June

உழைப்பின் மேன்மை

2023 யூன் 10 (வேத பகுதி: ரூத் 2,5 முதல் 7 வரை) “பின்பு போவாஸ் அறுக்கிறவர்கள்மேல் கண்காணியாக வைக்கப்பட்ட தன் வேலைக்காரனை நோக்கி இந்த பெண் பிள்ளை யாருடையவள் என்று கேட்டான் (வசனம் 5). நீங்கள் யாராக இருந்தாலும், கர்த்தருடைய நாமத்தில் ஒன்றுகூடிவரும் அவருடைய மக்களுடன் உங்களை அடையாளப்படுத்திக் கொண்டால், நீங்கள் ஒற்றுமையாக இருப்பதால் உண்டாகும் மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். மேலும் கர்த்தருடைய வார்த்தையின் மீது நீங்கள் உண்மையான ஆர்வம் கொண்டிருந்தால் அவர் தம்மை உங்களுக்கு கூடுதலாக…

June

கர்த்தருடைய பிள்ளைகளுடன் ஐக்கியம்

2023 யூன் 9 (வேத பகுதி: ரூத் 2,4) “அப்பொழுது போவாஸ் பெத்லெகேமிலிருந்து வந்து, அறுக்கிறவர்களைப் பார்த்து, கர்த்தர் உங்களோடுகூட இருப்பாராக என்றான்; அதற்கு அவர்கள் கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக என்றார்கள்” (வசனம் 4). விசுவாசிகளின் மிகப்பெரிய பலமே, கர்த்தருடைய நாமத்தில் கூடிவரும்போது அவருடைய பிள்ளைகளுடன் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் கொண்டிருக்கும் ஐக்கியமே ஆகும். விசுவாசிகளுடைய ஐக்கியத்தை கர்த்தர் பெரிதும் மதிக்கிறார். “இரண்டு பேராவது மூன்று பேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்”…

June

வசனத்தின்மேல் வாஞ்சை

2023 யூன் 8 (வேத பகுதி: ரூத் 2,1 முதல் 3 வரை) “நகோமிக்கு அவளுடைய புருஷனாகிய எலிமெலேக்கின் உறவின் முறையில் போவாஸ் என்னும் பேருள்ள மிகுந்த ஆஸ்திக்காரனாகிய இனத்தான் ஒருவன் இருந்தான்” (வசனம் 1). திராட்சரசம் குறைவுபட்ட திருமண வீட்டில் தண்ணீரை நல்ல ரசமாக மாற்றிய இயேசு நாதர் அறிமுகமாகிறது போல, உச்சிவெயிலில் தாகத்தால் சோர்ந்துபோயிருந்த சமாரியப் பெண்ணுடன் கிணற்றண்டையில் உரையாடி ஆவிக்குரிய தாகம் தீர்த்த கிறிஸ்துவைப் போல, பெத்லெகேமுக்கு அடைக்கலம் தேடிவந்த இரண்டு ஏழை…

June

நொறுக்கப்பட்ட பின் ஆசீர்வாதம்

2023 யூன் 7 (வேத பகுதி: ரூத் 1,20 முதல் 22 வரை) “வாற்கோதுமை அறுப்பின் துவக்கத்தில் அவர்கள் பெத்தலெகேமுக்கு வந்தார்கள்” (வசனம் 22). நகோமியும் ரூத்தும் களைப்படைந்தவர்களாய் பெத்தலெகேம் வந்து சேர்ந்தார்கள். பழைய நினைவுகள் நகோமிக்கு வந்து உள்ளத்தை ஆட்கொண்டன. பத்தாண்டுகளுக்கு முன்னர் இங்கிருந்தபோது இருந்த மகிழ்ச்சி இப்போது அவளுக்கு இல்லை. சோகமும் வெறுமையும் நிறைந்தவளாய் அங்கு நின்றாள். இரண்டு புதிய முகங்களைப் பார்த்தவுடன் அந்த ஊர் விழித்துக்கொண்டது. ஓடிப்போன இளையகுமாரன் திரும்பி வந்தபோது ஓடி…

June

ஒருமித்து நடத்தல்

2023 யூன் 6 (வேத பகுதி: ரூத் 1,18 முதல் 19 வரை) “அப்படியே இருவரும் பெத்லெகேம் மட்டும் நடந்துபோனார்கள்” (வசனம் 19). ரூத்தின் விசுவாசம் நகோமியை அசைத்தது. நகோமி பின்மாற்றத்திலிருந்து மீண்டு வந்து, கர்த்தருடைய மக்களின் ஐக்கியத்தைத் தேடி திரும்பிக்கொண்டிருக்கிறாள். ஆனால் ரூத்தோ ஓர் இளம் விசுவாசி. சில நேரங்களில் ரூத் போன்ற இளம் விசுவாசிகளின் வார்த்தைகளின் வாயிலாக, நகோமி போன்ற மூத்த விசுவாசிகளிடம் தேவன் பேசுகிறார். தன்னுடைய குறைவையும், கர்த்தர்மீது வைத்த அவநம்பிக்கையையும் குறித்துச்…

June

தீர்மானத்தை அறிக்கையிடுதல்

2023 யூன் 5 (வேத பகுதி: ரூத் 1,16 முதல் 18 வரை)  “நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்” (வசனம் 16). ரூத், நகோமியின் வார்த்தைகளுக்கு அப்பால் இஸ்ரவேலின் தேவன்மீது நம்பிக்கைவைத்தாள். நகோமியின் குடும்பத்தார் வாயிலாகத் தனக்குக் கிடைக்கப்பெற்ற கொஞ்ச வெளிச்சத்தில் இறைவனை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டாள். தான் ஒரு மோவாபிய பெண்ணாக இருந்தாலும், மேசையிலிருந்து விழும் எஞ்சிய…

June

தீர்மானம் எடுத்தல்

2023 யூன் 4 (வேத பகுதி: ரூத் 1,14 முதல் 15 வரை) “ஓர்பாள் தன் மாமியை முத்தமிட்டுப் போனாள், ரூத்தோ அவளை விடாமல் பற்றிக்கொண்டாள்” (வசனம் 14). நகோமியின் இரண்டு மருமகள்களும் சத்தமிட்டு அழுதார்கள் (வசனம் 14). அங்கே ஒரு பாசப்பிணைப்பின் போராட்டம் நடந்தது. இது மாமியைப் பின்பற்றுவதா? அல்லது விட்டுவிட்டு தன் சொந்த ஊருக்குத் திரும்புவதா? மாமியுடன் சென்று துன்பத்தை அனுபவிப்பதா? அல்லது திரும்பிச் சென்று இன்பத்தை அனுபவிப்பதா? ஓர்பாளுக்கும் ரூத்துக்கும் முடிவெடுக்கும் நேரம்…

June

அவநம்பிக்கையின் வெளிப்பாடு

2023 யூன் 3 (வேத பகுதி: ரூத் 1,9 முதல் 13 வரை) “கர்த்தருடைய கை எனக்கு விரோதமாயிருக்கிறதினால், உங்கள் நிமித்தம் எனக்கு மிகுந்த விசனம் இருக்கிறது என்றாள்” (வசனம் 13). பின்மாற்றமுள்ள விசுவாசி திரும்பி கர்த்தரிடம் வருகிற வேளையில் தன் சொந்தக் கருத்துகளை விட்டு கர்த்தருடைய வாக்குறுதிகளை நம்ப வேண்டியது அவசியம். நகோமி தன்னுடைய துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் பின்னாகக் கர்த்தரே இருக்கிறார் என்பதை அறிந்துகொண்டாள். அதாவது மோவாப்பில் அவளுக்கு நேரிட்ட துரதிஷ்டமான சம்பவங்கள் கர்த்தராலே ஏற்பட்டிருக்குமோ…

June

வழியில் ஏற்பட்ட தயக்கம்

2023 யூன் 2 (வேத பகுதி: ரூத் 1,7 முதல் 9 வரை) “நகோமி தன் இரண்டு மருமக்களையும் நோக்கி: நீங்கள் இருவரும் உங்கள் தாய்வீட்டுக்குத் திரும்பிப்போங்கள் … என்று சொல்லி அவர்களை முத்தமிட்டாள்” (வசனம் 8 முதல் 9). கர்த்தரை விட்டுத் தூரம் போனவர்கள் மீண்டும் கர்த்தரிடம் திரும்பி வரும்போது எவ்வித இடையூறுகளும் இன்றி சகலமும் சுமூகமாய் நடக்கும் என்று சொல்லிவிட முடியாது. முதலாவது அவர்கள் தங்கள் சொந்தத் தயக்கங்களையும், பிறகு சுற்றத்தாருடைய கருத்துகளையும் எதிர்…

June

சத்தியத்துக்குத் திரும்புதல்

2023 ஜுன் 1 (வேத பகுதி: ரூத் 1,6 முதல் 7அ வரை) “கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் மோவாப் தேசத்திலே கேள்விப்பட்டு” (வசனம் 6). ஆண்கள் இல்லாத வீட்டில் நகோமியே இப்பொழுது குடும்பத் தலைவி. கர்த்தர் இப்பொழுது அவளுடன் இடைபட்டார். அந்நிய தேசத்தில் இளைத்துப்போயிருந்த நகோமிக்கு ஒரு நல்ல செய்தி எட்டியது. “கர்த்தர் தம்முடைய ஜனங்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆகாரம் அருளினார் என்று அவள் கேள்விப்பட்டாள்” (வசனம் 6).…