October

பலியா, கீழ்ப்படிதலா?

2023 அக்டோபர் 12 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,22) “அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்” (வசனம் 22). மனந்திரும்பாமலும், கீழ்ப்படிதலில்லாமலும் கிறிஸ்தவத்தின் அனைத்து சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்தாலும் அவற்றால் எவ்விதப் பிரயோஜனமும் கிடையாது என்பதை சாமுவேல் சவுலுக்குத் தெரியப்படுத்தினான். கீழ்ப்படியாதவனின் இருதயம் தேவனுக்கு முன்பாக வெறுமையான காலிப்பாத்திரம் போன்றதே. அதனால் ஓசைகளை எழுப்பமுடியுமே தவிர, அது கர்த்தருக்கு உகந்த பாடல்களாக…

October

மெய்யான பலி

2023 அக்டோபர் 11 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,21) “ஜனங்களோ உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குக் கில்காலிலே பலியிடுகிறதற்காக, கொள்ளையிலே சாபத்தீடாகும் ஆடுமாடுகளிலே பிரதானமானவைகளைப் பிடித்துக்கொண்டு வந்தார்கள் என்றான்” (வசனம் 21). “சாக்குப்போக்குகள் திறமையற்றவர்களின் கருவிகள்; இவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்கள் நீண்டதூரம் பயணிப்பது அரிது” என ஒரு பழமொழி கூறுகிறது. மனிதர்களாகிய நாம் பல நேரங்களில் சாக்குப்போக்கு சொல்வதில் நல்ல திறமையுள்ளவர்களாக இருக்கிறோம். சவுலும் இதற்கு விதிவிலக்கானவன் அல்லன். தன்னுடைய குற்றத்தை மறைக்க, ஏவாளை நோக்கிக் கையை…

October

இரண்டில் ஒன்று

2023 அக்டோபர் 10 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,18 முதல் 20 வரை) “கர்த்தர் என்னை அனுப்பின வழியாய்ப் போய், அமலேக்கின் ராஜாவாகிய ஆகாகைக் கொண்டுவந்து, அமலேக்கியரைச் சங்காரம் பண்ணினேன்” (வசனம் 20). கிறிஸ்தவ வாழ்க்கையில் கர்த்தருடைய இருதயத்தைப் புரிந்துகொண்டு அதன்படி வாழ்வது என்பது ஒரு சிறப்பான வாழ்க்கை. பெரும்பாலான தருணங்களில் அவருடைய இருதயத்தைப் புரிந்துகொள்வதற்குப் பதில் சடங்குகள் மற்றும் பாரம்பரியங்களில் தீவிரம் காட்டுகிறோம். அமலேக்கியரை அழிக்கும்படி, “கர்த்தர் உம்மை அந்த வழியாய் அனுப்பினார்” (வசனம்…

October

நல்ல பார்வை

2023 அக்டோபர் 9 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,17) “அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராயிருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்” (வசனம் 17). தாழ்மை மிக முக்கியமான குணங்களில் ஒன்று. ஆரம்பத்தில் கொண்டிருக்கிற தாழ்மையை இறுதிவரை காத்துக்கொள்வதில் பலருக்குச் சிரமம் இருக்கிறது. ஒருவனிடத்தில் தாழ்மை குறையும்போது அது பெருமையாக மாறுகிறது. அவனை அது வீழ்ச்சிக்கு நேராகக் கொண்டு செல்கிறது. சவுலும் தன்னுடைய ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்ட நாட்களில் மிகுந்த தாழ்மையோடுதான் இருந்தான். ஆனால்…

October

சாக்குப்போக்குகள்

2023 அக்டோபர் 8 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,15 முதல் 16 வரை) “ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை உம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும் படிக்குத் தப்பவைத்தார்கள்; மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம் என்றான்” (வசனம்  15). சவுல் தன்னுடைய கீழ்ப்படியாமைக்கு பல்வேறுவிதமான சாக்குப்போக்குகளை அடுக்கினான். முதலாவதாக, “ஜனங்கள் ஆடுமாடுகளில் நலமானவைகளை … தப்பவைத்தார்கள்” என்று சொல்லி அவர்கள் மீது குற்றத்தைத் திருப்பினான். இரண்டாவதாக, “மற்றவைகளை முற்றிலும் அழித்துப்போட்டோம்” என்று சொல்லி கீழ்ப்படிதலில் தன்னை இணைத்துக் கொண்டான். மூன்றாவதாக,…

October

பாவஅறிக்கை செய்வோம்

2023 அக்டோபர் 7 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,14) “அதற்குச் சாமுவேல்: அப்படியானால் என் காதுகளில் விழுகிற ஆடுகளின் சத்தமும், எனக்குக் கேட்கிற மாடுகளின் சத்தமும் என்ன என்றான்” (வசனம் 14). நான், “கர்த்தருடைய வார்த்தையை நிறைவேற்றினேன்” எனக் கூறி, சவுல் தன்னுடைய கீழ்ப்படியாமையை மறைக்க முயன்றான். ஆனால் ஆடு மாடுகளின் சத்தம் சாமுவேலுக்கு அதைக் காட்டிக்கொடுத்தது. இதுபோலவே நம்முடைய கீழ்ப்படியாமையும் ஒரு நாளில் வெளியே தெரிய வரும், அல்லது பாவத்தின் சுவடுகள் அதை வெளிப்படுத்தும்,…

October

சுயபெருமைக்கு இடமளித்தல்

2023 அக்டோபர் 6 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,12 முதல் 13 வரை) “மறுநாள் அதிகாலமே சாமுவேல் சவுலைச் சந்திக்கப்போனான்” (வசனம் 12). பல ஆண்டுகளுக்குப் பின்னர், அதிகாலையில் எழுந்து சாமுவேல் சவுலைச் சந்திக்கும்படி சென்றான். இப்பொழுது தன்னால் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டவனை சந்தோஷத்தோடு அல்ல, துக்கத்தோடு சந்திக்கச் செல்கிறான். நமக்கு அன்பான ஒருவரோ அல்லது நம்மால் இரட்சிப்புக்குள்ளாக வழிநடத்தப்பட்ட ஒருவரோ அல்லது நம்மிடத்தில் திருமுழுக்குப் பெற்ற ஒருவரோ அல்லது நம்மால் சீஷத்துவப் பயிற்சியில் வளர்க்கப்பட்ட…

October

மனஸ்தாபமடைதல்

2023 அக்டோபர் 5 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,10 முதல் 11 வரை) “நான் சவுலை ராஜாவாக்கினது எனக்கு மனஸ்தாபமாயிருக்கிறது; அவன் என்னைவிட்டுத் திரும்பி, என் வார்த்தைகளை நிறைவேற்றாமற்போனான் என்றார்; அப்பொழுது சாமுவேல் மனம் நொந்து, இராமுழுதும் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்” (வசனம் 11). சவுலின் கீழ்ப்படியாமையால் கர்த்தருடைய இருதயம் உடைந்தது. மக்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் சவுலை ராஜாவாக நியமித்தார். சிறிது நாட்களிலேயே அவனுடைய கீழ்ப்படியாமை தெரிந்துவிட்டது. சவுலுக்குப் பதிலாக அவருடைய இருதயத்துக்கு ஏற்ற…

October

அரைகுறை கீழ்ப்படிதல்

2023 அக்டோபர் 4 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,4 முதல் 9 வரை) “அமலேக்கியரின் ராஜாவாகிய ஆகாகை உயிரோடே பிடித்தான்; ஜனங்கள் யாவரையும் பட்டயக் கருக்கினாலே சங்காரம்பண்ணினான்” (வசனம் 8). சவுல் படிப்படியாக கர்த்தரை விட்டுத் தூரம்போய்க்கொண்டிருந்தான். அவனுடைய இதயத்தை கீழ்ப்படியாமை என்னும் கறை படிப்படியாக அரித்துக்கொண்டிருந்தது. அமலேக்கியரைப் பற்றிய கட்டளை கர்த்தரிடத்திலிருந்து வந்தபோது, இருதயத்தில் விழுந்த ஓட்டை உலகிற்குத் தெரிய வந்தது. அமலேக்கியர் தேவனுடைய நித்திய நோக்கத்துக்கு இடையூராகவும், அவர்களுடைய பிள்ளைகளுக்கு அச்சுறுத்தலாகவும் இருந்தார்கள்.…

October

தேவனின் நியாயத்தீர்ப்பு

2023 அக்டோபர் 3 (வேத பகுதி: 1 சாமுவேல் 15,3) “இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, … கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்” (வசனம் 3). அமலேக்கியர்களின்மீது கர்த்தர் ஏன் இவ்வளவு வெறுப்பையும் கோபத்தையும் கொண்டிருக் கிறார். கர்த்தர் இரக்கமில்லாதவரும் கொடுமையானவருமாய் இருக்கிறார் என்ற தோற்றத்தை  தருகிறது அல்லவா? உண்மையில் அவ்வாறு அல்ல, அவர் இத்தனை ஆண்டுகள் அவர்கள் மீது இரக்கத்துடனே நடந்து வந்திருக்கிறார். அவர்கள் மனந்திரும்புவதற்கு இத்தனை ஆண்டுகள்…