September

இணைந்து பயணித்தல்

2023 செப்டம்பர் 22 (வேத பகுதி: 1 சாமுவேல் 14,7) “அப்பொழுது அவன் ஆயுததாரி அவனைப் பார்த்து: உம்முடைய இருதயத்தில் இருக்கிறபடியெல்லாம் செய்யும்; … நானும் உம்மோடேகூட வருகிறேன் என்றான்” (வசனம் 7). தேவனுடைய மக்களாகிய நாம் எப்பொழுதெல்லாம் நமக்கு எதிராக பலமடங்கு எதிரிகளும், எதிர்ப்புகளும் இருப்பதாக உணருகிறோமோ அப்பொழுதெல்லாம் இந்த யோனத்தான் என்னும் இளைஞனின் உறுதியையும், நம்பிக்கையும் நினைவுகூருவோம். எல்லாரும் ஒன்று சேர்ந்து இருந்தாலும், தனித்து நிற்பதன் வாயிலாக நமக்கு ஊக்கமளிக்கிறான் இந்த யோனத்தான். ஒரு…

September

விசுவாசத்தின் பலன்

2023 செப்டம்பர் 21 (வேத பகுதி: 1 சாமுவேல் 14,6) “அநேகம்பேரைக் கொண்டாகிலும், கொஞ்சம் பேரைக் கொண்டாகிலும், ரட்சிக்கக் கர்த்தருக்குத் தடையில்லை என்றான்” (வசனம் 6). இடுக்கமான வாசல் வழியாய்ச் செல்வது கடினமானதுதான். கிறிஸ்தவம் என்பது நாம் நினைத்தபடி வாழ்கிற ஒரு வாழ்க்கை அல்ல, அது கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் கொண்ட வாழ்க்கை ஆகும். இந்த உலகத்தில் வாழ்கிற எல்லாரைப் போலவும் கிறிஸ்தவர்களுக்கும் துன்பங்களும் பிரச்சினைகளும் ஏற்படவே செய்கின்றன. ஆயினும் நமக்கு ஒரு நம்பிக்கை இருக்கிறது. அது யோனத்தான்…

September

இடுக்கமான வாசல்

2023 செப்டம்பர் 20 (வேத பகுதி: 1 சாமுவேல் 14,4 முதல் 6 வரை) “யோனத்தான் பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போகப்பார்த்த வழிகளின் நடுவே, இந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும், அந்தப்பக்கம் ஒரு செங்குத்தான பாறையும் இருந்தது; ஒன்றுக்குப் போசேஸ் என்று பேர், மற்றொன்றுக்குச் சேனே என்று பேர்” (வசனம்  4). யோனத்தானும் அவனுடைய உதவியாளனும் பெலிஸ்தியர்களின் முகாமுக்கு நேராகச் செல்வோம் என்னும் முடிவை எடுத்தபோது, அது அவர்களுக்கு எளிதான ஒன்றாக இருக்கவில்லை. போசேஸ் மற்றும் சேனே என்னும்…

September

விசுவாசத்தின் கிரியைகள்

2023 செப்டம்பர் 19 (வேத பகுதி: 1 சாமுவேல் 14,1 முதல் 3 வரை) “ஒருநாள் சவுலின் குமாரனாகிய யோனத்தான் தன் ஆயுததாரியாகிய வாலிபனை நோக்கி: நமக்கு எதிராக அந்தப் பக்கத்தில் இருக்கிற பெலிஸ்தரின் தாணையத்திற்குப் போவோம் வா என்று சொன்னான்” (வசனம்  1). இந்த அதிகாரத்தின் முற்பகுதி மூன்று நபர்களை நமக்கு அறிமுகம் செய்கிறது. யோனத்தானும் அவனுடைய ஆயுததாரியும், சவுலும் அவனோடிருந்த அறுநூறு வீரர்களும், ஏபோத்தை அணிந்திருந்த ஆசாரியனாகிய அகியாவும் உடன்படிக்கைப் பெட்டியும் ஆகும். சவுலும்…

September

யாரைச் சார்ந்திருக்கிறோம்

2023 செப்டம்பர் 18 (வேத பகுதி: 1 சாமுவேல் 13,15 முதல்  23 வரை) “சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்” (வசனம் 15). “சாமுவேல் எழுந்திருந்து, கில்காலை விட்டு, பென்யமீன் நாட்டிலுள்ள கிபியாவுக்குப் போனான்; சவுல் தன்னோடேகூட இருக்கிற ஜனத்தைத் தொகைபார்க்கிறபோது, ஏறக்குறைய அறுநூறுபேர் இருந்தார்கள்” (வசனம் 15). சாமுவேல் கர்த்தருடைய வார்த்தையை அறிவித்தவுடன் சவுலிடம் இருந்து பதிலை எதிர்பார்த்திருப்பான். ஆனால் சவுலோ, வாய்திறக்காமல் மௌனமாக இருந்தான். அவன் எந்தவிதக் கருத்தையும்…

September

தேவனுக்கேற்ற இருதயம்

2023 செப்டம்பர் 17 (வேதபகுதி: 1 சாமுவேல் 13,14) “கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனுஷனைத் தமக்குத் தேடி, அவனைக் கர்த்தர் தம்முடைய ஜனங்கள்மேல் தலைவனாயிருக்கக் கட்டளையிட்டார்” (வசனம் 14). சவுலுக்குப் பதிலாக, கர்த்தர் தம்முடைய இருதயத்திற்கு ஏற்ற ஒரு மனிதனை அடுத்த ராஜாவாக இருக்கும்படி தேடி, அவனை அபிஷேகம் செய்யும்படி சாமுவேலுக்குக் கட்டளையிட்டார். சவுல் கர்த்தரால் புறக்கணிக்கப்பட்டான். ஆயினும் உடனடியாக அல்ல, இந்த நிகழ்ச்சிக்குப்  பின்னரும் ஏறத்தாழ முப்பத்தியெட்டு ஆண்டுகள் அவன் அரசாட்சி செய்யும்படி…

September

பிழையுணர்தல் நலம்

2023 செப்டம்பர் 16 (வேத பகுதி: 1 சாமுவேல் 13,13) “சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர்; உம்முடைய தேவனாகிய கர்த்தர் உமக்கு விதித்த கட்டளையைக் கைக்கொள்ளாமற்போனீர்” (வசனம் 13). சாமுவேல் சவுலைப் பார்த்து: புத்தியீனமாய்ச் செய்தீர் (வசனம் 13) என்னும் கடினமான வார்த்தையைப் பயன்படுத்தினான். சாமுவேல் வருவதற்கு முன் பலி செலுத்தியது இத்தனை கண்டனத்துக்குரிய செயலா? ஆசாரியன் செலுத்த வேண்டிய பலியை அரசன் செய்வது இத்தனை மதியீனமான காரியமா? ஆம், நியாயப்பிரமாண காலத்தில் இவ்வாறு செய்வது…

September

சாக்குப்போக்குகள்

2023 செப்டம்பர் 15 (வேத பகுதி: 1 சாமுவேல் 13,10 முதல் 12 வரை) “சவுல்: ஜனங்கள் என்னைவிட்டுச் சிதறிப்போகிறதையும், குறித்த நாட்களின் திட்டத்திலே நீர் வராததையும், பெலிஸ்தர் மிக்மாசிலே கூடிவந்திருக்கிறதையும், நான் கண்டபடியினாலே, … துணிந்து, சர்வாங்க தகனபலியைச் செலுத்தினேன் என்றான்” (வசனம் 11 முதல் 12). அரசனாகிய சவுல் சர்வாங்க பலியைச் செலுத்தி முடித்த சிறிது நேரத்திலேயே தீர்க்கதரிசி சாமுவேல் வந்துவிட்டான். கர்த்தர்மேல் பாரத்தை வைத்துவிட்டு, இன்னும் சிறிது நேரம் சவுல் சாமுவேலுக்காகக் காத்திருந்திருப்பானேயாகில்,…

September

பொறுமையிழத்தல்

2023 செப்டம்பர் 14 (வேத பகுதி: 1 சாமுவேல் 13,5 முதல் 9 வரை) “அப்பொழுது இஸ்ரவேலர் தங்களுக்கு உண்டான இக்கட்டைக் கண்டபோது, ஜனங்கள் தங்களுக்கு உண்டான நெருக்கத்தினாலே கெபிகளிலும், முட்காடுகளிலும், கன்மலைகளிலும், துருக்கங்களிலும், குகைகளிலும் ஒளித்துக்கொண்டார்கள்” (வசனம் 6). பிற நாடுகளைப் போல எங்களுக்கும் ஓர் அரசன் இருந்தால், அவன் நேரிடுகிற எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பான் என்று இஸ்ரவேல் மக்கள் நம்பினார்கள். இப்பொழுதும் ராஜாவும் இருக்கிறார், பிரச்சினையும் இருக்கிறது. ஆனால் நடப்பது என்ன? பெலிஸ்தியப்…

September

தோல்வியின் தொடக்கம்

2023 செப்டம்பர் 13 (வேத பகுதி: 1 சாமுவேல் 13,1 முதல் 4 வரை ) “சவுல் ராஜ்யபாரம்பண்ணி, ஒரு வருஷமாயிற்று; அவன் இஸ்ரவேலை இரண்டாம் வருஷம் அரசாண்டபோது, இஸ்ரவேலில் மூவாயிரம்பேரைத் தனக்குத் தெரிந்துகொண்டான்” (வசனம் 1 முதல் 2). சவுல் பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அம்மோனியர்களுடனான போரில் மாபெரும் வெற்றி பெற்றான் (அதிகாரம் 11). இதனால் மக்கள் அவனை ஒரு வல்லமையான போர் வீரனாகக் கண்டார்கள். அவனுடைய பராக்கிரமத்தைப் புகழ்ந்தார்கள். அந்த நாளில் அவன் தாழ்மையோடு…