டாடி ஏழு வாரங்களுக்குப் பின்வரும் வாரத்தின் முதல் நாளில் வருவதால் இது வாரங்களின் பண்டிகை என்று அழைக்கப்படுகிறது. ஐம்பதாம் நாளில் அனுசரிப்பதால் இது பெந்தெகொஸ்தே பண்டிகை என்றும் அழைக்கப்படுகிறது. முதற்பலன்களின் பண்டிகை கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு அடையாளமாக…

May

முதலாவது கர்த்தருக்கே

(வேதபகுதி: லேவியராகமம் 23:9-14) “நான் உங்களுக்குக் கொடுக்கும் தேசத்திலே நீங்கள்போய்ச் சேர்ந்து, அதின் வெள்ளாண்மையைஅறுக்கும்போது, உங்கள் அறுப்பின் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை ஆசாரியனிடத்தில் கொண்டவரக்கடவீர்கள்” (வச. 10). தேவன் வாக்குத்தத்தம் செய்த கானான் நாட்டில் இஸ்ரயேல் மக்கள் போய்ச் சேர்ந்த பின், அங்கு அவர்கள் விவசாய வேலையில் ஈடுபட்டு, அறுவடை செய்யும்போது கைக்கொள்ளும்படி இந்த முதற்பலன்களின் பண்டிகை கொடுக்கப்பட்டது. அவர்கள் பாலைவனத்தில் பயணம் செய்யும்போது விவசாயம் செய்வதற்கான வாய்ப்புகள் இல்லை, ஆகவே அவர்கள் பயண காலத்தில் இதை…