May

தேவனின் தயவுள்ள சித்தம்

2023 மே 5 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 14,10 முதல் 18 வரை) “அவன் தகப்பன் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் போனபோது, சிம்சோன் அங்கே விருந்து செய்தான்; வாலிபர் அப்படிச் செய்வது வழக்கம்” (வசனம் 10). சிம்சோனின் தந்தை என்ற முறையில் திருமணத்துக்கான ஏற்பாடுகளை மனோவா செய்தார். பெண்ணின் வீட்டில் விருந்து நடைபெற்றது. இந்த விருந்து நிகழ்ச்சியின் போது சிம்சோனின் தாய் அங்கே இருந்ததாகக் குறிப்பு இல்லை. விசுவாச வாலிபர்கள் தங்களுடைய நம்பிக்கைக்கு ஒத்துவராத வேறு…

May

தீட்டுப்படாமல் ஆசீர்வாதங்களை அனுபவித்தல்

2023 மே 4 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 14,8 முதல் 9 வரை) “சிலநாளைக்குப்பின்பு, அவன் அவளை விவாகம்பண்ணத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப் போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது” (வசனம் 8). சிம்சோன் அவளை விவாகம் பண்ணுவதில் உறுதியாயிருந்தான். அவனுடைய பெற்றோரும்கூட இதற்குச் சம்மதித்துவிட்டனர். இப்பொழுது மீண்டும் திம்னாத்துக்கு பயணம். போகிற வழியில் அந்தத் திராட்சத் தோட்டத்தின் பழைய நினைவுகள் வந்தன. நசரேய விரதங்காக்கிற ஒருவன் திராட்சை தொடர்பான எதையும்…

May

பொல்லாங்கனை எதிர்கொள்ளுதல்

2023 மே 3 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 14:5 முதல் 7 வரை) “அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல கிழித்துப்போட்டான்” (வசனம் 6). நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை அடிமையாக்கி வைத்திருந்த மூன்று எதிரிகளைப் பற்றி வேதம் கூறுகிறது (காண்க: எபேசியர் 2,2 முதல் 3; யாக்கோபு 3,15). ஒருவன் விசுவாசியாக ஆனபின்னரும் இந்த மூன்று எதிரிகளையும் அவன் தொடர்ந்து எதிர்கொள்கிறான்.…

May

மனித தவறுகளின்மீது தேவ இறையாண்மை

2023 மே 2 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 14,4) “அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்” (வசனம் 4). சிம்சோன் திம்னாத்துக்குச் சென்று ஒரு பெலிஸ்தியப் பெண்ணைக் கண்டு, அவளை மணமுடிக்க வேண்டும் என விரும்பியது நிச்சயமாகவே ஒரு தவறான செயலே. தேவன் தம்முடைய காரியத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் செயல்படமாட்டார். “அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள்…

May

கண்களுக்குப் பிரியமானதைச் செய்தல்

2023 மே 1 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 14,1 முதல் 3 வரை) “சிம்சோன் திம்னாத்துக்குப் போய், திம்னாத்திலே பெலிஸ்தரின் குமாரத்திகளில் ஒரு பெண்ணைக் கண்டு,” (வசனம் 1). இஸ்ரவேல் மக்கள்மீதான பெலிஸ்தர்களின் அடக்குமுறை என்பது தந்திரமானது. அவர்கள் போரினால் அல்ல, அவர்களுடைய பழக்கவழக்கங்களையும், நம்பிக்கைகளையும் இஸ்ரவேல் மக்களின்மீது புகுத்திவிட்டிருந்தனர். இந்த உலகத்தினுடைய மிகப் பெரும் ஆபத்து என்பதே கிறிஸ்தவர்களாகிய நம்முடைய தனித்துவத்தை இழக்கச் செய்வதுதான். நமக்கும் அவர்களுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்ற எண்ணத்தை நம்முடைய…

April

கிருபையில் வளருதல்

2023 ஏப்ரல் 30 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 13,24 முதல் 25 வரை) “பின்பு அந்த ஸ்திரீ ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சிம்சோன் என்று பேரிட்டாள்; அந்தப் பிள்ளை வளர்ந்தது, கர்த்தர் அவனை ஆசீர்வதித்தார்” (வசனம் 24). கர்த்தர் தம்முடைய வார்த்தையில் உண்மையாயிருந்தார். அந்தப் பெண்மணிக்கு அவர் வாக்களித்தபடியே அவள் ஒரு குமாரனைப் பெற்றெடுக்கும்படி செய்தார் (வசனம் 24). எப்பொழுது அவசியமோ அப்பொழுது தன்னுடைய இரட்சகனை இந்த உலகத்தில் பிறக்கச் செய்கிறார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்…

April

நியாயப்பிரமாணத்திலிருந்து கிருபைக்கு

2023 ஏப்ரல் 29 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 13,21 முதல் 23 வரை) “கர்த்தர் நம்மைக் கொன்றுபோடச் சித்தமாயிருந்தால், அவர் நம்முடைய கையிலே சர்வாங்க தகனபலியையும் போஜனபலியையும் ஒப்புக்கொள்ளமாட்டார்” (வசனம் 23). புதிய ஏற்பாட்டில், பிலிப்பு என்னும் அவருடைய சீடன், “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும் அது போதும்” என்று கேட்டதற்கு, “இவ்வுளவு காலம் நான் உங்களுடனே இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று அவர் அவனுக்கு மறுமொழி கொடுத்தார் (யோவான்…

April

அவரை மெய்யாய் அறிந்துகொள்ளுதல்

2023 ஏப்ரல் 28 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 13,15 முதல் 20 வரை) “அவர் கர்த்தருடைய தூதன் என்று மனோவா அறியாதிருந்தான்” (வசனம் 16). இதுவரை தன்னோடு பேசிக்கொண்டிருக்கிற கர்த்தருடைய தூதனானவருக்கு விருந்தோம்பல் செய்ய வேண்டும் என்பது மனோவாவுக்கு ஆசை. அவனுடைய இந்த ஆசையைக் கர்த்தர் நிராகரிக்கவில்லை, ஆயினும் அவனுடைய ஆசையை அவருக்கேற்ற விதமாகத் திருப்பினார் (வசனம் 15 முதல் 16). நீ ஆட்டுக்குட்டியைச் சமையல் பண்ணி எடுத்துவர வேண்டாம், அதற்குப் பதில் அதைச் சர்வாங்க தகன…

April

பிள்ளை வளர்ப்புக்கான ஜெபம்

2023 ஏப்ரல் 27 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 13,12 முதல் 14 வரை) “அப்பொழுது மனோவா, நீர் சொன்ன காரியம் நிறைவேறும்போது, அந்தப் பிள்ளையை எப்படி வளர்க்க வேண்டும், அதை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்டான்” (வசனம் 12). தன் மனைவியோடு பேசினவர் நீர்தானா என மனோவா கர்த்தரிடம் கேட்டபோது, “நான் தான்” என்ற உறுதிமிக்க வார்த்தையை அவரிடமிருந்து பெற்றுக்கொண்டான் (வசனம் 11). இதற்குப் பின் அவன் எங்களுக்கு குழந்தை பிறக்குமா? அவள் இதுவரை பிள்ளை…

April

உறுதிக்கான ஜெபம்

2023 ஏப்ரல் 26 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 13,8 முதல் 11 வரை) “ஆ, என் ஆண்டவரே, நீர் அனுப்பின தேவனுடைய மனிதன் மறுபடியும் ஒருவிசை எங்களிடத்தில் வந்து” (வசனம் 8). மனோவாவின் மனைவி கர்த்தருடைய தூதனைத் தரிசித்தாள். முதல் முறை சந்திப்பின் போது நடந்த காரியத்தை தன் கணவனிடம் தெரிவித்தாள் (வசனம் 6). இரண்டாம் முறை சந்தித்தபோது, தன் கணவனை அழைத்துவர ஓடினாள் (வசனம் 10). இந்த நேரத்தில் அவள் யாதொரு முன்முடிவுக்கு வராமலும், அதைத்…