தாழ்மையின் சிகரம்
2023 ஓகஸ்ட் 23 (வேத பகுதி: 1 சாமுவேல் 9,18 முதல் 27 வரை) “மூன்று நாளைக்கு முன்னே காணாமற்போன கழுதைகளைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்; அவைகள் அகப்பட்டது” (வசனம் 20). சவுல் சாமுவேலைத் தேடிப்போனான், சாமுவேலோ சவுலின் வரவுக்காகக் காத்துக் கொண்டிருந்தான். சவுல் இதைக் கண்டு ஆச்சரியப்பட்டிருக்க வேண்டும். இதுவரை பார்த்திராத ஒரு தீர்க்கதரிசியைத் தேடிச் சென்றான், யார் அந்தத் தீர்க்கதரிசியோ அந்த தீர்க்கதரிசியிடமே அவருடைய வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டான். அதுமட்டுமின்றி, தன்னுடைய காணாமற்போன கழுதைகளைக்…