April

ஏப்ரல் 10

ஏப்ரல் 10

அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய். அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள் (லூக்.14:14).

தரித்திரர் எப்போதும் உங்களிடத்தில் இருக்கிறார்கள் என்று இயேசு கூறியுள்ளார். அது உண்மை. ஏனெனில் காரணமின்றி ஏழையானோர் பலர் உண்டு. தகப்பன் வேலையின்றி சோம்பேறியாக இருப்பதினால் சிறு பிள்ளைகள் நிறைந்த குடும்பம் ஏழ்மையில் வேதனைப்படுவது இயல்பு. குடிகாரார்களாக இருப்பதினாலும், குடும்பத்தைச் சரியாக வருவாய்க்குள் நிர்வாகம் செய்ய இயலாததாலும், ஏழையானோர் பலர். அதற்காக மற்றவர்கள் இரக்கப்பட்டு அவர்களுக்கு உதவுவது நல்லதல்ல. மாறாக அவர்களை தங்கள் மனச்சாட்சியினால் குத்தப்பட்டவர்களாக, பொறுப்பை உணர்ந்து நடந்துகொண்டிருந்தால் இந்நிலை தங்களுக்கு ஏற்பட்டிருக்காதே என்று உணரத்தக்கவர்களாக மாற்றவேண்டும்.

இன்னும் சிலர் அதிகமாக பாடுபட்டும் ஏழ்மை நிலையில் இருப்பதுண்டு. குடும்பத்தில் சம்பாதிக்கும் நபரை வியாதி முடக்கியிருக்கலாம். செய்துவந்த வேலையை இழந்திருக்கலாம் அல்லது வேலை நிறுத்தம், கதவடைப்பு போன்றவை ஏற்பட்டு தொழில் முடங்கியிருக்கலாம். இப்படி இன்னும் ஆயிரக்கணக்கான காரணங்களைக் கூறி இதனால்தான் அவர்கள் உயரமுடியாமல் ஏழையாயினர் என முடிவுகட்டலாம்.

அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் யார், தகுதியற்றவர்கள் யார் என்று பிரித்துக் கூறுவது கடினம். இதனால்த்தான் இரக்கம் காட்டல், உதவிசெய்தல் போன்ற கிறிஸ்தவப் பண்புகளை உண்மையான ஏழ்மையில் இருப்பவருக்கே காட்டுவது கடினமாய்ப் போயிற்று.

ஏசாயா 58ம் அதிகாரத்தில் பழைய ஏற்பாட்டின் போதனைகளைத் தொகுத்துக் கூறியிருக்கக் காணலாம். இதில் தேவன் மாய்மால பக்தியையும், சடங்காசாரங்களையும் கடிந்துரைக்கிறார். இரக்கம் தேவை எனக் கூறியுள்ளார். அக்கிரமத்தின் கட்டுகளை அவிழ்க்கிறதும், நுகத்தடியின் பிணையல்களை நெகிழ்கிறதும், நெருக்கப்பட்டிருக்கிறவர்களை விடுதலையாக்கி விடுவிக்கிறதும், சகல நுகத்தடிகளையும் உடைத்துப் போடுகிறதும், பசியுள்ளவனுக்கு உன் ஆகாரத்தைப் பகிர்ந்து கொடுக்கிறதும்… வஸ்திரமில்லாதவனைக் கண்டால் அவனுக்கு   வஸ்திரங்கொடுக்கிறதும்…. சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்குவதினாலும்… நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும் வற்றாத நீரூற்றபை;போலவும் இருப்பாய். இதுதான் நம் அசீர்வாதத்திற்குரிய வழியாகும்.