July

சுதந்தரத்தைக் கட்டிக்காத்த சகோதரரிகள்

(வேதபகுதி: எண்ணாகமம் 36:1-13) “கர்த்தர் மோசேக்குக் கட்டளையிட்டபடியே செலோப்பியாத்தின் குமாரத்திகள் செய்தார்கள்” (வச. 10). தேவன் ஒரு நாட்டுக்காக மட்டும் கரிசனையுள்ள தேவனல்ல, குடும்பங்களின்மீதும், தனிப்பட்ட நபர்களின்மேலும் அக்கறையுள்ள தேவனாக இருக்கிறார். தந்தையற்ற, சகோதரர்கள் யாருமில்லாத செலோப்பியாத்தின் மகள்களான, மக்லாள், திர்சாள், ஒக்லாள், மில்காள், நோவாள் ஆகியோரின் மேலும் தேவன் கவனம் வைக்கிறார். இவர்களுக்கு உரிய சுதந்தரத்தை அளித்து இவர்களுக்கான உரிமையை நிலைநாட்டினார். ஆதரவற்ற பெண்கள், விதவைகள், திக்கற்ற பெண்கள் ஆகியோரின்மேல் தேவன் சிறப்பான கவனம் செலுத்துகிறார்.…

July

அடைக்கலப்பட்டணங்களின் அவசியம்

(வேதபகுதி: எண்ணாகமம் 35:16-34) “நீங்கள் இருக்கும் தேசத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதிருங்கள்; இரத்தம் தேசத்தைத் தீட்டுப்படுத்தும்; இரத்தம் சிந்தினவனுடைய இரத்தத்தினாலேயொழிய, வேறொன்றினாலும் தேசத்திலே சிந்துண்ட இரத்தத்திற்காகப் பாவநிவிர்த்தியில்லை” (வச. 33). நீங்கள் குடியிருக்கும் என் வாசஸ்தலமாகிய தேசத்தை தீட்டுப்படுத்தாதிருங்கள் என்று கர்த்தர் கூறுகிறார் (வச. 34). குற்றங்களும் தீமைகளும் பெருகினால் குற்றவாளிகளும் பெருகுவார்கள். குற்றவாளிகள் பட்டணங்களையும் தேசத்தையும் வழிநடத்தும் நிலை நேரிடும். சில வகை குற்றங்கள் சரியென போதிக்கப்படும். மக்களின் நடுவில் தேவபயம் இல்லாமற்போகும். பழிவாங்குதலும், கொலைகளும் பெருகும்.…

July

அடைக்கலப்பட்டணங்கள்

(வேதபகுதி: எண்ணாகமம் 35:9-15) “கைப்பிசகாய் ஒருவனைக் கொன்றுபோட்டவன் ஓடிப்போயிருக்கத்தக்க அடைக்கலப் பட்டணங்களாகச் சில பட்டணங்களைக் குறிக்கக்கடவீர்கள் ” (வச. 10). லேவியர்களுக்குக் கொடுக்கப்பட்ட நாற்பத்தியெட்டு பட்ணங்களில் ஆறு அடைக்கலப்பட்டணங்கள் ஏற்படுத்தப்பட்டன. ரூபன், காத், மனாசேயின் பாதிக்கோத்திரம் ஆகிய மூவரும் குடியேறி பகுதியாகிய யோர்தானுக்கு கிழக்கே மூன்று பட்டணங்களும், மீதமுள்ள கோத்திரங்கள் குடியேறிய கானானில் மூன்று பட்டணங்களும் ஏற்படுத்தப்பட்டன. கேதேஸ், சீகேம், எபிரோன், பேசேர், ராமோத், கோலான் என்பவையே அவை (யோசுவா 20:7,8). கைப்பிசகாய், முன்கூட்டியே திட்டமிடாமல், எவ்வித…

July

லேவியர்: கர்த்தருடைய ஊழியர்கள்

எண்ணாகமம் 35:1-8 “இஸ்ரவேல் புத்திரர் தங்கள் காணியாட்சியாகிய சுதந்தரத்திலே லேவியருக்குக் குடியிருக்கும்படி பட்டணங்களைக் கொடுக்க வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிடு” (வச. 2). லேவியர்கள் தேவனுடைய வேலைக்காக அழைக்கப்பட்டவர்கள். இவர்களுடைய பணி ஆசரிப்புக்கூடாரத்தையும் அதைச் சார்ந்ததுமாகவே இருந்தது. ஆசாரிப்புக்கூடாரம் நிர்மாணிக்கப்பட்டது தொடங்கி, முப்பத்தெட்டு ஆண்டுகளாக பாலைவனத்தில் அதைச் சுமந்து வந்தவர்கள் இவர்களே. முந்தின அதிகாரத்தில் நாட்டைப் பங்கு பிரிக்கும் குழுவில் இவர்களுடைய பெயர்கள் இடம்பெறவில்லை. ஒருவேளை எதிர்காலத்தில் தங்களுடைய நிலை என்னவாகும் என இவர்கள் யோசித்திருக்கலாம். கர்த்தர்…

July

சுதந்தர நாட்டின் எல்லைகள்

எண்ணாகமம் 34:1-29 “கானான் தேசம் அதின் எல்லைகள் உட்பட உங்களுக்குச் சுதந்தரமாகக் கிடைக்கப்போகிறது” (வச. 2). கடந்து வந்த பாதையை பின்னோக்கிப் பார்க்கும்படி நினைவூட்டிய தேவன் இப்பொழுது எதிர்கால ஆசீர்வாதத்தின் எல்லைகளை முன்னோக்கிப் பார்க்கும்படி மோசேயின் மூலமாகப் பேசுகிறார். நாம் பெரும்பாலும் கடந்த காலத்தின் நினைவுகளில் மூழ்கிக்கிடக்கும் இயல்புடையவர்கள். சில சமயங்களில் கடந்தகால சுயபெருமையைப் பேசுவோம், அல்லது வீழ்ச்சியின் மனக்கிலேசத்தின் வருத்தத்தில் மூழ்கிக்கிடப்போம். நாம் இவற்றிலிருந்து விடுபட்டு, கடந்த காலத்தில் கர்த்தர் நமக்குச் செய்த கிருபையின் செயல்களை…

July

தனித்துவமான வாழ்க்கைக்கு அழைப்பு

(வேதபகுதி: எண்ணாகமம் 33:50-56) “அந்தத் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளும்படி அதை உங்களுக்குக் கொடுத்தேன்” (வச. 53). நீண்டகாலக் காத்திருப்பு நம்முடைய இருதயங்களை சோர்ந்துபோகச் செய்யும். ஆயினும் விரும்பியது கிடைக்கும் போது சோர்ந்துபோன இருதயங்கள் புத்துணர்ச்சியும் மகிழ்ச்சியும் அடையும். இஸ்ரயேல் மக்கள் நாற்பது ஆண்டுகள் பாலைவன அலைச்சலுக்குப் பின்னர், இப்பொழுது தேவன் ஆபிரகாமுக்கு வாக்குப்பண்ணின கானானின் எல்லைக்கு வந்துவிட்டார்கள். இதுவே அவர்களுடைய இப்பூமிக்குரிய கனவு தேசம். இதுவரை நாடோடிகளாக, அந்நிய தேசத்தில் அடிமைகளாக வாழ்ந்த வாழ்க்கைக்கு முடிவு உண்டாகி, சுதந்தர…

July

தேவனே நமக்கு அடைக்கலம்

(வேதபகுதி: எண்ணாகமம் 33:1-49) “மோசே தனக்குக் கட்டளையிட்டபடியே அவர்கள் புறப்பட்ட பிரகாரமாக அவர்களுடைய பிரயாணங்களை எழுதினான்; அவர்கள் ஒவ்வொரு இடங்களிலிருந்து புறப்பட்டுப்பண்ணின பிரயாணங்களாவன” (வச. 2). நித்திய கானானை நோக்கி இந்த உலகம் என்னும் வனாந்தரத்தின் வழியாக பயணம் செய்துகொண்டிருக்கிற நம்மில் பலருக்கு அடிக்கடியாக வீடு மாறின அனுபவம் இருக்கும். சென்னை வந்து பதினைந்து ஆண்டுகளில் நாங்கள் இதுவரை ஏழு வீடுகள் மாறியிருக்கிறோம். ஒவ்வொரு முறை வீடு மாறுவதற்கும் ஏதாவது ஒரு காரணம். அவற்றில் சில சந்தோஷமான…

July

சகோதரர்களை மறந்துவிடவேண்டாம்

(வேதபகுதி: எண்ணாகமம் 32:20-42) “அப்பொழுது மோசே காத் புத்திரருக்கும், ரூபன் புத்திரருக்கும், யோசேப்பின் பாதிக் கோத்திரத்தாருக்கும் எமோரியருடைய … தேசங்களையும் அவைகளிலுள்ள பட்டணங்களையும் கொடுத்தான்” (வச. 33). ரூபன் வழிவந்தவர்களும், காத் சந்ததியினரும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தாரும் யோர்தானுக்கு இக்கரையில் தங்களுக்கான சுதந்தரத்தைப் பெற்றுக்கொண்டார்கள். பல நேரங்களில் இஸ்ரயேல் நாட்டின் தேசிய வாழ்க்கையோடும், சமய வழிபாடுகளுக்கும் இவர்கள் குடும்பமாக இணைந்து செல்ல முடியாமல் போவதற்கு இந்தத் தெரிந்தெடுப்பு ஒரு காரணமாக இருந்துவிட்டது. கர்த்தர்மேல் பெரும் வாஞ்சையும் விருப்பமும்…

July

யோர்தானைத் தாண்டுவோம்

எண்ணாகமம் 32:1-19 “ரூபன் புத்திரருக்கும் காத் புத்திரருக்கும் ஆடுமாடுகள் மிகவும் திரளாயிருந்தது; அவர்கள் யாசேர் தேசத்தையும், கீலேயாத் தேசத்தையும் பார்த்தபோது அது ஆடுமாடுகளுக்கு தகுந்த இடமென்று கண்டார்கள்” (வச. 27). ரூபன் வழிவந்தவர்களும், காத் சந்ததியினரும் தங்கள் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தீர்மானத்தை எடுத்தார்கள். முன்னொரு நாளில் லோத்து ஆடுமாடுகளின் நிமித்தம், நீர்வளம் பொருந்திய தேசத்தை தெரிந்துகொண்டதுபோல, இந்த மக்களும் தங்கள் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிறைந்த இடத்தைத் தெரிந்துகொண்டார்கள். “ஒருவனுக்கு எவ்வளவு திரளான ஆஸ்திகள் இருந்தாலும்…

July

கொடுங்கள் கொடுக்கப்படும்

(வேதபகுதி: எண்ணாகமம் 31:25-54) “கொள்ளையடிக்கப்பட்டதை இரண்டு பங்காகப் பங்கிட்டு, யுத்தத்திற்குப் படையெடுத்துப்போனவர்களுக்கும் சபையனைத்திற்கும் கொடுங்கள்” (வச. 27). நாம் அனைவருமே ஆவிக்குரிய போரில் பங்கேற்றுள்ளோம். ஆயினும் இப்போரில் சிலர் மட்டும் முன் வரிசையில் நிற்கின்றனர். இவர்கள் தாக்குதலை நேரடியாகச் சந்திக்க வாய்ப்புள்ளவர்கள். இன்றைக்கும் சபை மக்கள் சமாதானமாகவும் பாதுகாப்புடனும் வாழ்வதற்கு சபைத் தலைவர்களுடைய பங்களிப்பு அதிகம் இருக்கிறது. புதிய புதிய உபதேசங்கள், கள்ளப்போதகர்களின் தாக்குதல்கள், சபையைப் பாழ்படுத்துவதற்கென சபைக்குள்ளேயிருந்து எழும்பும் ஆட்டுக்குட்டியின் வேடம் தரித்த ஓநாய்கள் போன்றவற்றை…