தவறான அணுகுமுறை
2023 ஓகஸ்ட் 3 (வேத பகுதி: 1 சாமுவேல் 4,4 முதல் 11 வரை) அப்படியே கேருபீன்களின் மத்தியிலே வாசமாயிருக்கிற சேனைகளின் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியை எடுத்துவர, ஜனங்கள் சீலோவுக்குச் சொல்லியனுப்பினார்கள். ( 1 சாமுவேல் 4,4 ) ஆசரிப்புக் கூடாரம் ஒரு உன்னத நோக்கத்திற்காக ஏற்படுத்தப்பட்டது. இஸ்ரவேல் மக்கள் நடுவே கர்த்தர் வாசம்பண்ணும்படியாகவும், அவர்கள் அவரை எளிதில் சந்திக்கும்படியாகவும் ஏற்படுத்தப்பட்டது. மேலும் மக்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டு தேவனோடு ஒப்புரவாகும் வழியாக விளங்கியது. காலப்போக்கில் அதின்…