March

பரலோகப் பயணியின் விசுவாசமும் கீழ்ப்படிதலும்

(வேதபகுதி: யாத்திராகமம் 23:20-36) “வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்” (வச. 20). நான் ஒரு தூதனை அனுப்புவேன், அவர் உங்களுக்கு முன்னே போவார், வெற்றியைத் தருவார், உங்களைக் காப்பாற்றுவார், பாதுகாப்பார், ஆரோக்கியம் நல்குவார், ஆயுளைப் பெருக்குவார், சந்ததியைப் பெருகப்பண்ணுவார் என்னும் வாக்குறுதிகளை தேவன் இஸ்ரயேல் மக்களுக்கு வழங்கினார். கிறிஸ்துவே இந்தத் தூதன் (ஒப்பிடுக 1 கொரி. 10:9). இதை அனுபவிப்பதற்கு…

March

அர்ப்பணிப்புள்ள ஆராதனை

(வேதபகுதி: யாத்திராகமம் 23:13-19) “… என் சந்நிதியில் வெறுங்கையாய் வர வேண்டாம்” (வச. 15). இஸ்ரயேல் மக்கள் பண்டிகை கொண்டாடும்படி ஓராண்டில் மூன்று தடவை கூடிவர வேண்டும். மீட்கப்பட்ட மக்களாகிய நாம், நம்முடைய மீட்பின் கர்த்தருக்கு நம்முடைய பக்தி மிகுந்த கனத்தையும், இதயபூர்வமான நன்றிகளையும் கிரமமாக அர்ப்பணிக்க கடன்பட்டுள்ளோம். அவர்கள் ஆண்டுக்கு மூன்று முறை ஒரு குறிப்பிட்ட இடத்தில் (பின்னாட்களில் எருசலேமில்) கூடினார்கள். நமக்கோ, அவரை எங்கும் கூடி ஆராதிக்கும்படியான சிலாக்கியத்தை அருளியிருக்கிறார். அவர்களுடைய பஸ்காவும், அறுப்புக்கால…

March

படைப்புகள் யாவற்றின்மேலும் அக்கறையுள்ள தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 23:10-12) “ஆறு நாள் வேலையைச் செய்து, ஏழாம் நாளிலே உன் மாடும் உன் கழுதையும் இளைப்பாறவும், உன் அடிமைப்பெண்ணின் பிள்ளையும் அந்நியனும் இளைப்பாறவும் ஓய்ந்திருப்பாயாக” (வச. 12). தேவனை ஆராதிப்பதும், அவர் அவர்களுக்குத் தானமாகக் கொடுத்த நிலத்தில் வேலை செய்வதும் ஒன்றுக்கொன்று இணைந்த செயலாகவே இஸ்ரயேலருக்கு இருந்தது. அதாவது இஸ்ரயேலர்களின் பண்டிகைகள் அவர்களுடைய விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட காலங்களின்படியே அனுசரிக்கும்படி கொடுக்கப்பட்டிருந்தன (ஒப்பிடுக லேவி. 23). ஏழாவது நாள் ஓய்வு நாள், அவ்வாறே ஏழாவது…

March

தீமையை வெறுக்கிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 23:1-9) “தீமைசெய்ய திரளான பேர்களைப் பின்பற்றாதிருப்பாயாக, வழக்கிலே நியாயத்தைப்புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து உத்தரவு சொல்லாதிருப்பாயாக” (வச. 2). இஸ்ரயேல் மக்கள் தேவனுடைய சுதந்தரர், அவரால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள். இவர்கள் தேவனிடமிருந்து சிறப்பான ஆசீர்வாதங்களைப் பெற்றவர்கள். இவர்கள் உலகம் சார்ந்த தங்கள் நடக்கைகளில் சிறப்பான குணங்களை வெளிப்படுத்த வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். இந்த வேதபகுதில், இவர்கள் உண்மையுள்ளவர்களாக, உத்தமமானவர்களாக, பாகுபாடுகாட்டாதவர்களாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர். சுற்றத்தாருடன் நம்முடைய உறவு முக்கியம். நம்முடைய…

March

எளியவர்களுக்குச் செவிகொடுக்கிற தேவன்

(வேதபகுதி: யாத்திராகமம் 22:16-31) “அந்நியனைச் சிறுமைப்படுத்தாமலும் ஒடுக்காமலும் இருப்பீர்களாக; நீங்களும் எகிப்து தேசத்தில் அந்நியர்களாயிருந்தீர்களே” (வச. 21). தேவனுடைய மக்கள் என்ற முறையிலும், அவரால் மீட்கப்பட்டவர்கள் என்ற முறையிலும் இஸ்ரயேலர்கள் இந்த உலகத்தார் அனுபவிக்கிற சில காரியங்களை செய்யும்படி அனுமதிக்கப்படவில்லை. மேலும் இந்த உலகத்தாரோடுள்ள தொடர்பில் அவர்களுடைய நடவடிக்கைகளைக் குறித்து கணக்குக் கேட்கிறவராகவும் அவர் இருக்கிறார். “நீங்கள் எனக்குப் பரிசுத்த மனிதர்களாயிருப்பீர்கள்” (வச. 31) என்று அவர் அழைக்கிறதால் அழைப்புக்குப் பாத்திரமான செயல்களை அவர் எதிர்பார்க்கிறார். இஸ்ரயேலர்களுக்கு…

March

இழப்பைச் சரிசெய்தல் என்னும் நற்குணம்

(வேதபகுதி: யாத்திராகமம் 22:1-15) “ஒருவன் பிறனிடத்தில் எதையாகிலும் இரவலாக வாங்கினதுண்டானால், அதற்கு உடையவன் கூட இராதபோது, அது சேதப்பட்டாலும், செத்துப்போனாலும் அவன் அதற்கு உத்தரவாதம் பண்ணவேண்டும்” (வச. 14). இஸ்ரயேலருடைய வாழ்க்கை முறை கிராமத்துடனும், விவசாயத்துடனும், கால்நடைகளுடனும் பின்னிப்பிணைந்தது. கர்த்தர் இவை எல்லாவற்றையும் கணக்கில் கொண்டு, அவர்களுடைய வாழ்க்கையில் நேர்மையும் நீதியும் ஒப்புவித்தலும் காணப்படும்படியான சட்டங்களை வரையறுக்கிறார். இவர்களுடைய சொத்துகள், ஆடு மாடுகள், உணவு தானியங்கள் முதலானவற்றைப் பாதுகாப்பதைக் குறித்து தனிமனிதப் பொறுப்பையும், சமுதாயக் கடமையையும் இது…

March

மனிதனின் சமுதாயப் பொறுப்பு

(வேதபகுதி: யாத்திராகமம் 21:28-36) “ஒரு மாடு ஒரு புருஷனையாவது ஒரு ஸ்திரீயையாவது முட்டினதினால் சாவுண்டானால், அந்த மாடு கல்லெறியப்பட வேண்டும், அதின் மாம்சம் புசிக்கப்படலாகாது; அப்பொழுது மாட்டின் எஜமான் ஆக்கினைக்கு நீங்கலாயிருப்பான்” (வச. 13). மனிதன் சமுதாயப் பொறுப்புள்ளவனாக நடந்துகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். பிறர் நலனில் அக்கறை கொள்ளுதல் வேண்டும், இல்லையேல் அது தண்டனைக்குரியது என்று இன்றியமையாத பாடத்தை இங்கே நாம் கற்றுக்கொள்கிறோம். தன்னுடைய மாடு வழக்கமாக முட்டுகிற மாடாயிருந்தால் அதைக் கவனமாகப் பார்த்துக்கொள்ள…

March

மனிதரிடத்தில் அன்புகூருதல்

(வேதபகுதி: யாத்திராகமம் 21:12-27) “ஒருவன் பதிவிருந்து கொல்லாமல், தேவச்செயலாய்த் தன் கைக்கு நேரிட்டவனைக் கொன்றால், அவன் ஓடிப்போய்ச் சேரவேண்டிய இடத்தை நியமிப்பேன்” (வச. 13). பத்துக் கற்பனைகளின் சாரம் அன்பை அடிப்படையாகக் கொண்டது. தேவனை நேசிக்கிறவன் மனிதரையும் நேசிக்க வேண்டும். இந்த அன்பை எந்தெந்த வழிகளில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே இந்தப் பகுதியில் சொல்லப்பட்டுள்ளது. மனிதர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளக்கூடியவர்கள், ஒருவரையொருவர் சார்ந்து வாழக்கூடியவர்கள். அன்பில்லாதபோது இந்த உறவுமுறையில் பிரச்சினைகள் தோன்றுகின்றன. இவற்றைத் தீர்ப்பதற்கான தேவ ஆலோசனையே…

March

அன்பினால் ஒப்புவித்தல்

(வேதபகுதி: யாத்திராகமம் 21:1-11) “அந்த வேலைக்காரன்: என் எஜமானையும் என் பெண்ஜாதியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன்; நான் விடுதலை பெற்றுப்போக மனதில்லை என்று மனப்பூர்வமாகச் சொல்வானானால்” (வச. 5). எகிப்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக கொடூரமான முறையிலும் நியாயமற்ற வகையிலும் நடத்தப்பட்டார்கள். அடிமைகளின் சோகக் கதையை இவ்வுலக வரலாறும் நமக்கு அறிவிக்கிறது. ஆகவே விடுதலை பெற்ற மக்கள் அடிமைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளைச் செய்து கரிசணையுடனும் அக்கறையுடனும் அவர்களை நடத்த வேண்டும் என்று தேவன் போதிக்கிறார். கடன்…

March

அன்பினால் கிரியை செய்தல்

(வேதபகுதி: யாத்திராகமம் 20:1-26) “என்னிடத்தில் அன்புகூர்ந்து, என் கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறவர் களுக்கோ ஆயிரம் தலைமுறைமட்டும் இரக்கஞ்செய்கிறவராயிருக்கிறேன்” (வச. 6). இஸ்ரயேல் மக்களை எகிப்தின் அடிமை வாழ்க்கையிலிருந்து விடுதலையாக்கிய தேவனின் உள்ளக்கிடக்கையின் வெளிப்பாடே இந்தப் பிரமாணங்கள் (வச. 2). எகிப்தின் தெய்வங்கள், அவற்றின் சிலை உருவங்கள், வணங்கும் முறை, அவர்களுடைய கலாச்சாரங்கள், வாழ்க்கை முறைகள் யாவும் இஸ்ரயேல் மக்களால் அறியப்பட்ட ஒன்று. இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வழிபாட்டு முறை, வாழ்க்கை முறைக்கான தேவனின் எதிர்பார்ப்புகளாக இந்தக் கற்பனைகள் விளங்குகின்றன.…