April

விசுவாசத்தின் இலக்கு கிறிஸ்துவே

(வேதபகுதி: யாத்திராகமம் 32:1-10) “அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்” (வச. 4). இஸ்ரயேல் மக்களின் வரலாற்றில், இந்த நாள் ஆரோனின் செயலால் ஒரு மோசமான நாளாக மாறியது. மோசே மலையில் தேவனிடத்தில் கட்டளைகளைப் பெற்றுக்கொண்டிருந்த சமயத்தில் ஆரோன் மக்களை பல வழிகளில் தவறாக வழிநடத்தினான். இஸ்ரயேல் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாகி புறப்பட்டு…

April

கிறிஸ்துவுக்குள் விசுவாசிகளின் மகிழ்ச்சியும் ஆராதனையும்

(வேதபகுதி: யாத்திராகமம் 31:12-18) “ஆகையால் இஸ்ரவேல் புத்திரர் தங்கள் தலைமுறைதோறும் ஓய்வுநாளை நித்திய உடன்படிக்கையாக ஆசரிக்கும்படி, அதைக் கைக்கொள்ளக்கடவர்கள்” (வச. 16). தேவன் இஸ்ரவேல் மக்களுக்கென சிறப்பான வகையில் அருளிய கட்டளையே பரிசுத்த ஓய்வுநாள் ஆசரிப்பாகும். “இது உங்கள் தலைமுறை தோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்” (வச. 13,17) எனத் தேவன் இதைக் குறித்துக் கூறினார். யாத்திராகமத்தின் பதினாறாம் அதிகாரத்தில் மன்னாவின் தொடர்பில் கொடுக்கப்பட்ட இக்கட்டளை, இருபதாம் அதிகாரத்தில் பத்துக் கற்பனையுடன் தொடர்பில் கொடுக்கப்பட்ட இக்கட்டளை, இப்பகுதியில்…

April

தேவ ஆவியால் நிரப்பப்பட்ட ஞான இருதயம்

(வேதபகுதி: யாத்திராகமம் 31:1-11) “… ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்” (வச. 6). தேவன் மோசேயிடம் கட்டளையிட்டபடியே ஆசரிப்புக்கூடாரம், அதிலுள்ள பொருட்கள், அதில் பயன்படுகிற திரைகள், ஆசாரியர்களின் ஆடைகள், அபிஷேக எண்ணெய், தூபவர்க்கம் ஆகிய அனைத்தையும் செய்வதற்காக அவர் பெசலேயேலையும், இவனுக்குத் துணையாக அகோலியாபையும், மற்றும் பல ஞான இருதயமுள்ளவர்களையும் அழைத்து அவர்களைப் பரிசுத்த ஆவியால் நிரப்பினார். தம்முடைய பணியைச் செய்யும்படி எப்பொழுதெல்லாம், எவர்களையெல்லாம் அழைக்கிறாரோ…

April

கிறிஸ்துவின் நறுமணமிக்க ஊழியம்

(வேதபகுதி: யாத்திராகமம் 30:34-38; 37:29) “… கர்த்தர் மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும், சுத்தமான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து, தைலக்காரன் செய்கிறதுபோல அதற்குப் பரிமளமேற்றி, துப்புரவான பரிசுத்த தூபவர்க்கமாக்கி … சாட்சி சந்நிதியில் வைப்பாயாக” (வச. 34-36). பொன் தூபபீடத்தில் தூபங்காட்டுகிறதற்கான தூபவர்க்கம் தயாரிக்கும் முறையையும் அதன் பயன்பாட்டையும் இப்பகுதி விவரிக்கிறது. வெள்ளைப்போளம், குங்கிலியம், அல்பான் பிசின், சாம்பிராணி ஆகிய நான்கு வாசனைப் பொருட்களால் இது ஆனது. ஆசரிப்புக்கூடாரத்திலுள்ள ஒவ்வொரு…

April

*கிறிஸ்துவின் நற்கந்தங்களாகிய விசுவாசிகள் *

(வேதபகுதி: யாத்திராகமம் 30:22-33) “… பரிமள தைலக்காரன் செய்வதுபோல, கூட்டப்பட்ட பரிமள தலைமாகிய சுத்தமான பரிமள தைலத்தை உண்டுபண்ணுவாயாக; அது பரிசுத்த அபிஷேக தைலமாயிருக்கக்கடவது” (வச.25). ஆசாரியர், ஆரிப்புக்கூடாரம், அதிலுள்ள பொருட்கள் ஆகியவற்றைப் பரிசுத்தமாக்குகிற பரிசுத்த அபிஷேக தைலத்தைச் செய்யும் முறை, பயன்படுத்தும் முறை, எவ்விதமாகப் பயன்படுத்தக்கூடாது போன்ற விவரங்களை இப்பகுதியில் படிக்கிறோம். இது வெள்ளைப்போளம், கருவாப்பட்டை (சந்தனக்கட்டை), வசம்பு, இலவங்கப்பட்டை ஆகிய நான்கு நறுமணப்பொருட்களை சுத்தமான ஒலிவ எண்ணெயில் கலந்து உருவாக்கப்படுகிறது. இதன் செய்முறையையும், அளவையும்…

April

நம்முடைய அன்றாடச் சுத்திகரிப்பு

(வேதபகுதி: யாத்திராகமம் 30:17-21; 38:8) “கழுவுகிறதற்கு வெண்கலத்தால் ஒரு தொட்டியையும், வெண்கலத்தால் அதின் பாதத்தையும் உண்டாக்கி, அதை ஆசரிப்புக்கூடாரத்திற்கும் பலிபீடத்திற்கும் நடுவே வைத்து, அதிலே தண்ணீர் வார்ப்பாயாக” (வச. 18). ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள பொருட்களில், ஆசாரிய ஊழியத்தின் தொடர்பில் மிக முக்கியமானவைகளில் இந்த வெண்கலத் தொட்டியும் ஒன்றாகும். இது பொன் தூபபீடம் வைக்கப்பட்டிருந்த பரிசுத்த ஸ்தலத்துக்கும் வெண்கலப் பலிபீடத்துக்கும் நடுவே வைக்கப்பட்டிருந்தது. பலியின் மூலமாகத் தகுதியாக்கப்படுகிற ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திற்குச் சென்று தூபங்காட்டுவதற்கு முன் (ஆராதிப்பதற்கு முன்)…

April

ஆத்துமாவுக்காக மீட்கும் பொருள்

(வேதபகுதி: யாத்திராகமம் 30:11-16) “நீ இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் இலக்கத்தின்படி கணக்குப் பார்க்கும் பொருட்டு, அவர்களை எண்ணும்போது, அவர்களுக்குள்ளே ஒரு வாதை உண்டாகாதபடிக்கு அவர்களில் ஒவ்வொருவனும் எண்ணப்படும் சமயத்தில் தன் தன் ஆத்துமாவுக்காகக் கர்த்தருக்கு மீட்கும் பொருளைக் கொடுக்கக்கடவன்” (வச. 12). இஸ்ரயேல் மக்கள் ஏற்கனவே மீட்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து மீட்கப்பட்டவர்கள் என்பதற்கான அடையாளமாகவே ஆண்டுதோறும் பஸ்காவை ஆசரிக்கும்படி தேவனால் கட்டளை பெற்றிருந்தார்கள். ஆகவே இங்கே சொல்லப்பட்டிருக்கிற மீட்கும் பொருள் (வச. 12) என்பது அவர்களுடைய…

April

நமக்காகப் பரிந்துபேசும் பிரதான ஆசாரியர்

(வேதபகுதி: யாத்திராகமம் 30:1-10; 37:25-28) “தூபங்காட்டுகிறதற்கு ஒரு தூப பீடத்தையும் சீத்திம் மரத்தினால் உண்டாக்குவாயாக” (வச. 1). ஆசாரியர்களின் சுத்திகரிப்பும் பிரதிஷ்டையும் நிறைவேறிய பின்பு மீண்டுமாக ஆசரிப்புக்கூடாரப் பொருட்களில் ஒன்றான தூப பீடத்தைப் பற்றிய விவரங்களைக் காண்கிறோம். வெண்கலப் பலிபீடத்தில் செலுத்தப்படுகிற பலி, சுத்திகரிப்பு முறைமைகள் இவற்றுக்கு அடுத்ததாக பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருக்கிற பொன் தூப பீடம் சொல்லப்பட்டுள்ளது. கிறிஸ்துவின் பலிமரணமும், அதனால் உண்டாகும் பரிசுத்தமாகுதலும் நாம் தேவனை ஆராதிக்கும்படியான தகுதியை வழங்கி, பொற்தூப பீடத்துக்கு நேராக…

April

கிறிஸ்துவுக்குள் பூரணமாக்கப்பட்டோரின் பங்களிப்பு

(வேதபகுதி: யாத்திராகமம் 29:35-46) “பாவநிவிர்த்திக்காக ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு காளையைப் பாவநிவாரண பலியாகப் பலியிட்டு, பலிபீடத்துக்காகப் பிராயச்சித்தம் செய்தபின், அந்தப் பலிபீடத்தைச் சுத்தம் செய்யவேண்டும்; அதைப் பரிசுத்தப்படுத்தும்படி அதை அபிஷேகம்பண்ணக்கடவாய் ” (வச. 36). ஆசாரியர்களைச் சுத்தமாக்கி, தகுதிப்படுத்தும்படி பலிபீடத்தில் பலிகள் செலுத்தப்பட்டன. அதே நேரத்தில் அந்தப் பலிபீடத்தையும் பரிசுத்தப்படுத்துவதற்காக அதே பலிபீடத்தில் ஏழு நாட்கள் தொடர்ச்சியாகப் பலிகள் செலுத்தப்பட்டன. தேவ சமூகத்தில் செல்வதற்கு பலிபீடம் ஆசாரியர்களுக்குத் தகுதியை வழங்குவதுபோல, இந்தப் பலிபீடமும் அவருடைய பார்வையில் பூரணமானதாக…

April

விசுவாசிகளின் கிறிஸ்துவோடுள்ள அடையாளம்

(வேதபகுதி: யாத்திராகமம் 29:10-34) “காளையை ஆசரிப்புக்கூடார வாசலுக்குக் கொண்டுவருவாயாக; அப்பொழுது ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளைக் காளையினுடைய தலையின்மேல் வைக்கக்கடவீர்கள்” (வச. 5). ஆரோனும் அவனுடைய குமாரரும் ஆசாரியர்களாகப் பிரதிஷ்டை செய்யப்படுவதற்கு மூன்று பலிகள் செலுத்தப்பட்டன. ஒரு காளை பாவநிவாரண பலியாகவும் (வச. 10-14), ஓர் ஆட்டுக் கடா தகனபலியாகவும் (வச. 15-18), இன்னொரு (பிரதிஷ்டையின்) ஆட்டுக்கடா அவர்களைப் பரிசுத்தமாக்கும்படியாகவும் செலுத்தப்பட்டன. பின்னாட்களில் எல்லா விதமான பலிகளையும் செலுத்தப்போகிற இந்த ஆசாரியர்கள் இப்பொழுது பங்குபெறுகிறவர்களாக இருக்கிறார்கள்.…