Genesis

பிள்ளைகளின் சாட்சி

(வேதபகுதி: ஆதியாகமம் 34:1-31) “அப்பொழுது யாக்கோபு… இந்தத் தேசத்தில் குடியிருக்கிற கானானியரிடத்திலும் பெரிசியரிடத்திலும் என் வாசனையை நீங்கள் கெடுத்ததினாலே என்னைக் கலங்கப்பண்ணினீர்கள்” (வச. 30). ஒரு விசுவாசி தன்னுடைய புதிய மறுபிறப்பின் வாழ்க்கையை இந்த உலகத்தில் தொடர்ந்து சாட்சியுடன் தக்கவைத்துக்கொள்வது எவ்வளவு முக்கியமானது. அதுவும் பிள்ளைகளை இந்த உலகத்துடன் கலந்துவிடாமலும், பிரித்தெடுக்கப்பட்டவர்களாகவும் விசுவாசத்துக்குரியவர்களாகவும், பயபக்திக்குரியவர்களாகவும் வளர்ப்பது ஒரு சவால் நிறைந்த பணியாகவே இருக்கிறது. பிள்ளைகள் பெற்றோரை அன்றாடம் கவனிக்கிறார்கள். பெற்றோரின் செயல்கள் அவர்களிடத்தில் தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன. யாக்கோபு…

Genesis

மாற்றத்தின் அடையாளம்

(வேதபகுதி: ஆதியாகமம் 33:1-20) “அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு ஏல்எல்லோகே இஸ்ரவேல் என்று பெயரிட்டான்” (வச. 20). யாக்கோபு தேவனைச் சந்தித்தான்; இப்பொழுது இருபது ஆண்டுகளுக்குப் பின்னர் தன் சகோதரனைச் சந்திக்கிறான். பாசம் மற்றும் உணர்வுகளின் நெகிழ்ச்சியை இந்தச் சந்திப்பில் காணமுடிகிறது. ஒரு புதிய பெயரைப் பெற்றுக்கொண்ட ஒரு மாற்றம் பெற்ற மனிதனாக, நானூறு பேரோடு வருகிற தன் அண்ணனைச் சந்திக்கிறான். யாக்கோபின் நடவடிக்கைகளை அன்றைய காலகட்டத்தில் நிலவிவந்த காலச்சார முறைகளோடு தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும்.…

Genesis

பெனியேல்: சுயம் மரித்தல்

(வேதபகுதி: ஆதியாகமம் 32:13-32) “அவன் பெனியேலைக் கடந்துபோகையில், சூரியன் உதயமாயிற்று; அவன் தொடைச்சுளுக்கினாலே நொண்டி நொண்டி நடந்தான்” (வச. 31). ஓர் அர்ப்பணித்தலின் ஜெபத்திற்குப் பிறகும், நாம் தேவனை நம்புவதைக் காட்டிலும் நம்முடைய சுய பெலனையும், அறிவையும் சார்ந்துகொள்கிறோம் என்பதற்கு யாக்கோபும் விதிவிலக்கல்ல. ஏசாவின் கைக்குத் தப்பவும், அவனுடைய முகத்தில் தயவுகிடைக்கவும், ஏசாவுக்கு வெகுமதிகளை அனுப்பினான், குடும்பத்தாரை இரவிலே யாப்போக்கு ஆற்றைக் கடக்கப்பண்ணினான். தன் சுயபெலத்தால் எவற்றையெல்லாம் செய்ய முடியுமோ அவையெல்லாவற்றையும் செய்தான். ஆயினும் இவற்றில் அவனுக்கு…

Genesis

யாக்கோபின் ஜெபம்

(வேதபகுதி: ஆதியாகமம் 32:1-12) “யாக்கோபு பிரயாணம்பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள்” (வச. 1). யாக்கோபு பிரயாணம்பண்ணுகையில், தேவதூதர்கள் அவனைச் சந்தித்தார்கள் என்ற செய்தி யாக்கோபின் விசுவாசப் பாதையில் மற்றொரு முக்கியமான தருணமாக விளங்குகிறது. ஏற்கனவே லாபானுடன் தரிசனத்தில் தோன்றி, யாக்கோபைக் காப்பாற்றிய தேவன், இப்பொழுது அவனுடைய நம்பிக்கையை வலுப்படுத்தவும், தைரியப்படுத்தவும் ஊக்கப்படுத்தவும் ஏசாவைச் சந்திப்பதற்கு முன்னதாகவே தூதர்கள் அவனைச் சந்திக்கும்படி அனுப்புகிறார். அவன் தூதர்களை தூரத்தில் காணவில்லை, மாறாக, அவர்களை அருகருகே சந்தித்தான். காணாமற்போன இளையகுமாரன் திரும்பி…

Genesis

எல்லை தாண்டாதிருக்க ஒப்பந்தம்

(வேதபகுதி: ஆதியாகமம் 31:22-55) “இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருக்கும்பொருட்டு, நீயும் நானும் உடன்படிக்கை பண்ணிக்கொள்ளக்கடவோம் என்றான்” (வச. 44). யாக்கோபு தனியொருவனாக ஆரானுக்கு வந்தான், இப்போது மனைவிகள், பிள்ளைகள், வேலையாட்கள் மற்றும் மிகப்பெரிய கால்நடைகள் ஆகியவற்றுடன் ஒரு செல்வந்தனாக, தன் மாமனாருக்குத் தெரியாமல் ஆரானைவிட்டுச் செல்கிறான். யாக்கோபின் இருபது ஆண்டுகள் படிப்பினையின் காலம் முடிவுக்கு வந்தது. ஆயினும் கர்த்தருக்கு முழுமையாக ஒப்புவிக்க வேண்டிய காரியம் மிச்சமிருந்தது. யாக்கோபின் பார்வையில் லாபான் ஓர் ஏமாற்றுக்காரன், லாபானின் பார்வையில் யாக்கோபு…

Genesis

கர்த்தருடைய வேளைக்காக காத்திருத்தல்

(வேதபகுதி: ஆதியாகமம் 31:1-21) “கர்த்தர் யாக்கோபை நோக்கி: உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப்போ; நான் உன்னோடேகூட இருப்பேன் என்றார்” (வச. 3). நாம் இந்த உலகத்தில் வாழ்ந்தாலும் இந்த உலகத்துக்குச் சொந்தமானவர்கள் அல்லர்.அல்லர். நாம் செல்ல வேண்டிய இடம் வேறு; இது நமக்கு நிரந்தரமானது அல்ல. நாம் இந்த உலகத்துக்கு நன்மை செய்தாலும் அது தொடர்ந்து நமக்கு ஒரு நல்ல நண்பனாக இராது. இந்த உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட வாழ்க்கை வாழ்ந்து, அந்நியர்களாகவும், பரதேசிகளாகவும்…

Genesis

பொறுமையுள்ள ஆசிரியர்

(வேதபகுதி: ஆதியாகமம் 30:25-43) “நான் என் ஸ்தானத்திற்கும், என் தேசத்திற்கும் போக என்னை அனுப்பிவிடும்” (வச. 25). ரெபெக்காளின் திட்டம் எவ்வளவு தவறானாது! அவள் யாக்கோபை ஏசாவின் கைக்குத் தப்பும்படி சிறிது நாட்களுக்குத் தன் சகோதரன் வீட்டுக்கு அனுப்பிவிட்டாள் (27:43-45). ஆனால் அங்கு நாட்கள் வருடங்களாக மாறின. யோசேப்பு பிறந்தவுடன் யாக்கோபு தன் குடும்பத்தைச் சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தார். குறிப்பாக தனக்கு ஆபத்து விளைவிக்க எண்ணம் கொண்டிருக்கும் தன் சகோதரன் ஏசாவைச் சந்திக்க வேண்டும்.…

Genesis

பிரச்சினைகளுக்கு நடுவிலும் தேவன்

(வேதபகுதி: ஆதியாகமம் 30:1-24) “தேவன் ராகேலை நினைத்தருளினார்; அவளுக்குத் தேவன் செவிசொடுத்து, அவள் கர்ப்பந்தரிக்கும்படி செய்தார்” (வச. 22). யாக்கோபு லேயாளை நேசித்தான், அவளைக் காட்டிலும் ராகேலை சற்று அதிகமாக நேசித்தான். கர்த்தர் ராகேலின் கர்ப்பத்தை அடைந்திருந்தபடியால் குழந்தை பெறத் தாமதமானது. மனித முயற்சிகள் அங்கே தலைதூக்கின. யாக்கோபின் வீடு ஒரு போர்க்களமாக மாறியது. இரண்டு உணர்ச்சிவசப்பட்ட பெண்கள் யாக்கோபின் பாசத்திற்காகச் சண்டையிட்டுக்கொண்டர். தாய்ப் பாசத்துக்கு அடிமையாகி ரெபேக்காளின் சொல் கேட்டு வளர்ந்த யாக்கோபின் வாழ்க்கையில், மேலும்…

Genesis

அறுவடையின் காலம்

(வேதபகுதி: ஆதியாகமம் 29:15-35) “லேயாள் அற்பமாய் எண்ணப்பட்டாள் என்று கர்த்தர் கண்டு, அவள் கர்ப்பதந்தரிக்கும்படி செய்தார்” (வச. 1). மனிதன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான் (கலா. 6:7). இதுவரை யாக்கோபு தன்னுடைய சுயமுயற்சியில் எதைச் செய்தானோ அதை அறுவடை செய்வதற்குத் தயாராகிறான். தேவன் தம்முடைய ஆசீர்வாதங்களை அருளுவதற்கு முன்பாக மனிதர்களைக் தகுதிப்படுத்துகிறார். யாக்கோபின் வாழ்விலும் இது நடந்தது. “சுதந்தரவாளியானவன் எல்லாவற்றிற்கும் எஜமானயிருந்தும், அவன் சிறு பிள்ளையாயிருக்கும் காலமளவும், அவனுக்கும் அடிமையானவனுக்கும் வித்தியாசமில்லை. தகப்பன் குறித்த காலம்…

Genesis

தேவநடத்துதல்

(வேதபகுதி: ஆதியாகமம் 29:1-14) “யாக்கோபு பிரயாணம் பண்ணி, கீழ்த்திசையாரின் தேசத்தில் போய்ச் சேர்ந்தான்” (வச. 1). தேவனுடனான சந்திப்பின் பெலன் ஏறத்தாழ ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பாலுள்ள பதான் அராமில் கொண்டுபோய் யாக்கோபை நிறுத்தியது. இடையில் எத்தனையோ இரவுகளை அவன் கடந்து வந்திருந்தான். ஆயினும் பெத்தேலில் எற்பட்ட முதல் சந்திப்பு அவனுடைய வாழ்க்கையில் முக்கியமானது. நம்முடைய மோட்சப் பயணத்துக்கு வலுச் சேர்க்கக்கூடியதும் இத்தகைய முதல் சந்திப்பே. அது தரிசனத்தோடும், கனவுகளோடும் நம்மை முன்னோக்கி நகர்த்துகிறது. “நீ போகிற…