September

தெரிந்துகொள்ள உதவுதல்

2023 செப்டம்பர் 10 (வேத பகுதி: 1 சாமுவேல் 12,14 முதல் 15 வரை) “நீங்கள் கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படியாமல், கர்த்தருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்களானால், கர்த்தருடைய கை உங்கள் பிதாக்களுக்கு விரோதமாயிருந்ததுபோல உங்களுக்கும் விரோதமாயிருக்கும்” (வசனம் 15). கர்த்தர் சவுலை இஸ்ரவேல் மக்களுக்கு ராஜாவாக நியமித்தாலும், நியாயாதிபதி என்னும் பொறுப்பை தான் துறந்தாலும், ஒரு தீர்க்கதரிசி என்ற நிலையில் தன்னுடைய ஆவிக்குரிய பணியை அவன் தொடர்கிறான். இந்தச் சாமுவேலைப் போலவே, நாம் ஒவ்வொருவரும் பிறருடைய ஆவிக்குரிய…

September

உயிர்மீட்சிக் கூட்டம்

2023 செப்டம்பர் 9 (வேதபகுதி: 1 சாமுவேல் 12:6-14) “இப்போதும் கர்த்தர் உங்களுக்கும் உங்கள் பிதாக்களுக்கும் செய்துவந்த எல்லா நீதியான கிரியைகளைக்குறித்தும், நான் கர்த்தருடைய சந்நிதியில் உங்களோடே நியாயம் பேசும்படிக்கு நீங்கள் நில்லுங்கள்” (வச. 7). சாமுவேல் கில்காலில், கர்த்தருடைய சமூகத்தில் கூடியிருந்த மக்களிடத்தில், புதிய ராஜாவுக்கான முடிசூட்டு விழாவையும், தன்னுடைய ஓய்வையும் அறிவித்தபின், மூன்றாவதாக அவர்களுடைய ஆன்மீக புதுப்பித்தலுக்கான உயிர்மீட்சிக் கூட்டத்தில் உரையாற்றுகிறார். நியாயாதிபதிகள் காலமாயிருந்தாலும், ராஜாக்களின் காலமாக இருந்தாலும், மக்கள் கர்த்தருக்கு உண்மையாக இராவிட்டால்,…

September

ஊழியத்தில் உண்மை

2023 செப்டம்பர் 8 (வேதபகுதி: 1 சாமுவேல் 12:3-5) “இதோ, இருக்கிறேன்; கர்த்தரின் சந்நிதியிலும் அவர் அபிஷேகம்பண்ணி வைத்தவருக்கு முன்பாகவும் என்னைக் குறித்துச் சாட்சி சொல்லுங்கள்” (வச. 3). சாமுவேல் விடைபெற்றுச் செல்லுவதற்கு முன், ஒரு தலைவன் என்ற முறையில் தான் உண்மையும் உத்தமுமாக நடந்துகொண்டதைக் குறித்து அறிக்கையிட்டான். இது ஓய்வுபெற்றுச் செல்லும் போது பேசுகிற சம்பிரதாயமான வெற்று வார்த்தைகள் அல்ல. மாறாக, மக்களுக்கு நேராக விடுக்கப்பட்ட சவால் நிறைந்த வார்த்தைகள். சாமுவேல் எந்த வகையிலும் மக்களை…

September

வழிவிட்டு விலகுதல்

2023 செப்டம்பர் 7 (வேதபகுதி: 1 சாமுவேல் 12:1-2) “இப்போதும் இதோ, ராஜாவானவர் உங்களுக்கு முன்பாகச் சஞ்சரித்துவருகிறார்; நானோ கிழவனும் நரைத்தவனுமானேன்; என் குமாரர் உங்களோடிருப்பார்கள்” (வச. 2). சாமுவேல் என்னும் கர்த்தருக்குப் பிரியமான மனிதன், கில்காலில் கூட்டப்பட்ட இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாக தன்னுடைய சொற்பொழிவைத் தொடங்குகிறார். இந்த சொற்பொழிவு மூன்று காரியங்களை முன்வைத்தது: 1, முடிசூட்டு விழா, 2, உயிர்மீட்சிக் கூட்டம், 3, பிரிவு உபச்சார விழா. பவுல் என்னும் மாபெரும் தேவனுடைய மனிதன், மிலேத்துவில்…

September

எது மகிழ்ச்சி?

2023 செப்டம்பர் 6 (வேதபகுதி: 1 சாமுவேல் 11:14-15) “அப்படியே ஜனங்கள் எல்லாரும் கில்காலுக்குப் போய், அவ்விடத்திலே கர்த்தருடைய சந்நிதியில் சவுலை ராஜாவாக ஏற்படுத்தி(னார்கள்)” (வச. 15). ஒரு மாபெரும் வெற்றியின் வேளையில் சவுல் அரியணை ஏறினார். அவருடைய வெற்றி அவரது முடிசூட்டுதலுக்கான படிக்கட்டாக அமைந்தது. இந்த வெற்றி சவுலை ஒரு தலைவனாக ஆக்கியது. இஸ்ரவேல் நாட்டின் முதல் மன்னனாக சவுல் பதவியேற்றான். இந்த நாட்டின் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியது. முதல் ராஜாவும் அதன் குடிமக்களும்…

September

வெற்றியில் தாழ்மை

2023 செப்டம்பர் 5 (வேதபகுதி: 1 சாமுவேல் 11,2 முதல் 13 வரை) “அதற்குச் சவுல்: இன்றையதினம் ஒருவரும் கொல்லப்படலாகாது; இன்று கர்த்தர் இஸ்ரவேலுக்கு இரட்சிப்பை அருளினார் என்றான்” (வசனம் 13). ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் (மத்தேயு 5,3) என்று கர்த்தராகிய இயேசு கூறினார். நமக்கு எதிரான போரில் வெற்றி எவ்வளவு முக்கியமோ, அதைக் காட்டிலும் முக்கியமானது வெற்றிக்குப் பின்னர் எளிமையோடும் தாழ்மையோடும் நடந்துகொள்வது. சவுல் அம்மோனியர்களின் மீதான வெற்றியின் கிரீடத்தை ஆண்டவர் பாதத்தில் சமர்ப்பித்தான். மக்கள்…

September

கபடற்ற தன்மை

2023 செப்டம்பர் 4 (வேத பகுதி: 1 சாமுவேல் 11,9 முதல் 11 வரை) “ஸ்தானாபதிகள் வந்து யாபேசின் மனுஷரிடத்தில் அதை அறிவித்தார்கள்; அதற்கு அவர்கள் சந்தோஷப்பட்டார்கள்” (வசனம் 9). அம்மோனியர்களுக்குப் பயந்து, இக்காட்டான சூழ்நிலையில் பரிதவித்துக்கொண்டிருந்த யாபேசின் மக்களுக்கு, உங்களுக்கு உதவி செய்ய நாங்கள் இருக்கிறோம் என்ற செய்தி கிடைத்தவுடன் அவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள். தங்களைக் காப்பாற்ற யாராவது இருக்கிறார்களா என்று காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு யாரோ ஒருவர் தங்களைக் காப்பாற்ற முன்வருகிறார் என்ற செய்தியே சந்தோஷமடையப்…

September

ஊழியங்களின் நோக்கம்

2023 செப்டம்பர் 3 (வேத பகுதி: 1 சாமுவேல் 11,7 முதல் 8 வரை) “அப்பொழுது கர்த்தரால் உண்டான பயங்கரம் ஜனத்தின்மேல் வந்ததினால், ஒருமனப்பட்டுப் புறப்பட்டு வந்தார்கள்” (வசனம் 7). பரிசுத்த ஆவியானவர் சவுலின் மீது இறங்கியவுடன் அவன் கோபங்கொண்டவனாகி, ஒரு மாட்டைப் பிடித்து, துண்டுகளாக வெட்டி, இஸ்ரவேல் எல்லையெங்கும் அனுப்பினான் (வசனம் 6 முதல் 7). இது ஒரு செய்தியின் தீவிரத்தை மக்களுக்கு உணர்த்துவதற்கான அந்தக் காலத்திய ஏற்பாடு. ஒருவர்மீது பரிசுத்த ஆவியானவர் இறங்கியவுடன் அவருக்குக்…

September

நம்மை உணர்ந்துகொள்ளுதல்

2023 செப்டம்பர் 2 (வேத பகுதி: 1 சாமுவேல் 11,3 முதல் 7 வரை) “சவுல் இந்தச் செய்திகளைக் கேட்டவுடனே, தேவனுடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால் அவன் மிகவும் கோபம் மூண்டவனாகி,..” (வசனம் 6). தங்கள்மீது படையெடுத்து வந்த நாகாசிடம் யாபேசின் மக்கள் ஏழுநாள் தவணை கேட்டார்கள். நாங்கள் எங்கள் நாடு முழுவதும் தூதுவர்களை அனுப்பி உதவி கேட்போம். எவரும் முன்வரவில்லை என்றால், நாங்கள் உம்மிடத்தில் வந்து தோல்வியை ஒத்துக்கொள்வோம். அப்பொழுது நீ எங்களுடைய வலது கண்களைப்…

September

பெலவீனப்படுத்தும் முயற்சி

2023 செப்டம்பர் 1 (வேத பகுதி: 1 சாமுவேல் 11,2) “அதற்கு அம்மோனியனாகிய நாகாஸ்: நான் உங்கள் ஒவ்வொருவருடைய வலது கண்ணையும் பிடுங்கி, இதினாலே இஸ்ரவேல் எல்லாவற்றின்மேலும் நிந்தைவரப்பண்ணுவதே நான் உங்களோடே பண்ணும் உடன்படிக்கை என்றான்” (வசனம் 2). நாங்கள் உம்மிடத்தில் சமரச உடன்படிக்கை செய்துகொள்கிறோம் என்று தூது அனுப்பிய யாபேசின் மக்களுக்கு, அம்மோனியர்களின் தலைவனாகிய நாகாசின் பதில் நமக்கு அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. நிச்சயமாகவே இவன் ஒரு கொடூரமான மனிதன் என்பதில் சந்தேகமில்லை. சாத்தானிடத்தில் எவ்விதத்…