April

ஏப்ரல் 7

ஏப்ரல் 7

…. வெட்கப்படாதிருந்தார்கள் (ஆதி.2:25).

சர்வ வல்லமையுள்ள தேவன் உருவாக்கிய, பாவமற்ற நம்மூதாதையரின் நிலைமையினை ஆழ்ந்து ஆராய நம்மால் இயலவில்லை. அவர் உருவாக்கின யாவும் நன்றாயிருந்தன. ஆச்சரியமாயிருந்தன. ஆனால் ஆதியிலருந்த அந்தப் பரிபூரணத்தைப் பாவம் நாசமாக்கிவிட்டது. ஏதேன் தோட்டம் அழகாயிருந்தது. பாவமின்றியிருந்தது. படைத்தவருக்கும், படைப்புகளுக்கும் நெருங்கிய உறவு இருந்தது. அவரது எண்ணங்கள் யாவும் படைப்புகளில் செயல்ப்படுத்தப்பட்டது.

நம் வாழ்நாளில் நாம் இப்படிப்பட்ட கறையற்ற இருதயத்தையும், பரிசுத்தமான உடலையும், பாதிக்கப்படாத கண்களையும், மனதையும் உடையவர்களாக இருந்ததேயில்லை. ஆனால் தேவனுடைய குமாரனாகிய பாவமற்ற இயேசு கிறிஸ்து நம் உள்ளத்தில் வாசம் செய்யும்போது ஒவ்வொரு விசுவாசியும் பரிசுத்தத்தையும், வெற்றியையும் அடைய இயலும். அவர் நம் இருதயத்தைக் காத்து நலமானதை மட்டுமே நினைவுகூரச்செய்கிறார். புதிய சிருஷ்டியாகும்போது நாமும் அவரைப்போலவே இருப்போம். அன்று ஆதி மக்களாகிய ஆதாமும், ஏவாளும் கபடின்றி கள்ளமின்றி வாழ்ந்ததுபோல் நாமும் வாழலாம்.

இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள் (ரோ.13:14). இதுதான் வெட்கமனி;றி தேவனோடு இணைந்து வாழும் வாழ்வின் இரகசியம். உங்கள் ஐக்கியம் தேவனோடு எவ்வாறு உள்ளது.