October

ஒளிதரும் வாழ்க்கை

(வேதபகுதி: ஆதியாகமம் 1:14-19) “தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும், இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும், நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்” (வச. 11). நம்முடைய கண்களை வானத்துக்கு நேராக உயர்த்தும்போது நாம் என்ன காண்கிறோம். இரண்டு பெரிய சுடர்களாகிய சூரியன், சந்திரன் மற்றும் நட்சத்திரங்கள். இவை எதற்காக உண்டாக்கப்பட்டன. அடையாளங்களுக்காகவும் (வச. 14), காலங்களையும் நாட்களையும் வருடங்களையும் குறிக்கிறதற்காகவும் (வச. 14), பூமிக்கு வெளிச்சம் கொடுப்பதற்காகவும் (வச. 17), பகலையும் இரவையும் ஆளவும்…

October

கனிதரும் வாழ்க்கை  

(வேதபகுதி: ஆதியாகமம் 1:9-13) “பூமியின்மேல் தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைத் தங்கள் தங்கள் ஜாதியின்படியே கொடுக்கும் கனிவிருட்சங்களையும் முளைப்பிக்கக்கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று” (வச. 11). படைப்பின் மூன்றாம் நாள். ஞானமுள்ள படைப்பாளர் ஒரு தோட்டக்காரராக அடுத்த வேலையைச் செய்கிறார். பூமியின் மேற்பரப்பில் இருந்த தண்ணீரெல்லாம், ஓரிடத்தில் சேரவும் வெட்டாந்தரை காணப்படுவும் கட்டளையிட்டார். பின்னர் கனி தரும் மரங்களையும், புல், பூண்டுகளையும் முளைக்கும்படி கட்டளையிட்டார். கனிதரும் மரங்கள், செடிகள், புற்கள், பூவினங்கள் இவை யாவற்றையும் காணும்போது…

October

வானத்துக்குரியவர்கள்

(வேதபகுதி: ஆதியாகமம் 1:6-8) “தேவன் ஆகாய விரிவை உண்டுபண்ணி, ஆகாயவிரிவுக்கு கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்” (வச. 7). தேவன் தம்முடைய படைப்பின் இரண்டாம் நாளில் பூமியைச் சுற்றியிருந்த தண்ணீரை இரண்டாகப் பிரித்தார். இரண்டுக்கும் இடையில் ஆகாயவிரிவை உண்டாக்கினார். இதன் வாயிலாக நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்? தேவனுடைய வல்லமையுள்ள வார்த்தைகள் இப்பிரபஞ்சத்தின் மீது அதிகாரம் செலுத்துகின்றன. அவருடைய படைப்பின் மீது அவர் தார்மீக உரிமையைக் கொண்டிருக்கிறார். மேலும் அவர் வானத்தையும்…

October

வெளிச்சம் உண்டாகக்கடவது

(வேதபகுதி: ஆதியாகமம் 1:2-5) “தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று” (வச. 2). சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று (வச. 5). நாம் ஒரு நாளை நள்ளிரவில் தொடங்குகிறோம். ஆனால் வேதம் ஒரு நாளை மாலையில் தொடங்குகிறது. முதலில் மாலை பின்பு இரவு, அதன் பின்னர் காலை, பின்னர் பகல் பொழுது. அதாவது சூரிய அஸ்தமனத்தில் தொடங்கி, ஒளியின் காலத்துடன் முடிவடைகிறது. இது தேவன் செயல்படும் விதத்தின் வெளிப்பாட்டுடன் ஒத்துப்போகிறது. நம்முடைய வாழ்க்கையும் பாவத்தின்…

October

ஆதியிலே தேவன்

(வேதபகுதி: ஆதியாகமம் 1:1) “ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்” (வச. 1). நாம் ஒவ்வொருவரும் ஒரு குழந்தையாக வாழ்க்கையைத் தொடங்கினோம். நாம் வளர வளர, வானம், கடல், காற்று, பறவைகள், பூக்கள், விலங்குகள், மரங்கள் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிரினங்களையும் கவனிக்க ஆரம்பித்தோம். உலகத்தைப் பற்றி நாம் அறிந்தவுடன் தவிர்க்க முடியாமல் அதைப் பற்றி சில கேள்விகளும் எழுந்தன. அத்தகைய கேள்விகளுக்கு வேதத்தின் முதல் புத்தகமாகிய ஆதியாகமத்தின் முதல் அதிகாரம் சுருக்கமாகப் பதிலளிக்கிறது. ஆதியிலே…

October

அவருடைய கண் மங்கவில்லை

(வேதபகுதி: உபாகமம் 34:1-12) “மோசே மரிக்கிறபோது நூற்றிருபது வயதாயிருந்தான்; அவன் கண் இருளடையவுமில்லை, அவன் பெலன் குறையவுமில்லை” (வச. 7). கர்த்தர் மோசேக்கு நேபோ மலையிலிருந்து கானானின் காட்சியைக் காட்டினார். நூற்றிருபது வயதுடைய ஒரு தலைவரின் மங்காத கண்கள் கானானின் வடக்கிலிருந்து தெற்காக ஒரு சுற்றுச் சுற்றின. நூற்றிருபது வயதில் மலை ஏற வேண்டும், அங்கிருந்து கானானைப் பார்க்க வேண்டும். ஆகவே அவருடைய பெலன் குன்றிப்போகவில்லை, கண்கள் மங்கலாகவுமில்லை. தேவன் மோசேக்குக் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவதற்காக நல்ல…

October

உனக்கு ஒப்பானவன் யார்?

(வேதபகுதி: உபாகமம் 33:1-29) “இஸ்ரவேலே, நீ பாக்கியவான்; கர்த்தரால் ரட்சிக்கப்பட்ட ஜனமே, உனக்கு ஒப்பானவன் யார்?” (வச. 52). மோசேயின் இருதயம் தன்னுடைய மக்களின் மேலுள்ள அன்பால் பொங்கி வழிகிறது. தன்னுடைய மரண நேரத்தில் ஆசீர்வாதத்தையும் ஜெபத்தையும் தாம் இதுவரை நேசித்து வழிநடத்தி வந்த மக்களுக்கு அறிவிக்கிறார். யாக்கோபைப் போல எந்தக் குற்றத்தையும் காணாமல் (ஆதி. 49), மோசே தன்னுடைய மக்களிடத்தில் தேவனுடைய ஆசீர்வாதத்தை மட்டுமே வழங்குகிறார். அன்பு திரளான பாவங்களை மூடும்; அன்பு சகலத்தையும் சகிக்கும்.…

October

கீழ்ப்படியாமையின் பாடம்

(வேதபகுதி: உபாகமம் 32:45-52) “நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்போகிற எதிரேயிருக்கிற தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ பிரவேசிப்பதில்லை என்றார்” (வச. 52). மோசே இஸ்ரயேலர்களுக்குக் கற்பித்த எல்லா வார்த்தைகளின்படியும் நடந்து, தங்கள் மனப்பூர்வமாக கீழ்ப்படிதலைக் காண்பிக்க வேண்டும், அவற்றைத் தங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதுவே மோசே கற்பித்த பாடலின் கருப்பொருள். தனிப்பட்ட நபராகவும், குடும்பமாகவும், நாடாகவும் தம்முடைய வார்த்தைக்கு முழுமனதுடன் கீழ்ப்படிவதையே தேவன் எதிர்பார்க்கிறார். இதை உணர்த்துவதே இப்பாடலின் நோக்கம். மேலும், இதுவே…

October

கிருபையும் இரக்கமுமுள்ள கன்மலை

(வேதபகுதி: உபாகமம் 32:15-44) “தங்கள் கன்மலை நம்முடைய கன்மலையைப் போல் அல்ல என்று நம்முடைய சத்துருக்களே தீர்மானிக்கிறார்கள்” (வச. 31). கர்த்தர் கானான் நாட்டில் இஸ்ரயேல் மக்களின் மீது அளவற்ற செழிப்பைப் பொழிந்தார். நேர்மையானவன் என்னும் பொருளில் யெஷுரன் என்னும் செல்லப் பெயரால் வர்ணிக்கப்பட்ட தேசம், தன்னை உண்டாக்கிய தேவனை விட்டு விலகியது, தன்னை இரட்சித்த கன்மலையை அலட்சியம் செய்தது. தேவன் அளித்த கொடையால் அவர்கள் தன்னிறைவு பெற்றார்கள், ஆனால் கொடுப்பவரைத் தூற்றினார்கள். அதைவிட மோசமான காரியம்…

October

இஸ்ரயேல் என்னும் கர்த்தருடைய கண்மணி

(வேதபகுதி: உபாகமம் 32:1-14) “பாழான நிலத்திலும், ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் அவர் அவனைக் கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார், அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்” (வச. 10). தேவன் தம்முடைய இறையாண்மையின்படி, எதிர்காலத்தில் இஸ்ரயேல் மக்கள் தன்னைப் பின்பற்றுவதை விட்டுவிட்டு அந்நிய தேவர்களைப் பின்பற்றுவார்கள் என்று அறிந்திருந்தார். ஆயினும் இந்த உடன்படிக்கையின் கர்த்தர் அவர்களை தொடர்ந்து நேசிக்கிறார். அவர்களை குடியமர்த்த யோசுவாவை நியமிக்கிறார். அவர்களுடைய முற்பிதாக்களுக்கு ஆணையிட்டதை நிறைவேற்றும்படி முனைப்புக் காட்டுகிறார். இத்தகைய சூழ்நிலையில்…