March

மார்ச் 9

மார்ச் 9

….. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார். உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடார் (1.கொரி.10:13).

வேதப் புத்தகத்திலுள்ள தெரிந்தெடுக்கப்பட்டவாக்குத்தத்தங்களில் புயலில் சிக்கித் தவித்து தேலர்வி மேற்கொண்டு விடுவோமோ எனக்கலங்கித் தவிக்காதவர்கள் யாரோனும் உண்டா? இந்த அனுபவத்திற்குப் பின்பு விடுதலை பெற்றுதேவனைத் துதிப்போம். அவரது வல்லமையைக் குறித்தும், கிருபையைக் குறித்தும்சந்தேகப்படாமல் இருக்கும்போது ஆழ்ந்த சோதனைகள் வரும். இந்த முறை அவர் தமது கிரியையைவிலக்கிக்கொண்டாரோ அல்லது நாம் அவரது கிருபைக்குப் பாத்திரரல்லவோ என்று பலவாறுசந்தேகப்படுவது இயல்பு.

இப்படிப்பட்ட நிலையில்தான் நாம் இந்தவாக்குத்தத்தத்தின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருக்கவேண்டும். சோதனை வேளைகளில் அவர்உண்மையுள்ளவராயிருக்கிறார். அதிலிருந்து அவர் அவருக்குச் சித்தமான வேளையிலும், வழியிலும்நம்மை விடுவிக்கிறார். நெருக்கம் அதிகரிக்கையில் நமக்குப் பலமில்லை என உணருகிறோம்.அப்பொழுதுதான் அவா நமக்கு எந்தச் சூழ்நிலையிலும் போதுமானவராயிருப்பதை உணருகிறோம்.

யோசேப்பைப்போல நாம் எப்பொழுது ஓடவேண்டும்என்று போதிப்பதற்கு அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். எந்த நிலையில் நாம் பிசாசைஎதிர்த்து நிற்கவேண்டும் என்றும், எப்பொழுதும் அவனைவிட்டு ஓடவதென்றும், எந்நிலையில்எதிர்த்துப் போராடவேண்டுமென்றும், நல்ல போராட்டத்தைப் போராடுவது எவ்வாறு என்றெல்லாம்அவர் போதிக்க உண்மையுள்ளவராயிருக்கிறார். அவர் நம்மை பட்டயத்திற்குத் தப்புவிக்கவோஅல்லது அதைத் தாங்கிக்கொள்ள கிருபை அளிக்கவோ, பலவீனத்தில் பலம் கொடுக்கவோ,பலவீனத்தில் என் பலன் பூரணமாக விளங்கும் (2.கொரி.12:9) என்று தேற்றவோ அவர்உண்மையுள்ளவராயிருக்கிறார். சோதனை வந்து வேதனைப்படுத்தும்போது, தப்புவிப்பதற்கு வழியேஇல்லையே எனக் கலங்கும்போது, அவர் உனக்கு உண்மையுள்ளவராயிருந்து செய்த உதவிகளைநினைத்துப் பார்.