April

ஏப்ரல் 3

ஏப்ரல் 3

ஆகையால் பூமி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், நாம் பயப்படோம் (சங்.46:2-3).

கடும் சோதனையில் விசுவாசத்தின் பாடத்தைக் கற்றுக்கொண்டதினால் சங்கீதக்காரன் இதைக் கூறுகிறான். தன் அனுபவத்தில், தனிப்பட்ட வாழ்வில் இதைத் தெரிந்துகொண்ட மார்ட்டின் லூத்தர் இச்சங்கீதத்திற்கு விளக்கம் கொடுக்கத்தக்க பேராசியராக விளங்குகிறார். அந்நாள் முதல் இந்நாள்வரையுள்ள விசுவாசிகள் யாவருக்கும் அவர் ” தேவன் நமக்குப் பலத்த கோட்டை” என்று வெற்றிப் பெருமிதத்துடன் கூறிக்கோண்டே வருகிறார்.

நாம் பயப்படவேண்டியதில்லை. ஏன்? நமது தேவன் நம்மைக் காக்கிறார். தேவன் நமக்கு அடைக்கலமானவர். தேவன் நமக்கு வல்லமையளிக்கிறார். பெலனும் ஆபத்துக் காலத்தில் அனுகூலமான துணையுமானவர்.

தேவன் நம் தேவைகளைச் சந்திக்கிறார். ஒரு நதியுண்டு, அதன் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும்… பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும். அந்த நதி, ஆண்டவர் இயேசு கிறிஸ்து விவரித்துக் கூறிய பரிசுத்த ஆவியானவர்தான (யோ.7:37,39) என்பதில் ஐயமில்லை. அவர்தான் நம்மை உயிர்ப்பித்து, ஊககுவிக்கிறார். அவர் கொடுக்கும் சந்தோஷமே நமக்குப் பெலன்.

தேவன் நமக்குச் சகாயர். அதிகாலையில் தேவன் அதற்குச் சகாயம்பண்ணுவார். தேவன் நமது ஆண்டவராயிருக்கிறார். அவர் தூரத்திலல்ல, சமீபத்தில் இருந்து உதவுகிறார்.

சமாதானத்தின் தேவன்: நீங்கள் அமர்ந்திருந்து நானே தேவனென்று அறிந்துகொள்ளுங்கள். அமைதியிலும், நம்பிக்கையிலுமே நாம் தேவனைக் காண இயலும். அவரே நமது பூரண ஆசீர்வாதத்தின் உற்று. நம்மைக் காத்து வழிநடத்துகிறவர் அவர்தான். யாக்கோபின் தேவன் நம்மோடிருப்பதினால்தான் நாம் சோதனையில் தைரியமுடனும், குழப்பத்தில் அமைதியுடனும் நிலைத்திருக்க முடிகிறது. அவர் சமாதானத்தை நம் உள்ளத்தில் நிறைத்துள்ளார். அவர் நமக்கு அமைதியைக் கொடுத்திருக்கும்போது நமக்குத் துன்பத்தைக் கொடுப்பவன் யார்?

முன்னேறிச் செல்ல விரும்புகிற ஒவ்வொருவரும் அமர்ந்திருக்கவேண்டும்.