August

கர்த்திரிடத்தில் திரும்புதற்கான அழைப்பு

2023 ஓகஸ்ட் 11 (வேத பகுதி: 1 சாமுவேல் 7,3 முதல் 6 வரை) “பின்பு சாமுவேல்: நான் உங்களுக்காகக் கர்த்தரை மன்றாடும்படிக்கு, இஸ்ரவேலர் எல்லாரையும் மிஸ்பாவிலே கூட்டுங்கள் என்றான்” (வசனம் 5). பெலிஸ்தியர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஒப்படைத்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. சாமுவேல் பல ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கதரிசிதான் என இஸ்ரவேல் மக்கள் முழுமைக்கும் தெரிந்திருந்தது (1 சாமுவேல் 3,20). இருப்பினும் பெட்டி அபினதாபின் வீட்டில் இருந்த இருபது ஆண்டுகளாக அவன் என்ன செய்துகொண்டிருந்தான்? வெளிப்படையாகச்…

August

வீட்டைத் திறந்துகொடுத்தல்

2023 ஓகஸ்ட் 10 (வேத பகுதி: 1 சாமுவேல் 7,1 முதல் 2 வரை) “கர்த்தருடைய பெட்டியை எடுத்து, மேட்டின் மேலிருக்கிற அபினதாபின் வீட்டிலே கொண்டுவந்து வைத்து…” (வசனம் 1). பெத்ஷிமேசின் மக்கள் உடன்படிக்கைப் பெட்டியைக் குறித்த காரியத்தில் பெலிஸ்தியர்களைப் போலவே நடந்துகொண்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை தங்களுடைய தகுதிக்கு அப்பாற்பட்ட பரிசுத்தத்தை அவர் எதிர்பார்ப்பதாக எண்ணினார்கள். எனவே தங்களுக்கு ஏற்பட்ட சிட்சையைக் கண்டு பயந்து, கீரியாத்யாரீம் என்னும் கிராமத்துக்கு அதை அனுப்ப முடிவுசெய்தார்கள். நாமும் கூட பல…

August

மகிமையைப் புரிந்துகொள்ளுதல்

2023 ஓகஸ்ட் 9 (வேத பகுதி: 1 சாமுவேல் 6,19 முதல் 18 வரை) “இந்தப் பரிசுத்தமான தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கத்தக்கவன் யார்?” (வசனம் 20). பெத்ஷிமேசின் மனுஷர் கர்த்தருடைய பெட்டியை உற்றுப் பார்த்தபடியினால், கர்த்தர் அவர்களை அடித்தார் (வசனம் 19). இந்தக் கிராமத்தாரில் பலர் செத்தார்கள். உடன்படிக்கைப் பெட்டி பெலிஸ்தியர்களிடம் இருந்த ஏழு மாதமளவும் அவர்கள் ஒருபோதும் அதற்குள் என்ன இருக்கிறது என்பதை பார்க்கத் துணியவில்லை. அவர்களுக்கு இல்லாத தைரியம், அல்லது அதைக் குறித்த…

August

வாய்ப்புகளைப் புறக்கணித்தல்

2023 ஓகஸ்ட் 8 (வேத பகுதி: 1 சாமுவேல் 6,13 முதல் 18 வரை) “பெத்ஷிமேசின் மனுஷர் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள்” (வசனம் 13). நம் வாழ்க்கைக்கு ஒரு நல்ல திட்டத்தை வைத்திருக்கும் அன்பான கடவுள் நமக்கு இருக்கிறார் என நம்பாமல், இந்த உலகக் காரியங்களினிமித்தம் பயத்தையும், பெருமையையும் கொண்டவர்களாக இருப்போமானால் நம்முடைய இத்தகைய பரிதாபமான சூழ்நிலைக்கு நாம் ஒருபோதும் அவரைக் குற்றம்…

August

நிரூபணங்களைப் புறக்கணித்தல்

2023 ஓகஸ்ட் 7 (வேத பகுதி: 1 சாமுவேல் 6,6 முதல் 12 வரை) “அது தன் எல்லைக்குப் போகிறவழியாய் பெத்ஷிமேசுக்குப் போனால், இந்தப் பெரிய தீங்கை நமக்குச் செய்தவர் அவர்தாமே என்று அறியலாம்” (வசனம் 9). பெலிஸ்தியர்கள் தங்களுடைய வல்லமை இழந்த கடவுள்களைப் புறக்கணித்துவிட்டு, சர்வ வல்லமை பொருந்திய கர்த்தரைத் தேடுவதற்குப் பதிலாக, அவர்களுடைய சிந்தையெல்லாம் கர்த்தருடைய பெட்டியை அப்புறப்படுத்துவதிலேயே மும்முரமாக இருந்தது என்பது நமக்கு வியப்பாக இருக்கிறது. இந்தச் சம்பவம் புதிய ஏற்பாட்டில் நடைபெற்ற…

August

குற்றத்தை ஒத்துக்கொள்ளுதலும் பரிகாரமும்

2023 ஓகஸ்ட் 6 (வேத பகுதி: 1 சாமுவேல் 6,1 முதல் 5 வரை) “கர்த்தருடைய பெட்டி பெலிஸ்தரின் தேசத்தில் ஏழுமாதம் இருந்தது” (வசனம் 1). பெலிஸ்தியர்கள் உடன்படிக்கைப் பெட்டியைக் கைப்பற்றியபோது அவர்கள் அதை இஸ்ரவேலருக்கு எதிரான பெரிய வெற்றி என்று நினைத்தார்கள். ஆனால் காலப்போக்கில் பெலிஸ்தர்கள் உடன்படிக்கைப் பெட்டியை ஒரு பாரமாக கருதத் தொடங்கினர். ஊர் ஊராகக் கொண்டு சென்று மக்களிடத்தில் காண்பிக்கும் ஒரு வெற்றிக்கோப்பை அல்ல என்பதை உணர்ந்து கொள்வதற்கு ஏழு மாதம் ஆகிற்று.…

August

எதிரி நாட்டில் கர்த்தருடைய மகிமை

 2023 ஓகஸ்ட் 5 (வேத பகுதி: 1 சாமுவேல் 5,1 முதல் 12 வரை) ” இதோ தாகோன் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாக தரையிலே முகம் குப்புற விழுந்து கிடந்தது ” (வசனம் 3). கர்த்தருடைய மகிமை இஸ்ரவேலை விட்டு கடந்து போய் இருக்கலாம். ஆனால் தேவனே இன்னும் பிரபஞ்சத்தை தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறார். அவர், தம்முடைய திருப்பெயருக்கு களங்கம் ஏதும் வராமல் பாதுகாப்பதற்கு போதுமானவராக இருக்கிறார். ஐயோ, கர்த்தருடைய பெட்டியும் மகிமையும் எதிரிகளின் வசம் ஆகிவிட்டதே…

August

மகிமை விலகி செல்லுதல்

ஓகஸ்ட் 4 (வேத பகுதி: 1 சாமுவேல் 4,12 முதல் 22 வரை) தேவனுடைய பெட்டியும் பிடிபட்டு போயிற்று (வசனம் 17) துர்ச்செய்தி தேசமெங்கும் உடனடியாக பரவியது. ஊரெங்கும் புலம்பலின் சத்தம் கேட்டது. ஏனெனில் பெலிஸ்தியர் உடனான போரில் 34000 வீரர்கள் மாண்டனர். உடன்படிக்கைப் பெட்டியை நடத்தி சென்ற ஓப்னியும் பினெகாசும்கூட மாண்டார்கள். அந்நாட்டு மக்களைப் பொருத்தவரை இது மிக மோசமான செய்தி. பரிசுத்த சந்ததியினர் என அழைக்கப்பட்டவர்கள் விக்கிரகாராதனைகாரர் முன் மடிந்து கிடந்தனர். ஆனால் வேறு…

August

தவறான அணுகுமுறை

2023 ஓகஸ்ட் 3 (வேத பகுதி: 1 சாமுவேல் 4,4 முதல் 11 வரை) அப்படியே கேருபீன்களின் மத்தியிலே வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துவர, ஜனங்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள். ( 1 சாமுவேல் 4,4 ) ஆசரிப்புக் கூடாரம் ஒரு உன்னத நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. இஸ்ரவேல் மக்கள் நடுவே கர்த்தர் வாசம்பண்ணும்படியாகவும், அவர்கள் அவரை எளிதில் சந்திக்கும்படியாகவும் ஏற்படுத்தப்பட்டது. மேலும் மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு தேவனோடு ஒப்புரவாகும் வழியாக விளங்கியது. காலப்போக்கில் அதின்…

August

தவறுமேல் தவறு

2023 ஓகஸ்ட்  2 (வேத பகுதி: 1 சாமுவேல் 4,1 முதல் 3 வரை) “இன்று கர்த்தர் பெலிஸ்தருக்கு முன்பாக நம்மை முறிய அடித்ததென்ன?” (வசனம் 3). “சாமுவேலின் வார்த்தை இஸ்ரவேலுக்கெல்லாம் வந்தது. இஸ்ரவேலர் பெலிஸ்தருக்கு விரோதமாய் யுத்தஞ்செய்யப்புறப்பட்டு, எபெனேசருக்குச் சமீபத்தில் பாளயமிறங்கினார்கள்; பெலிஸ்தரோ ஆப்பெக்கிலே பாளயமிறங்கியிருந்தார்கள்” (வசனம் 1). சாமுவேல் தீர்க்கதரிசியாக நாடு முழுவதும் அறியப்பட்டபோது இந்தப் போர் நடைபெற்றது என்பதை நமக்கு அறியத்தருகிறது. மேலும் பெலிஸ்தியர்கள் ஏற்கனவே படையெடுத்து வந்துவிட்டதன் காரணமாகவே இஸ்ரவேலர்கள் அதை…