October

தேவன் வழங்கிய ஆடை

(வேதபகுதி: ஆதியாகமம் 3:16-24) “தேவனாகிய கர்த்தர் ஆதாமுக்கும் அவன் மனைவிக்கும் தோல் உடைகளை உண்டாக்கி அவர்களுக்கு உடுத்தினார்” (வச. 21). முதல் மனிதனுடைய கீழ்ப்படியாமை சாபத்தைக் கொண்டுவந்தது. வேலை என்பது தேவனால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஆசீர்வாதம். ஆனால் சாபம் அதைக் கடினமாக்கியது. சாபத்தின் பலனாகவே நாம் வியர்வையையும் அழுத்தத்தையும் சோர்வையும் அனுபவிக்கிறோம். பின்பு ஆதாமின் பாவம் நமக்கு மரணத்தையும் கொண்டுவந்தது. முதலில் அது கடவுளை விட்டு நம்மைப் பிரித்தது, பின்பு நம்மை இந்தப் பூமியில் இருந்த பிரித்து…

October

முதல் வாக்குறுதி

(வேதபகுதி: ஆதியாகமம் 3:14-15) “உனக்கும் ஸ்திரீக்கும் உன்வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ அவர் குதிகாலை நசுக்குவாய் என்றார்” (வச. 15). மனிதனுடைய பாவத்துக்கு தூண்டுதலாக இருந்த சாத்தானை தேவன் சபித்தார். மனுக்குலம் எதை இழந்துபோக வேண்டும் என்று நினைத்தானோ அந்தச் சாத்தானிடமே தம்முடைய மகத்தான இரட்சிப்பின் திட்டத்தின் வெளிப்பாட்டை அறிவித்தார். “உனக்கும் ஸ்திரீக்கும் உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன்; அவர் உன் தலையை நசுக்குவார், நீ…

October

முதல் கேள்வி

(வேதபகுதி: ஆதியாகமம் 3:7-13) “அப்பொழுது தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார்” (வச. 9). முதல் தம்பதியினரின் முதல் பாவம் பல விளைவுகளை உண்டாக்கியது. அவர்கள் கண்கள் திறக்கப்பட்டதனால் தங்களை நிர்வாணிகள் என்று அறிந்துகொண்டார்கள். இதற்கு முன்னரும் அவர்கள் நிர்வாணிகளாகவே இருந்தார்கள், ஆயினும் அவர்கள் வெட்கப்படாமல் இருந்தார்கள். அப்பொழுது பாவம் வந்தபோதோ, அவர்கள் தங்களைப் பார்க்க ஆரம்பித்தார்கள், குற்ற மனசாட்சி ஏற்பட்டது, அவர்கள் வெட்கமும், அவமானமும் அடைந்தார்கள். இதை மூடி மறைக்க தாங்களாகவே…

October

முதல் சோதனை

(வேதபகுதி: ஆதியாகமம் 3:1-6) “தேவனாகிய கர்த்தர் உண்டாக்கின சகல காட்டு ஜீவன்களைப் பார்க்கிலும் சர்ப்பமானது தந்திரமுள்ளதாயிருந்தது” (வச. 1). சர்ப்பத்தின் வடிவில் சாத்தான் ஏவாளைச் சோதிக்கிறான். அவன் ஒரு பெரிய தந்திரசாலி. பெரிய சோதனைக்காரன். இவனையும் இவனுடைய தந்திரங்களையும் அறிந்துகொள்வது அவசியம். இன்றைக்கும் பிசாசு ஒளியின் தூதனாகத் தோன்றி இதையே செய்கிறான். ஒருவேளை அவன் பிரகாசிக்கிறவனாக நம்மிடத்தில் வராமல் இருக்கலாம். ஆனால் அவனுடைய உத்திகளும் தந்திரங்களும் அன்றும் இன்றும் மாறாதவையே. பிசாசு கர்ஜிக்கிற சிங்கமாகவும் வருகிறான் என்று…

October

முதல் தம்பதியினர்

(வேதபகுதி: ஆதியாகமம் 2:18-25) “பின்பு, தேவனாகிய கர்த்தர்: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன் என்றார்” (வச. 18). தேவனின் படைப்புகளுக்கு ஆதாமே முதல் நிர்வாகியாக இருந்தான். உயிரினங்களுக்கு பெயர் சூட்டினான். அவற்றை ஆளுகை செய்தான். அவற்றுடன் நெருக்கமாகப் பழகினான். ஆயினும் அவன் எதிர்பார்க்கிற பாசத்தையும் நேசத்தையும் அவை தரவில்லை. இவை அவனுடைய தனிமை உணர்வுக்குத் தீர்வைக் கொண்டுவரவில்லை. அவனுடைய எண்ணங்களைப் புரிந்துகொள்ளவும், தேவனுடைய நன்மைகளைப் பகிர்ந்துகொள்ளவும் அவருக்கு உற்ற துணையாக ஒரு நபர்…

October

முதல் மனிதனும் ஏதேனும்

ஆதியாகமம் 2:4-17 “தேவனாகிய கர்த்தர் கிழக்கே ஏதேன் என்னும் தோட்டத்தை உண்டாக்கி, தாம் உருவாக்கின மனுஷனை அதிலே வைத்தார்” (வச. 8). முதல் மனிதனை தேவன் எவ்வாறு உருவாக்கினார் என நாம் குழப்பமடையத் தேவையில்லை. அவர் அவனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கினார். மண்ணில் இருக்கிற அத்தனை கனிமச் சத்துகளும் மனிதனின் சரீரத்திலும் இருக்கின்றன என்பது இந்த உண்மையப் பறைசாற்றுகிறது. நாம் மீண்டும் மண்ணுக்கே திரும்புவோம் என்று வேதம் கூறுகிறது. அதாவது நம்முடைய மரித்த உடல் மண்ணிலேயே புதைக்கப்படுகிறது.…

October

உண்மையான ஓய்வுநாள்

ஆதியாகமம் 2:1-3 “தேவன் தாம் சிருஷ்டித்து உண்டுபண்ணின தம்முடைய கிரியைகளையெல்லாம் முடித்தபின்பு அதிலே ஓய்ந்திருந்தபடியால், தேவன் ஏழாம் நாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்” (வச. 3). தேவன் ஆறு நாட்களில் தம்முடைய படைப்பின் செயல்களையெல்லாம் முடித்துவிட்டு ஏழாம் நாளில் ஓய்ந்திருந்தார். அவர் களைப்பினாலும் சோர்வினாலும் ஓய்ந்திருந்தார் என்று நாம் எண்ணக்கூடாது, மாறாக, படைப்பின் செயல்கள் எல்லாம் முடிந்துவிட்டபடியால் அந்த நாளில் ஓய்ந்திருந்தார். அவர் தூங்குவதுமில்லை, அவர் உறங்குவதுமில்லை. பலருக்கு ஆறு நாள் என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருக்கிறது. ஒரு…

October

மனிதரைப் பராமரிக்கும் தேவன்

(வேதபகுதி: ஆதியாகமம் 1:29-31) “இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும், விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது” (வச. 29). தேவனுடைய ஆறு நாள் படைப்புச் செயலின் முழுச் சாராம்சம் என்னவென்றால், தேவன் தமது படைப்புகள் அனைத்தையும் அற்புதமான முறையில் பூரணமாக்கியிருக்கிறார். அவற்றை மனிதனுக்காக வழங்கியிருக்கிறார். அவரால் உண்டாக்கப்பட்ட இந்தப் பிரபஞ்சமும், அவரால் படைக்கப்பட்ட இந்த இயற்கை உலகமும் அவர் தம்முடைய சாயலாக உருவாக்கிய மனுக்குலத்தின்மேல் கொண்டிருக்கிற கரிசனைக்கும்…

October

தேவசாயலைக் கொண்ட மனிதன்

(வேதபகுதி: ஆதியாகமம் 1:26-28) “தேவன் தம்முடைய சாயலாக மனிதனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்; ஆணும் பெண்ணுமாகவே அவர்களைச் சிருஷ்டித்தார்” (வச. 27). மனிதன் தேவசாயலில் உண்டாக்கப்பட்டவன். மனித குலமே சிருஷ்டிப்பின் மகுடமாகத் திகழ்கிறது. இப்பிரபஞ்சத்தில் சிருஷ்டிக்கப்பட்ட எந்த உயிரினமும் பெற்றிராததும், எந்த உயிரினத்துக்கும் கிடைக்காததுமாகிய சிலாக்கியம் இது. தேவன் தம்முடைய பண்புகளில் சிலவற்றை இந்த மனித குலத்தோடு பகிர்ந்து கொண்டிருக்கிறார். ஆகவே மனிதன் சுயமாகச் சிந்திக்கவும், ஒன்றிலிருந்து ஒன்றை உருவாக்கும்படியான ஞானத்தையும் ஆற்றலையும் கொண்டிருக்கிறான். ஆகவே…

October

ஆளுகை செய்யும் வாழ்க்கை

(வேதபகுதி: ஆதியாகமம் 1:20-25) “பின்பு தேவன்: நீந்தும் ஜீவஜந்துக்களையும், பூமியின்மேல் வானம் என்கிற ஆகாயவிரிவிலே பறக்கும் பறவைகளையும், ஜலமானது திரளாய் ஜநிப்பிக்கக்கடவது என்றார்” (வச. 20). இந்த வேதபகுதி மனிதனுக்காகவும் அவனுடைய ஆளுகைக்காகவும் தேவனால் பூமி எவ்வாறு ஆயத்தம் செய்யப்படுகிறது என்பதை மோசே விவரிக்கிறார் (வச. 20-25). கடல்கள் மீன்களால் நிரம்பின, வானம் பறவைகளால் நிரம்பியது, காடுகள் விலங்குகளால் நிரம்பின. இவை எண்ணற்ற வேறுபாடுகளுள்ள, ஆச்சரியமூட்டும் கலவையான உயிரினங்கள். இனிமேல் படைக்கப்படப் போகிற மனிதனுக்காக தேவனின் மகத்தான…