மார்ச் 13
மார்ச் 13 அன்று சாயங்காலத்தில் என் மனைவி செத்துப்போனாள். எனக்குக் கட்டளையிட்டபடியே விடியற்காலத்தில் செய்தேன். (எசேக்.24:18) தேவன் நமது உள்ளத்தில் ஊற்றியிருப்பதுதான் மனித அன்பு. கணவன், மனைவி இடையே உள்ள அன்பு பெற்றோர் பிள்ளைகளிடம் காட்டும் பாசம், நண்பர்களிடையே உள்ள நட்பு. இவை யாவும் வாழ்விற்குத் தேவைதான். ஆனால் வேதம் நாம் தேவனிடம் செலுத்தும் அன்பையே இவற்றிற்கெல்லாம் சிறந்தது எனக் கூறுகிறது. உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு…