கண்களுக்குப் பிரியமானதைச் செய்தல்
2023 மே 1 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 14,1 முதல் 3 வரை) “சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,” (வசனம் 1). இஸ்ரவேல் மக்கள்மீதான பெலிஸ்தர்களின் அடக்குமுறை என்பது தந்திரமானது. அவர்கள் போரினால் அல்ல, அவர்களுடைய பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் இஸ்ரவேல் மக்களின்மீது புகுத்திவிட்டிருந்தனர். இந்த உலகத்தினுடைய மிகப் பெரும் ஆபத்து என்பதே கிறிஸ்தவர்களாகிய நம்முடைய தனித்துவத்தை இழக்கச் செய்வதுதான். நமக்கும் அவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்ற எண்ணத்தை நம்முடைய…