April

ஏப்ரல் 4

ஏப்ரல் 4

அது கோதுமையும் வாற்கோதுமையும்… தேனுமுள்ள தேசம். அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கத்தும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம் (உபா.8:8-9)

தன் இளம் பிராயத்தில் நுகத்தைச் சுமக்கிறது மனுஷனுக்கு நல்லது (புல.3:27) என்று எரேமியா கூறியுள்ளார். ஏழ்மையிலும், கஷ்டத்திலும் உழன்று, தேவனிடம் நம்பிக்கையை வைத்து, பலப்படும்படியான அனுபவத்தை அவர் பெற்றிருந்தார்.

சிட்சையின் நாட்கள் நம்மைக் கோழையாக்கிவிடமாட்டாது. சோதனைகள் முடிந்தபின்பு நாம் யோர்தானைக் கடந்து சென்று வாக்குத்தத்தம்பண்ணப்பட்ட நாட்டிற்குள் சென்று அதைச் சுதந்தரித்துக் கொள்வோம். கட்டுப்பாட்டிற்குட்படுத்தல் ஆசீர்வாதத்தைக் கொண்டுவரும். பற்றாக்குறை திருப்தியைக் கொடுக்கும். தனிமை இனிமையைக் கொண்டுவரும். உள்ளத்தின் வெறுமை தேனோடுகிற தேசத்து இனிமையைக் கொடுககும். வாழ்வின் பாத்திரம் இனிமையாகவும் பொங்கி வழியக்கூடியதாவும் செய்வதற்கென தேவன் வழி வகுத்துள்ளார்.

ஆகவே நீ, உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கு…. எச்சரிக்கையாயிரு (உபா.8:11). குழப்பமான வேளையில் சோதனைகள் பெருகி நம்பிக்கை இழக்கவும் உற்சாகவும் குன்றவும் செய்யும். சந்தோஷம் பொங்கும் வேளையில் வரும் சோதனை நம்முடைய சொந்த பலத்தின்மேல் சார்ந்துகொள்ளச் செய்யும். இவ்விதமான வலைகளுக்குத் தப்பி வெற்றியடைவோம். எதிர்ப்புகளையெல்லாம் கடந்து, வளமான வாழ்விற்கு நாம் வரும்போது (ஆவிக்குரிய வாழ்வாயினும் உலகத்திற்குரிய வாழ்வாயினும் சரி அல்லது இரண்டிலுமே) நாம் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு வந்துவிட்டோம் என்று அறிந்து கொள்ள முடிகிறது. பாலும், தேனும் ஓடும் தேசத்திற்கு வந்துவிட்ட நீ உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக. அவரே… இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்கு கொடுக்கிறவர் (உபா.8.18) என்பதை மறவாதே.

நாம் கடந்து வந்ததும், கொடிய தீமைகள் நிறைந்ததுமான பாதைகளையும், துன்பங்களையும் தாழ்மையோடு நினைவுகூருவோமாகில் பாலும் தேனும் ஓடும் வளமான நாட்டின் பலன்களை அனுபவிப்போம்.