August

சிறிய கதாபாத்திரங்கள்

2023 ஓகஸ்ட் 21 (வேத பகுதி: 1 சாமுவேல் 9,7 முதல் 14 வரை) “அவர்கள் பட்டணத்து மேட்டின் வழியாய் ஏறுகிறபோது, தண்ணீர் எடுக்கவந்த பெண்களைக் கண்டு: ஞானதிஷ்டிக்காரன் இங்கே இருக்கிறாரா என்று அவர்களைக் கேட்டார்கள்” (வசனம் 11). சவுலும் அவனுடைய வேலைக்காரனும் கர்த்தருடைய மனிதனைக் காண வேண்டும் என்று முடிவு எடுத்தபோது, அதற்கான வழிகளும் ஆச்சரியமான விதத்தில் திறக்கப்பட்டன. “தேவனுடைய மனுஷனாகிய அவருக்குக் கொண்டு போகத்தக்க காணிக்கை நம்மிடத்தில் ஒன்றும் இல்லையே” என்று சவுல் கைவிரித்தபோது,…

August

நற்சாட்சியுள்ள மனிதர்கள்

2023 ஓகஸ்ட் 20 (வேத பகுதி: 1 சாமுவேல் 9,5 முதல் 6 வரை) “இதோ, இந்தப் பட்டணத்திலே தேவனுடைய மனுஷன் ஒருவர் இருக்கிறார்; … அவர் நாம் போகவேண்டிய நம்முடைய வழியை நமக்குத் தெரிவிப்பார் என்றான்” (வசனம் 6). காணாமற்போன கழுதைகளைக் குறித்த தேடல் சவுலுக்கு மனச்சோர்வை உண்டாக்கியது. “கழுதைகளின் மேலுள்ள கவலையை விட்டு, நமக்காகக் கவலைப்படாதபடிக்குத் திரும்பிப் போவோம் வா” (வசனம் 5) என்று சவுல் தன் வேலைக்காரனிடம் கூறினான். நம்முடைய தேடல் முடிவற்றதாகவும்,…

August

உணர்ந்து செயல்படுதல்

2023 ஓகஸ்ட் 19 (வேத பகுதி: 1 சாமுவேல் 9,3 முதல் 4 வரை) “சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற்போயிற்று” (வசனம் 3). தேவனுடைய வழிகள் நம்முடைய ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை. அவர் தம்முடைய காரியங்களை நிறைவேற்ற இந்த வழியில்தான் செயல்படுவார் என்று நம்மால் ஊகிக்க முடியாதபடி செயல்படுகிறவர். மக்களுக்குப் பிரியமான ஒரு நபரை இஸ்ரவேல் நாட்டுக்கு அரசனாக்குவதற்காக அவரால் தெரிந்துகொள்ளப்பட்டவை சவுல் வீட்டில் இருந்த கழுதைகள். “சவுலின் தகப்பனாகிய கீசுடைய கழுதைகள் காணாமற்போயிற்று” (வசனம் 3)…

August

நடைமுறைச் சிக்கல்கள்

2023 ஓகஸ்ட் 18 (வேத பகுதி: 1 சாமுவேல் 9,1 முதல் 2 வரை) “அவனுக்குச் சவுல் என்னும் பேருள்ள சவுந்தரியமான வாலிபனாகிய ஒரு குமாரன் இருந்தான்; இஸ்ரவேல் புத்திரரில் அவனைப்பார்க்கிலும் சவுந்தரியவான் இல்லை” (வசனம் 2). இஸ்ரவேல் வரலாற்றில், “ராஜாக்களின் யுகம்” என்னும் ஒரு புது யுகம் தொடங்குகிறது.  மக்கள் தங்களுடைய ராஜாவாக யாரைத் தெரிந்துகொள்வார்களோ, எப்படிப்பட்ட மனிதன் அவர்களுக்கு விருப்பமாயிருக்குமோ அத்தகையவராக சவுல் நமக்கு அறிமுகமாகிறார். அவர்கள் ஓர் ஆடம்பரமும், அழகும், பெருமையும், ஆளுமையும்…

August

நடைமுறைச் சிக்கல்கள்

2023 ஓகஸ்ட் 17 (வேத பகுதி: 1 சாமுவேல் 8,10 முதல் 22 வரை) “நீங்கள் தெரிந்துகொண்ட உங்கள் ராஜாவினிமித்தம் அந்நாளிலே முறையிடுவீர்கள்; ஆனாலும் கர்த்தர் அந்நாளிலே உங்களுக்குச் செவிகொடுக்கமாட்டார் என்றான்” (வசனம் 18). ஓர் அரசன் எங்களுக்கு வேண்டும் எனக் கேட்ட இஸ்ரவேலர்களிடம், அதனால் வரக்கூடிய சிக்கல்கள் என்னவென்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்று கர்த்தர் விரும்பினார். அவர்களுக்கு ஓர் அரசன் இருந்தால் பல சிக்கல்கள் தீரும் என்பது உண்மைதான். ஆனால் அதைவிடக் கூடுதலாக பல சிக்கல்களை…

August

கர்த்தருடைய எச்சரிப்பு

2023 ஓகஸ்ட் 16 (வேத பகுதி: 1 சாமுவேல் 8,9) “இப்போதும் … அவர்களை ஆளும் ராஜாவின் காரியம் இன்னது என்று அவர்களுக்குத் திடசாட்சியாய்த் தெரியப்படுத்து என்றார்” (வசனம் 9). விசுவாசிகள் எப்பொழுதெல்லாம் தேவனின்மீது நம்பிக்கை வைக்கத் தவறுகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவருடைய உண்மையான ஊழியர்களையும் குறைசொல்வார்கள். இஸ்ரவேல் மக்கள் தங்களுக்கு ஒரு ராஜா வேண்டும் என்று கேட்டது சாமுவேலுக்கு வருத்தத்தை உண்டுபண்ணியபோது கர்த்தர் அவனைத் தேற்றும்விதமாக, அவர்கள் முதலாவது என்னை நிராகரித்ததினாலேயே உன்னையும் நிராகரித்தார்கள் என்றார். இங்கே…

August

தவறான சுதந்தரத்துக்கு முயலுதல்

2023 ஓகஸ்ட் 15 (வேத பகுதி: 1 சாமுவேல் 8,6 முதல் 8 வரை) “அப்பொழுது கர்த்தர் சாமுவேலை நோக்கி: … அவர்கள் உன்னைத் தள்ளவில்லை, நான் அவர்களை ஆளாதபடிக்கு, என்னைத்தான் தள்ளினார்கள்.” (வசனம் 7). பொதுவாக மனிதகுலம் நேரடியாக கடவுளுடைய கட்டுப்பாட்டில் இருப்பதை விரும்புகிறதில்லை. மாறாக, கண்ணுக்குத் தெரிகிற அரசாட்சிக்கும், அதிகாரத்துக்கும் கீழ்ப்படிந்து இருப்பதையே தெரிந்துகொள்கிறது. இஸ்ரவேல் மக்களும் இதற்கு விதிவிலக்கன்று. பிற நாடுகளைப் போல இல்லாமல், தேவனால் நேரடியாக ஆளப்படுகிற ஒரு தேசத்துக்கு இருக்கக்கூடிய…

August

வாரிசுப் பிரச்சினை

2023 ஓகஸ்ட் 14 (வேத பகுதி: 1 சாமுவேல் 8,1 முதல் 5 வரை) “அவனுடைய மூத்தகுமாரனுக்குப் பெயர் யோவேல், இளையவனுக்குப் பெயர் அபியா; அவர்கள் பெயெர்செபாவிலே நியாயாதிபதிகளாயிருந்தார்கள்” (வசனம் 2). சாமுவேல் முதிர் வயதானபோது தன் மகன்களை இஸ்ரவேலின் மீது நியாயாதிபதிகளாக ஏற்படுத்தினான். தனிப்பட்ட முறையில் சாமுவேல் ஒரு சிறந்த தேவனுடைய மனிதனாகவும் கறைபடாத கரத்துக்குச் சொந்தமானவனாகவும் விளங்கினான். கர்த்தருடனான உறவில் எந்தச் சூழ்நிலையிலும் விரிசல் விழாதவாறு காத்துக்கொண்டான். எல்லாக் காரியத்துக்காகவும் ஜெபித்து கர்த்தருடைய உத்தரவைப்…

August

கர்த்தருடனான உறவின் மேன்மை

2023 ஓகஸ்ட் 13 (வேத பகுதி: 1 சாமுவேல் 7,10 முதல் 17 வரை) “இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்” (வசனம் 12). இஸ்ரவேலர்கள் மனந்திரும்பியதால் கர்த்தர் அவர்களுக்காகப் போரிடத் தொடங்கினார். இயற்கை அவர்கள் சார்பாக நின்றது. கர்த்தர் பலத்த இடிமுழக்கங்களை பெலிஸ்தியர்களின்மீது அனுப்பினார். இஸ்ரவேலர் போரிடாமலேயே வென்றனர். இடிமுழக்கங்களைக் கேட்டு பெலிஸ்தியர் குழப்பமடைந்தனர். ஆனால் இஸ்ரவேலர்களுக்கோ நம்பிக்கை பிறந்தது.  அவர்கள் ஜெயித்தார்கள். கர்த்தர் இடியை மட்டும் அனுப்பவில்லை,…

August

ஜெபமே ஜெயம்

2023 ஓகஸ்ட் 12 (வேத பகுதி: 1 சாமுவேல் 7,7 முதல் 9 வரை) “இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவிலே கூடிவந்ததைப் பெலிஸ்தர் கேள்விப்பட்டபோது, பெலிஸ்தரின் அதிபதிகள் இஸ்ரவேலுக்கு விரோதமாக எதிர்த்து வந்தார்கள்” (வசனம் 7). மக்கள் கர்த்தரிடம் முழு மனதுடன் திரும்பி வருவது என்பது கர்த்தருக்குப் பிரியமான செய்தி. ஆனால் சாத்தானைப் பொறுத்தவரை அது கெட்ட செய்தி. சாமுவேலின் முன்னிலையில் இஸ்ரவேல் மக்கள் மிஸ்பாவில் கர்த்தரிடத்தில் கூடிவந்ததை பெலிஸ்தியர்கள் தங்களுக்கு எதிரான செயலாகக் கருதினார்கள். தேவனுடைய பிள்ளைகள்…