April

ஏப்ரல் 8

ஏப்ரல் 8

சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள் (மத்.5:5).

வீழந்துபோன நிலையில் அதிக வேதனைப்பட்ட உள்ளத்தோடும் தாழ்மையுள்ள ஆவியோடும் எரேமியா, கர்த்தருடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது. தன் இளம் பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது… அவரே அதைத் தன்மேல் வைத்தாரென்று அவன்….. தன்னை அடிக்கிறவனுக்குத் தன் கன்னத்தைக் காட்டி நிந்தையில் நிறைந்திருப்பானாக (புல.3:26-30) எனக் கூறியுள்ளார்.

தேவனுடைய வார்த்தைக்கென ஒப்புவித்த, எளிமையுள்ள ஆவியைச் சாந்தகுணம் என்று குறிப்பிடலாம். உங்கள் உள்ளத்தில் நாட்டப்பட்டதாயும், உங்கள் ஆத்துமாக்களை இரட்சிக்க வல்லமையுள்ளதாயுமிருக்கிற வசனத்தைச் சாந்தமாய் ஏற்றுக்கொள்ளுங்கள்…. திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள் (யாக்.1:21-22) என்று யாக்கோபு எழுதியுள்ளார். சாந்தகுணமுள்ளவர்கள் தேவனுடைய வார்த்தையையே அடிப்படையாகக் கொண்டு அதன்படி செய்வார்கள். வேதம் கூறும் செய்திகளையும், போதனைகளையும், யாவற்றையும் தெளிவாக அறிந்து அதன்படி தங்களை வாழ்க்கை பாதையை அமைத்துக்கொள்வார்கள்.

சாந்தகுணம் என்று பேச்சிலே கூறிவிட்டால் போதாது. நமது ஆண்டவரைப்போன்று நாமும் நம் வாழ்வில் அதைச் செயல்ப்படுத்திக் காட்டவேண்டும். கர்த்தருடைய ஊழியக்காரன் சண்டைபண்ணுகிறவனாயிராமல், எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், போதகசமர்த்தனும், தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்கவேண்டும். எதிர் பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும்… சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கவேண்டும் (2.தீமோ.2:24-26). இது எல்லா கிறிஸ்தவர்களின் கடமையாகும்.