நன்றியும் துதியும்
2023 யூலை 14 (வேத பகுதி: 1 சாமுவேல் 2,1) “அப்பொழுது அன்னாள் ஜெபம்பண்ணி: என் இருதயம் கர்த்தருக்குள் களிகூருகிறது; … உம்முடைய இரட்சிப்பினாலே சந்தோஷப்படுகிறேன்” (வசனம் 1). கர்த்தரிடம் நாம் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்காக நாம் கர்த்தரைத் ஸ்தோத்தரிப்போம், அவரைத் துதிப்போம். இது நல்ல காரியம்தான். ஆனால் அன்னாளோ தன்னுடைய மகனை கர்த்தருடைய சேவைக்காகக் ஒப்புக்கொடுத்துவிட்டுத் துதிக்கிறாள். ஒப்புக்கொடுத்தலின் இன்பமே புத்தியுள்ள ஆராதனையாக மாறுகிறது. முதலாவது ஒப்புவித்தலின் பலி, பின்னர் துதித்தலின் கீதம் (காண்க: 2 நாளாகமம்…