April

ஏப்ரல் 12

ஏப்ரல் 12 கர்த்தாவே உம்மை நம்பியிருக்கிறேன். நான் ஒருக்காலும் வெட்கமடையாதபடிக்கு செய்யும் (சங்.31:1). மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுவதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்க போக்கையும் உண்டாக்குவார் என்று நாம் 1.கொரிந்தியர் 10:13ல் காண்கிறோம். சங்கீதங்காரனைப்போல நானும் தேவைனையே நம்பிப் கொண்டிருக்கிறேன். ஆயினும் தற்போதுள்ள இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்கொள்ள மார்க்கமில்லையே என்று ஏங்குகிறாயா? அவரில் நாம் நம்பிக்கையுள்ளவர்களாக இருப்பதினால் நாம் வெட்கப்பட்டு விடுவோமா?…

April

ஏப்ரல் 11

ஏப்ரல் 11 ஏன் என்னை மறந்தீர் (சங்.42:9) நமக்கு நெருங்கிய நண்பர்கள் பலர் தூரத்தில் இருந்தபோதிலும், வேலை மிகுதியினால் அவர்கள் நம்மை மறந்துவிடலாம். ஆனால் நமது நம்பிக்கைக்குரிய ஆண்டவரோ நம்மை மறப்பதில்லை. இதையே அவர் நமக்கு,   ஸ்திரியானவள் தன் கர்ப்பதின் பிள்ளைக்கு இரங்காமல் தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை. இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன் (ஏசா.49:15-16) என்று உறுதியளித்துள்ளார். இரட்சகரின் காயப்பட்ட கரங்களைக் காட்டிலும் சிறந்த, மேலான பாதுகாப்பளிக்கக்கூடிய நம்பிக்கைக்குரிய…

April

ஏப்ரல் 10

ஏப்ரல் 10 அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய். அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள் (லூக்.14:14). தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள் என்று இயேசு கூறியுள்ளார். அது உண்மை. ஏனெனில் காரணமின்றி ஏழையானோர் பலர் உண்டு. தகப்பன் வேலையின்றி சோம்பேறியாக இருப்பதினால் சிறு பிள்ளைகள் நிறைந்த குடும்பம் ஏழ்மையில் வேதனைப்படுவது இயல்பு. குடிகாரார்களாக இருப்பதினாலும், குடும்பத்தைச் சரியாக வருவாய்க்குள் நிர்வாகம் செய்ய இயலாததாலும், ஏழையானோர் பலர். அதற்காக மற்றவர்கள் இரக்கப்பட்டு அவர்களுக்கு உதவுவது நல்லதல்ல. மாறாக அவர்களை தங்கள் மனச்சாட்சியினால்…

April

ஏப்ரல் 9

ஏப்ரல் 9 நீங்கள் திடன்கொண்டு தைரியமாயிருங்கள்… அவனோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம் (2.நாளா.32:7) புதிய இங்கிலாந்தின் கரையைவிட்டு தூரமாய்ப்போன ஒரு கப்பல் பயங்கரமான புயலில் சிக்கித் தவித்தது. அதிலிருந்த பயணிகள் யாவரும் பயந்து நடுங்கினர். எந்த நேரத்திலும் கப்பல் மூழ்கி, நாம் மடிந்துபோவோம் என்றிருந்தனர். குழப்பமடைந்த ஒரு பெண் கொந்தளிக்கும் அலைகளையும், சுழலில் சிக்கித் தவிக்கும் கப்பலையும் தெளிவாய்க் காண விரும்பி, கப்பலின் மேல் தட்டிற்கு ஏறினாள். சிறிது நேரத்தில் கீழே திரும்பி வந்தாள். பயத்திற்குரிய அறிகுறி…

April

ஏப்ரல் 8

ஏப்ரல் 8 சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் (மத்.5:5). வீழந்துபோன நிலையில் அதிக வேதனைப்பட்ட உள்ளத்தோடும் தாழ்மையுள்ள ஆவியோடும் எரேமியா, கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. தன் இளம் பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது… அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன்….. தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி நிந்தையில் நிறைந்திருப்பானாக (புல.3:26-30) எனக் கூறியுள்ளார். தேவனுடைய வார்த்தைக்கென ஒப்புவித்த, எளிமையுள்ள ஆவியைச் சாந்தகுணம் என்று குறிப்பிடலாம். உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும், உங்கள்…

April

ஏப்ரல் 7

ஏப்ரல் 7 …. வெட்கப்படாதிருந்தார்கள் (ஆதி.2:25). சர்வ வல்லமையுள்ள தேவன் உருவாக்கிய, பாவமற்ற நம்மூதாதையரின் நிலைமையினை ஆழ்ந்து ஆராய நம்மால் இயலவில்லை. அவர் உருவாக்கின யாவும் நன்றாயிருந்தன. ஆச்சரியமாயிருந்தன. ஆனால் ஆதியிலருந்த அந்தப் பரிபூரணத்தைப் பாவம் நாசமாக்கிவிட்டது. ஏதேன் தோட்டம் அழகாயிருந்தது. பாவமின்றியிருந்தது. படைத்தவருக்கும், படைப்புகளுக்கும் நெருங்கிய உறவு இருந்தது. அவரது எண்ணங்கள் யாவும் படைப்புகளில் செயல்ப்படுத்தப்பட்டது. நம் வாழ்நாளில் நாம் இப்படிப்பட்ட கறையற்ற இருதயத்தையும், பரிசுத்தமான உடலையும், பாதிக்கப்படாத கண்களையும், மனதையும் உடையவர்களாக இருந்ததேயில்லை. ஆனால்…

April

ஏப்ரல் 6

ஏப்ரல் 6 ‘தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள்”;. (லூக்.11:28) நம்முடைய வாழ்வில் தேவனுடைய வார்த்தைக்கு  முதல் இடம்கொடுக்கவேண்டும் என்பதை இயேசுக்கிறிஸ்து தமது போதனையில் அதிகமாய் வலியுறுத்தியுள்ளார். வானமும் பூமியும் ஓழிந்துபோம். என் வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை  (லூக்கா 21:33).நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது (யோவான் 6:63). முடிவு பரியந்தம் அவர் இதையே போதித்தார். அவரது நீண்ட ஜெபத்தின்போதும், நீர் எனக்குக்கொடுத்த வார்த்தைகளை நான் அவர்களுக்குக்கொடுத்தேன். அவர்கள் அவைகளை ஏற்றுக்கொண்டு, நான்…

April

ஏப்ரல் 5

ஏப்ரல் 5 கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணி… அவரை…. வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் (2.கொரி.2:14). தேவனுடைய வழிநடத்துதலை அறிந்து மகிழ்ந்துவரும் ஆத்துமாவிற்குத் தோல்விகள் வருவது இயல்பு. அப்போஸ்தல னாகிய பவுல் துரோவா பட்டணத்திற்கு வந்தபோது தீத்துவைக் காண விரும்பினார். ஆனால் அவன் அங்கு இல்லை. அதன் பின்பு பவுல் மக்கதொனியா நாட்டிற்குப் புறப்பட்டுப் போனார். அவர் தன்னை வெற்றி சிறக்கப்பண்ணி வழிநடத்துகிற தேவன் கிருபையுள்ளவரென்று நன்கு அறிந்திருந்தார். ஸ்தோத்திரம் செலுத்துதல் நம் வழிகளைத் தெளிவாகக் காண்பிக்கும்.…

April

ஏப்ரல் 4

ஏப்ரல் 4 அது கோதுமையும் வாற்கோதுமையும்… தேனுமுள்ள தேசம். அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கத்தும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம் (உபா.8:8-9) தன் இளம் பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது (புல.3:27) என்று எரேமியா கூறியுள்ளார். ஏழ்மையிலும், கஷ்டத்திலும் உழன்று, தேவனிடம் நம்பிக்கையை வைத்து, பலப்படும்படியான அனுபவத்தை அவர் பெற்றிருந்தார். சிட்சையின் நாட்கள் நம்மைக் கோழையாக்கிவிடமாட்டாது. சோதனைகள் முடிந்தபின்பு நாம் யோர்தானைக் கடந்து சென்று வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நாட்டிற்குள் சென்று அதைச் சுதந்தரித்துக் கொள்வோம். கட்டுப்பாட்டிற்குட்படுத்தல் ஆசீர்வாதத்தைக்…

April

ஏப்ரல் 3

ஏப்ரல் 3 ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், நாம் பயப்படோம் (சங்.46:2-3). கடும் சோதனையில் விசுவாசத்தின் பாடத்தைக் கற்றுக்கொண்டதினால் சங்கீதக்காரன் இதைக் கூறுகிறான். தன் அனுபவத்தில், தனிப்பட்ட வாழ்வில் இதைத் தெரிந்துகொண்ட மார்ட்டின் லூத்தர் இச்சங்கீதத்திற்கு விளக்கம் கொடுக்கத்தக்க பேராசியராக விளங்குகிறார். அந்நாள் முதல் இந்நாள்வரையுள்ள விசுவாசிகள் யாவருக்கும் அவர் ” தேவன் நமக்குப் பலத்த கோட்டை” என்று வெற்றிப் பெருமிதத்துடன் கூறிக்கோண்டே வருகிறார். நாம் பயப்படவேண்டியதில்லை. ஏன்? நமது தேவன் நம்மைக்…