June

ஆறுதலின் வார்த்தைகள்

2023 யூன் 24 (வேத பகுதி: ரூத் 3,11) “இப்போதும் மகளே, நீ பயப்படாதே; உனக்கு வேண்டியபடியெல்லாம் செய்வேன்; நீ குணசாலி என்பதை என் ஜனமாகிய ஊராரெல்லாரும் அறிவார்கள்” (வசனம் 11). அந்த நாள் இரவு போவாசுக்கும் ரூத்துக்கும் ஒரு தூங்கா இரவாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இருவரும் பல காரியங்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்திருக்கலாம். இதன் ஊடாக, ரூத்தின் மனதில் பலவித எண்ண அலைகள் மிதந்துகொண்டிருக்கலாம். நாளைக்கு என்ன நடக்கும்? அவளுடைய இருதயத்தின் எண்ணங்களை அறிந்த போவாஸ்,…

June

கனத்துக்குரிய வாழ்த்துதல்

2023 யூன் 23 (வேத பகுதி: ரூத் 3,8 முதல் 10 வரை) “பாதிராத்திரியிலே, அந்த மனுஷன் அருண்டு, திரும்பி, ஒரு ஸ்திரீ தன் பாதத்தண்டையிலே படுத்திருக்கிறதைக் கண்டு, நீ யார் என்று கேட்டான்; அவள், நான் உம்முடைய அடியாளாகிய ரூத்; நீர் உம்முடைய அடியாள்மேல் உம்முடைய போர்வையை விரியும்; நீர் சுதந்தரவாளி என்றாள்” (வசனம் 8 முதல் 9). ரூத் அந்தக் காலத்திய யூத வழக்கத்தின்படி போவாசின் காலடியில் படுத்துக்கொண்ட செயல் அவனை ஒரு தீர்மானத்துக்கு…

June

தாழ்மையான இடம்

2023 யூன் 22 (வேத பகுதி: ரூத் 3,7) “போவாஸ் புசித்துக் குடித்து, மகிழ்ச்சியாயிருந்து, ஒரு அம்பாரத்து அடியிலே வந்து படுத்துக்கொண்டான். அப்பொழுது அவள்: மெள்ளப்போய், அவன் கால்களின்மேல் மூடியிருக்கிற போர்வையை ஒதுக்கிப் படுத்துக்கொண்டாள்” (வசனம் 7). ஒரு விசுவாசி தன்னை முற்றிலும் கர்த்தருக்கு ஒப்புவித்துவிட்டான் என்பதற்கான செயல்களில் ஒன்று முற்றிலும் அவருடைய பாதத்தில் தன்னைத் தாழ்த்துவதே ஆகும். நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன் பாவிகளாக இருந்தோம். நம்மை உணர்ந்து பூரணமாக அவரிடம் ஒப்புவிக்கும்போது இரட்சிப்பை அடைந்தோம். இது…

June

அலங்கரிப்பு

2023 யூன் 21 (வேத பகுதி: ரூத் 3,3 முதல் 6 வரை) “நீ குளித்து, எண்ணெய் பூசி, உன் வஸ்திரங்களை உடுத்திக்கொண்டு, அந்தக் களத்திற்குப்போ” (வசனம் 3). ரூத் வயலில் கதிர்பொறுக்கினாள். பின்பு அறுவடைக் காலம் முடிந்துவிட்டது. இப்பொழுது கோதுமையைச் சுத்தப்படுத்தி களஞ்சியத்தில் சேர்க்கும் காலம். இனிமேல் ரூத்தின் எதிர்காலம் என்ன? தன்னுடைய சுதந்தரவாளியிடம் முழுமையாகத் தஞ்சம் புகுவதைத் தவிர வேறு வழி என்னவாக இருக்க முடியும்? சுதந்தரவாளி என்ற முறையில் போவாஸ் ரூத்தின்மீது கொண்ட…

June

சுத்திகரிப்பு

2023 யூன் 20 (வேத பகுதி: ரூத் 3,2) “நீ போவாசின் வேலைக்காரிகளோடே கூடியிருந்தாயே, அவன் நம்முடைய உறவின் முறையான் அல்லவா? இதோ, அவன் இன்று இராத்திரி களத்திலே வாற்கோதுமை தூற்றுவான்” (வசனம் 2). நகோமி போவாசைக் குறித்து ரூத்திடம் இரண்டு விதங்களில் அறிமுகப்படுத்தினாள். ஒன்று அவன் உறவின் முறையான், மற்றொன்று அவன் களத்திலே வாற்கோதுமை தூற்றுகிறவன் (வசனம் 2). அதாவது மீட்கும் சுதந்தரவாளியாகவும், வாற்கோதுமையுடன் கலந்திருக்கும் பதரை பிரித்து எடுப்பவனாகவும் இருக்கிறான். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து…

June

குறைவுகளில் கர்த்தரை தேடுதல்

2023 யூன் 19 (வேத பகுதி: ரூத் 3,1) “பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனா?” (வசனம் 1). கோதுமை அறுவடையும் வாற்கோதுமை அறுவடையும் முடிகிற வரைக்கும் ரூத் போவாசின் வயலில் கதிர் பொறுக்கினாள்; தினமும் அவள் தன் மாமியாரோடு தங்கியிருந்தாள் (வசனம் 2,23). இந்த நாட்களில் போவாசும் ரூத்தும் பேசிக்கொண்டதாக எந்தக் குறிப்பையும் நாம் காண்கிறதில்லை. போவாசின் கட்டளைக்கு மாறாக நகோமியின்…

June

குறைவான புரிந்துகொள்ளுதல்

2023 யூன் 18 (வேத பகுதி: ரூத் 2,22 முதல் 23 வரை) “அப்பொழுது நகோமி தன் மருமகளாகிய ரூத்தைப் பார்த்து: என் மகளே, வேறொரு வயலிலே மனுஷர் உன்னை எதிர்க்காதபடிக்கு நீ அவன் வேலைக்காரிகளோடே (பணிப்பெண்கள்) போகிறது நல்லது என்றாள்” (வசனம் 22). “நீ அவன் வேலைக்காரிகளோடே (பணிப்பெண்கள்) போகிறது நல்லது” என்பதே நகோமி ரூத்துக்குக் கொடுத்த அறிவுரை. போவாஸ் அவளை முதலில் சந்தித்தபோது, “பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என்…

June

நெருங்கிய சுதந்தரவாளி

2023 யூன் 17 (வேத பகுதி: ரூத் 2,20 முதல் 21 வரை) “பின்னும் நகோமி அவளைப் பார்த்து: அந்த மனிதன் நமக்கு நெருங்கின உறவின்முறையானும், நம்மை ஆதரிக்கிற சுதந்தரவாளிகளில் ஒருவனுமாயிருக்கிறான் என்றாள்” (வசனம் 20). உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற கர்த்தராலே அவன் (போவாஸ்) ஆசீர்வதிக்கப்படுவானாக (வசனம் 20) என்று நகோமி வாழ்த்தினாள். போவாஸ் ரூத்தின்மீது காட்டின அற்புதமான தயவையும், அதனால் அடைந்த நன்மையையும் கண்ட நகோமி அந்த நன்மையைச் செய்த  மனிதனை வாழ்த்தினாள். நம்முடைய கர்த்தர்…

June

மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொள்ளுதல்

2023 யூன் 16 (வேத பகுதி: ரூத் 2,19) “நான் இன்று வேலை செய்த வயல்காரன் பேர் போவாஸ் என்றாள்” (வசனம்  19). நகோமி ரூத்தைப் பார்த்து, இன்று எங்கே கதிர் பொறுக்கினாய்?, எவ்விடத்தில் வேலை செய்தாய்? என்று வினவினாள். அதற்கு ரூத், “நான் இன்று வேலை செய்த வயல்காரன் பேர் போவாஸ் என்றாள்” (வசனம்  19). ரூத் தன்னுடைய எஜமானன் யார் என்றும், தனக்கு உதவி செய்தவன் யார் என்றும் நன்றாக அறிந்திருந்தாள். இதே கேள்விகளை…

June

நற்செய்தியைப் பகிர்ந்துகொள்ளுதல்

2023 யூன் 15 (வேத பகுதி: ரூத் 2,17 முதல் 18 வரை) “அப்படியே அவள் சாயங்காலம் மட்டும் வயலிலே கதிர் பொறுக்கினாள்; பொறுக்கினதை அவள் தட்டித் தீர்த்தபோது, அது ஏறக்குறைய ஒரு மரக்கால் வாற்கோதுமை கண்டது” (வசனம்  17). ரூத் வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்தாள். சாயங்காலம் மட்டும் இடைவிடாமல் கதிர்பொறுக்கினாள். முடிவில் அதைப் புடைத்து, சுத்தம்பண்ணினாள். அது ஒரு மரக்கால் வாற்கோதுமை அளவு இருந்தது. சுறுசுறுப்புள்ளவனின் கை செல்வத்தை உண்டாக்கும் என்பதற்கு ரூத் ஒரு…