March

பரிசுத்த இடத்துக்கு புதிய மார்க்கம்

 (வேதபகுதி: யாத்திராகமம் 26:31-37; 36:35-38) “அந்தச் திரைச் சீலை பரிசுத்த ஸ்தலத்திற்கும் மகா பரிசுத்த ஸ்தலத்திற்கும் பிரிவை உண்டாக்கும்” (வச. 33). இன்றைய நம்முடைய வேதபகுதியில், பரிசுத்த ஸ்தலத்துக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்துக்கும் இடையே ஒரு திரைச் சீலை மூலம் ஒரு பிரிவு உண்டாக்கப்படுகிறதைக் காண்கிறோம் (வச. 33). மேலும் பரிசுத்த ஸ்தலத்துக்குள் செல்வதற்கான வழியாகவும் இது இருக்கிறது. நாம் வெளியே இருந்து படிப்படியாக பரிசுத்த ஸ்தலத்திலிருந்து மகாபரிசுத்த ஸ்தலத்தை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதை…

March

முற்றிலும் அழகானவர்

(வேதபகுதி: யாத்திராகமம் 26:15-30; 36:20-34) “வாசஸ்தலத்துக்கு நிமிர்ந்து நிற்கும் பலகைகளையும் சீத்திம் மரத்தால் உண்டுபண்ணுவாயாக” (வச. 15). ஆசரிப்புக் கூடாரத்துக்கு வடிவத்தைக் கொடுக்கிறதும் சாய்ந்துவிழாதபடி தாங்கி நிற்கிறதுமான சீத்திம் மரத்தால் செய்யப்பட்டு, பொன் தகட்டால் மூடப்பட் பலகையை அடுத்ததாகக் காண்கிறோம் (வச. 15,29). எளிதில் கெட்டுப்போகாத இந்த மரம் கிறிஸ்துவின் மானிடத்தன்மையை நமக்கு முன்பாக வைக்கிறது. கிறிஸ்துவின் தெய்வீகத் தன்மையைப் போலவே அவருடைய மானிடத் தன்மையும் உண்மையானது. அவர் எல்லாவிதத்திலும் தம்முடைய சகோதரருக்கு (மானிடருக்கு) ஒப்பாயிருந்தார். பலகையை…

March

கட்டடம் கட்டிடும் சிற்பிகள்

(வேதபகுதி: யாத்திராகமம் 26:1-14; 36:8-19) “மூடு திரைகளால் வாசஸ்தலத்தை உண்டுபண்ணுவாயாக” (வச. 1). ஆசாரியர்கள் மட்டுமே பார்க்கிற பொருட்களிலிருந்து இப்பொழுது வெளியே யாவருக்கும் தெரியக்கூடிய ஆசரிப்புக் கூடாரத்தின் மூடுதிரைகளைப் படிக்கிறோம். பலவித நூல்களால் நெய்யப்பட்ட கண்கவர் வண்ணத் திரைகள், இதன் அளவுகள், இதிலுள்ள கேரூபின்களின் சித்திரவடிவமைப்பு, இவற்றைக் இணைக்கும் காதுகள், கொக்கிகள் இவை யாவும் கிறிஸ்துவின் பரிசுத்தத்தையும், நீதியையும், மகிமையையும், ராஜரீகத்தையும், பிதாவுக்கும் பிரியமான ஊழியத்தையும், பூரணத்தையும், தாழ்மையையும், பாடுகளையும் வெளிக்காட்டுகின்றன. திரைகள், கேரூபின்கள், காதுகள், கொக்கிகள்,…

March

ஐக்கியத்துக்கான ஆற்றலின் ஆதாரம்

(வேதபகுதி: யாத்திராகமம் 25:31-40; 37:17-24) “பசும்பொன்னினால் ஒரு குத்துவிளக்கையும் உண்டாக்குவாயாக” (வச. 31). பரிசுத்த இடத்தில் நாம் பார்க்கிற அடுத்த பொருள் குத்துவிளக்கு ஆகும் (வச. 31). சமுகத்து அப்ப மேசை நம்முடைய ஐக்கியத்தை பாதுகாப்பதற்கு சித்திரமாக இருக்குமானால், குத்துவிளக்கு அந்த ஐக்கியம் வளருவதற்கான ஆற்றலின் ஆதாரமாக விளங்குகிறது. இந்த இடத்துக்கு ஆசாரியர்களைத் தவிர வேறு யாரும் செல்ல முடியாது. கிறிஸ்துவுடனான இந்த ஐக்கியத்தை விசுவாசிகள் மட்டுமே அனுபவிக்க முடியுமே தவிர இந்த உலகத்தால் அனுபவிக்கவும் புரிந்துகொள்ளவும்…

March

ஐக்கியம் பாதுகாக்கப்படுகிற இடம்

(வேதபகுதி: யாத்திராகமம் 25:23-30; 37:10-15) “சீத்திம் மரத்தால் ஒரு மேசையையும் உண்டுபண்ணுவாயாக” (வச. 23). நாம் இப்பொழுது ஆண்டுக்கு ஒருமுறை பிரதான ஆசாரியன் மட்டுமே செல்லக்கூடிய இடத்திலிருந்து தினந்தோறும் செல்லக்கூடிய பரிசுத்த ஸ்தலத்துக்குச் செல்கிறோம். இங்கே இருக்கிற பொருட்களில் முதலாவது சொல்லப்பட்டிருப்பது அப்பம் வைக்கிற மேசை ஆகும். இது உடன்படிக்கைப் பெட்டியின் அதே அளவிலும் மற்றும் அதே சீத்திம் மரத்தாலும் பசும் பொன்னாலும் ஆனது. வேதத்தில் மேசை பெரும்பாலும் பந்தியுடனும் ஐக்கியத்துடன் தொடர்புடையதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. “மேவிபோசேத் நித்தம்…

March

தேவகோபம் தணிகிற இடம்

(யாத்திராகமம் 25:17-22; 37:6-9) “பசும்பொன்னினாலே கிருபாசனத்தைப் பண்ணுவாயாக; அது இரண்டரை முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கக்கடவது” (வச. 17). கிருபாசனம் எவ்விதக் கலப்படமும் இல்லாமல் சுத்தமான பசும்பொன்னினால் ஆனது. உடன்படிக்கைப் பெட்டியைப் போல இதில் சீத்திம் மரம் கலக்கப்படவில்லை. ஆசரிப்புக் கூடாரத்திலுள்ள பொருட்களிலேயே இது ஒன்றுதான் மிகவும் மதிப்புள்ள பரிசுத்த பொருள். இதன்மீது எதிர் எதிராக கீழ்நோக்கிப் பார்த்தவண்ணம் இரு கேருபீன்கள் இருந்தன. இவை வைக்கப்பட்டிருந்த மகா பரிசுத்த ஸ்தலம் பயபக்திக்குரிய இடமாக இருந்தது.…

March

மனிதர்களுக்குத் தம்மை வெளிப்படுத்துகிற தேவன்

(யாத்திராகமம் 25:10-16; 37:1-5) “சீத்திம் மரத்தினால் ஒரு பெட்டியையைப் பண்ணக்கடவர்கள் ” (வச. 10). தேவன் தாம் பூமியில் வாசம்பண்ணுகிற வாசஸ்தலத்தின் பொருட்களில் முதலாவது குறிப்பு உடன்படிக்கைப் பெட்டி அல்லது சாட்சிப் பெட்டியைப் பற்றியது. இதுவே அவருடைய மகிமை வெளிப்படுகிற தேவ ஆசனம் (சங். 80:1; 99;1). இது சீத்திம் மரத்தால் செய்யப்பட்டு, பசும்பொன்னால் மூடப்பட்டது. இது இயேசு கிறிஸ்துவையும், மரமும், பொன்னும் அவருடைய தெய்வீகத்தையும், மனுஷீகத்தையும் வெளிப்படுத்துகிறது. இந்த உடன்படிக்கைப் பெட்டி இஸ்ரயேல் மக்களுடைய வனாந்தர…

March

மனிதர்களோடு வாசம்பண்ண விரும்புகிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 25:1-9) “நான் உனக்குக் காண்பிக்கும் வாசஸ்தலத்தின் மாதிரியின்படியும், அதனுடைய எல்லாத் தட்டுமுட்டுகளின் மாதிரியின்படியும் அதைச் செய்வீர்களாக” (வச. 9). தேவன் கற்களினால் எழுதப்பட்ட தம்முடைய பிரமாணத்தை எழுதிக் கொடுக்கும்படி மோசேயை மலையுச்சிக்கு அழைத்தார். அதைத் தொடர்ந்து, மனிதர்களின் நடுவில் நான் வாசம்பண்ண விரும்புகிறேன் என்றும், அதற்கான ஒரு வாசஸ்தலத்தை உருவாக்க வேண்டும் என்ற தம்முடைய மனவாஞ்சையைத் தெரிவிக்கிறார். பரலோகத்தில் தூதர்களின் துதிக்கு நடுவில் வீற்றிருக்கிற தேவன் இந்தப் பூமியில் மனிதர்களின் நடுவிலும் வாசம்பண்ண விரும்புகிறார்…

March

மேகத்தில் வெளிப்பட்ட கர்த்தருடைய மகிமை

(வேதபகுதி: யாத்திராகமம் 24:12-18) “கர்த்தருடைய மகிமை சீனாய் மலையின்மேல் தங்கியிருந்தது; மேகம் ஆறுநாள் அதை மூடியிருந்தது; ஏழாம் நாளில் அவர் மேகத்தின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டார்” (வச. 16). மோசே சீனாய் மலையில் ஏறினான், மகிமையின் மேகம் மூடிக்கொண்டது, ஆறு நாள் காத்திருந்தான், ஏழாம் நாளில் கர்த்தர் அவனை அழைத்தார். அங்கே கர்த்தர் தம்முடைய பிரமாணங்களையும் கற்பனைகளையும் எழுதிக் கொடுத்தார். இதுவே இஸ்ரயேல் மக்கள் கடைப்பிடிக்கும்படியான பரிசுத்தமான தேவனின் பிரமாணங்கள். இதைக் குறித்துப் புதிய ஏற்பாட்டில், “எழுத்துகளினால்…

March

தேவனிடம் நெருங்கிச் சேரும் சிலாக்கியம்

(வேதபகுதி: யாத்திராகமம் 24:1-11) “மோசே மாத்திரம் கர்த்தரிடத்தில் சமீபத்து வரலாம்; அவர்கள் சமீபத்து வரலாகாது; ஜனங்கள் அவனோடேகூட ஏறிவர வேண்டாம் என்றார்” (வச. 2). கர்த்தரிடத்தில் நெருங்கிச் செல்வதற்கு பலவித படிநிலைகளை இப்பகுதியில் காண்கிறோம். மக்கள் தூரத்தில் நிற்க வேண்டும் (வச. 2). ஆரோனும், நாதாபும், அபியூவும், எழுபது மூப்பர்களும் மலையில் ஏறலாம் ஆயினும் தள்ளியே நின்று பணிந்து கொள்ள வேண்டும் (வச. 1). மோசேயும் யோசுவாவும் இன்னும் சற்று கர்த்தரிடத்தில் நெருங்கிச் சென்றார்கள் (வச. 13).…