March

மார்ச் 10

மார்ச் 10

சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். அவர்கள் தேவனுடைய புத்திரர் எனப்படுவார்கள் (மத்.5:9).

தேவனிடத்தில் சமாதானம் பெற்றவர்களாகிய நாம்,தேவனோடு இணைக்கப்பட்ட நாம், ஆண்டவர் இயேசுவின் கட்டளைப்படி சமாதானம்பண்ணுகிறவர்களாகவும் இருக்க வேண்டும். சமாதானம் பண்ணுகிறவர்களாக இருப்பதற்கு அநேக கஷ்டங்களைஅனுபவிக்க வேண்டும். முயற்சி எடுக்கவேண்டும். இதற்கு மனமாற்றம் பெற்ற வாழ்வு, திடமானநல்ல பண்பு, சுயவெறுப்பு இம்மூன்றும் தேவை. சமாதானம் என்பது எளிதானதல்ல. வேறுபாடுஅக்கறையின்மை, கவலையீனம் இவற்றால் இதை அடையவே முடியாது. சமாதானத்தைப் பெறுவதற்கு,மலையின்மீது ஏறுவதற்கு ஒப்பாக பாடுபடவேண்டும். ஏனெனில், அவற்றில் ஆபத்தும், கஷ்டங்களும்உண்டு.

இதோ, சகோதரர் ஒருமித்து வாசம் பண்ணுகிறதுஎத்தனை நன்மையும், எத்தனை இன்பமுமானது! (சங்.133:1). வேதம், உங்களுக்குள்ளேசமாதானமாயிருங்கள் (2.கொரி.13:11) எனவும் கூறுகிறது. அதே வேதம் நாம் எப்பொழுதுசமாதானமாயிருக்க முடியாது என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளது. கூடுமானால் உங்களாலானமட்டும்எல்லா மனுஷரோடும் சமாதானமாயிருங்கள் (ரோ.12:18) எனப் பவுல் கூறியுள்ளார். அதாவதுசிலருடன் நீண்டகாலம் சமாதானமாக வாழ இயலாது எனத் தெளிவாகத் தெரிகிறது. இருப்பினும்நாம் அதற்குரிய முயற்சியைக் கைவிடக்கூடாது. சங்கீதம் 34:14ல் சமாதானத்தைத் தேடி அதைத்தொடர்ந்துகொள் எனக் காண்கிறோம். பவுலும் இதையே வலியுறுத்தியுள்ளார். சமாதானத்தைஅடையும்படி நாடு. யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்.பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே (2.தீமோ.2:22,எபி.12:12-14).

சமாதானம் பண்ணுகிறவர்கள் காற்றில் அடிபட்டுஅலையமாட்டார்கள். நாம் நேர்மையாக நடந்து பிறருடைய குறைகளை சாதுரியமாகக் கடிந்துகொண்டால் நாமும் சமாதானம்பண்ணுகிறவர்களாக இருப்போம்.