May

நினைவுகூரும் இடம்

2023 மே 11  (வேத பகுதி: நியாயாதிபதிகள் 15,18 முதல் 20 வரை) “அவன் மிகவும் தாகமடைந்து, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு …” (வசனம் 18). சிம்சோன் தனியொருவனாய் பெலிஸ்தியர்களோடு போரிட்டு ஆயிரம் பேரைக் கொன்றான். போரினால் களைத்துப்போனான், இப்பொழுது அவனுக்கு களைப்பு நீங்க தண்ணீர் தேவை. யார் அவனுடைய தாகத்தைத் தீர்க்க முடியும்? அவனைக் கட்டி பெலிஸ்தியர்களிடம் கொண்டுவந்த யூதா கோத்திரத்தார் உதவுவார்களா? வாய்ப்பே இல்லை! எதிரிகளாகிய பெலிஸ்தியர்கள் உதவி செய்வார்களா? அதற்கும் சற்றேனும் வாய்ப்பு…

May

சரியானதை செய்ய நாடுவோம்

2023 மே 10 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 15,15 முதல் 17 வரை) “உடனே அவன் ஒரு கழுதையின் பச்சைத் தாடையெழும்பைக் கண்டு, தன் கையை நீட்டி அதை எடுத்து, அதினாலே ஆயிரம் பேரைக் கொன்றுபோட்டான்” (வசனம் 15). சிம்சோன் நசரேய விரதம் பூண்டவன். கர்த்தர் அவனை ஒரு சிறப்பான நோக்கத்துக்காகத் தெரிந்துகொண்டார். அவனுடைய வளர்ச்சியில் கர்த்தர் அக்கறை காட்டினார். அவன் சோராவுக்கும் எஸ்தாவோனுக்கும் நடுவிலுள்ள தாணின் பாளையத்தில் இருக்கையில் கர்த்தருடைய ஆவியானவர் ஏவத் தொடங்கினார் என்று…

May

ஆவிக்குரிய விடுதலை

2023 மே 9 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 15,14) “அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் புயங்களில் கட்டியிருந்த கயிறுகள் நெருப்புப்பட்ட நூல்போலாகி, அவன் கட்டுகள் அவன் கைகளை விட்டு அறுந்துபோயிற்று” (வசனம் 14). யூதாவின் மனிதர்கள் சிம்சோனை புதிய கயிறுகளினால் கட்டி, அவனை பெலிஸ்தியர்களிடம் லேகி என்ற இடம் வரைக்கும் கொண்டு சென்றார்கள். அவன் கட்டப்பட்ட நிலையில் வருகிறதைக் கண்ட பெலிஸ்தியர்கள் ஆரவாரம் பண்ணினார்கள். அவனுடைய சொந்த மக்களாலேயே வெற்றி நமக்குச் சாதகமாக…

May

ஆவிக்குரிய இருள்

2023 மே 8 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 15:9 முதல் 13 வரை) “பெலிஸ்தியர் நம்மை ஆளுகிறார்கள் என்று தெரியாதா? பின்னை ஏன் எங்களுக்கு இப்படிச் செய்தாய்?” (வசனம் 10). பெலிஸ்தியர்களின் மீதான பெரிய தாக்குதலுக்குப் பிறகு, சிம்சோன் ஏத்தாம் ஊரிலுள்ள கன்மலையின் பிளவிலே போய் தங்கினான் (வசனம் 14). இது பெலிஸ்தியர்களின் அடுத்த கட்ட நடவடிக்கையை எதிர்பார்த்துக் காத்திருத்தலே தவிர பயத்தின் வெளிப்பாட்டினால் அல்ல. அவன் அங்கே தங்கியிருந்தது யூதாவின் எல்லைக்குட்பட்ட பகுதி, அது அங்குள்ள…

May

மெய்யான ஒப்புரவாகுதல்

2023 மே 7 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 15,1 முதல் 8 வரை) “சில நாள் சென்றபின்பு, சிம்சோன் கோதுமை அறுக்கிற நாட்களில் ஒரு வெள்ளாட்டுக்குட்டியை எடுத்துக்கொண்டு, தன் பெண்சாதியைக் காணப்போய்…” (வசனம் 1). சிம்சோன் கோபம் மூண்டவனாக தன் தந்தையின் வீட்டுக்குத் திரும்பிவிட்டான் என்று முந்தின அதிகாரம் முடிகிறது (நியாயாதிபதிகள் 14,19). சிம்சோன் தனக்கு மனைவியாக வரப்போகிறவளிடத்தில் உண்மையை எதிர்பார்த்தான். அவளோ தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, தன் கணவனைக் காட்டிக்கொடுத்தாள். தன் கணவன் சொன்ன ஒரு…

May

கிருபையின் ஆவியானவர்

2023 மே 6 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 14,19 முதல் 20 வரை) “கர்த்தருடைய ஆவி அவன்மேல் இறங்கினதினால், அவன் அஸ்கலோனுக்குப்போய், அவ்வூராரில் முப்பதுபேரைக் கொன்று…” (வசனம் 19). சிம்சோனை இந்த உலகத்தில் தோன்றச் செய்தவர் கர்த்தர். அவனுக்கென்று சில பிரத்யேகக் குணங்களையும் கட்டுப்பாடுகளையும் அவர் கொடுத்திருந்தார். ஆனால் சிம்சோன் தன்னுடைய அழைப்பையும் மேன்மையையும் சரிவரப் புரிந்துகொள்ளாமற்போனான். தேவன் தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படி கிருபையைக் கூடுதலாக அவனுக்கு வழங்கினார். தொடர்ந்து அவனுக்காக வாய்ப்புகளை வழங்கிக் கொடுத்தார். “கர்த்தருடைய…

May

தேவனின் தயவுள்ள சித்தம்

2023 மே 5 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 14,10 முதல் 18 வரை) “அவன் தகப்பன் அந்தப் பெண் இருக்கும் இடத்தில் போனபோது, சிம்சோன் அங்கே விருந்து செய்தான்; வாலிபர் அப்படிச் செய்வது வழக்கம்” (வசனம் 10). சிம்சோனின் தந்தை என்ற முறையில் திருமணத்துக்கான ஏற்பாடுகளை மனோவா செய்தார். பெண்ணின் வீட்டில் விருந்து நடைபெற்றது. இந்த விருந்து நிகழ்ச்சியின் போது சிம்சோனின் தாய் அங்கே இருந்ததாகக் குறிப்பு இல்லை. விசுவாச வாலிபர்கள் தங்களுடைய நம்பிக்கைக்கு ஒத்துவராத வேறு…

May

தீட்டுப்படாமல் ஆசீர்வாதங்களை அனுபவித்தல்

2023 மே 4 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 14,8 முதல் 9 வரை) “சிலநாளைக்குப்பின்பு, அவன் அவளை விவாகம்பண்ணத் திரும்பிவந்து, சிங்கத்தின் உடலைப் பார்க்கிறதற்கு வழிவிலகிப் போனான்; இதோ, சிங்கத்தின் உடலுக்குள்ளே தேனீக்கூட்டமும் தேனும் இருந்தது” (வசனம் 8). சிம்சோன் அவளை விவாகம் பண்ணுவதில் உறுதியாயிருந்தான். அவனுடைய பெற்றோரும்கூட இதற்குச் சம்மதித்துவிட்டனர். இப்பொழுது மீண்டும் திம்னாத்துக்கு பயணம். போகிற வழியில் அந்தத் திராட்சத் தோட்டத்தின் பழைய நினைவுகள் வந்தன. நசரேய விரதங்காக்கிற ஒருவன் திராட்சை தொடர்பான எதையும்…

May

பொல்லாங்கனை எதிர்கொள்ளுதல்

2023 மே 3 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 14:5 முதல் 7 வரை) “அப்பொழுது கர்த்தருடைய ஆவி அவன்மேல் பலமாய் இறங்கினதினால், அவன் தன் கையில் ஒன்றும் இல்லாதிருந்தும், அதை ஒரு ஆட்டுக்குட்டியைக் கிழித்துப்போடுகிறதுபோல கிழித்துப்போட்டான்” (வசனம் 6). நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்னர் நம்மை அடிமையாக்கி வைத்திருந்த மூன்று எதிரிகளைப் பற்றி வேதம் கூறுகிறது (காண்க: எபேசியர் 2,2 முதல் 3; யாக்கோபு 3,15). ஒருவன் விசுவாசியாக ஆனபின்னரும் இந்த மூன்று எதிரிகளையும் அவன் தொடர்ந்து எதிர்கொள்கிறான்.…

May

மனித தவறுகளின்மீது தேவ இறையாண்மை

2023 மே 2 (வேத பகுதி: நியாயாதிபதிகள் 14,4) “அவன் பெலிஸ்தரிடத்தில் குற்றம் பிடிக்க முகாந்தரம் உண்டாகும்படி, இது கர்த்தரின் செயல் என்று அவன் தாயும் தகப்பனும் அறியாதிருந்தார்கள்” (வசனம் 4). சிம்சோன் திம்னாத்துக்குச் சென்று ஒரு பெலிஸ்தியப் பெண்ணைக் கண்டு, அவளை மணமுடிக்க வேண்டும் என விரும்பியது நிச்சயமாகவே ஒரு தவறான செயலே. தேவன் தம்முடைய காரியத்தில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட வகையில் செயல்படமாட்டார். “அவர்களோடே சம்பந்தம் கலவாயாக; உன் குமாரத்திகளை அவர்கள் குமாரருக்குக் கொடாமலும், அவர்கள்…